ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் எஸ்யூவியின் விசேஷமான அம்சங்கள் கொண்ட பிளாக் பேட்ஜ் எடிசன் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

பெரும் பணக்காரர்களுக்கு கருப்பு வண்ணக் கார்கள் மீது தீராத காதல் உண்டு. பலரும் கருப்பு வண்ண கார்களை தேர்ந்தெடுத்து வாங்குவதும் வழக்கமாகி இருக்கிறது. இதுபோன்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில், கல்லினன் எஸ்யூவியில் பிளாக் பேட்ஜ் என்ற ஸ்பெஷல் மாடலை ரோல்ஸ்ராய்ஸ் அண்மையில் வெளியிட்டது.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்திய இந்த மாடலை இந்தியாவிலும் இன்று அறிமுகம் செய்துள்ளது ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம். இந்த காருக்கு ரூ.8.20 கோடி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. காரின் பெரும்பகுதி கருப்பு வண்ணத்தில் இருக்கும்படியாக பல்வேறு விசேஷ கஸ்டமைஸ் பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலில் முன்புற க்ரோம் க்ரில் அமைப்பு, பில்லர்கள், 22 அங்குல அலாய் வீல்கள், பின்புற பூட்லிட் கைப்பிடி என அனைத்துமே காரின் கருப்பு வண்ணத்துடன் இயைந்துபோகும் வகையில் பெயிண்ட் செய்யப்பட்டு இருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

இந்த காரின் அலாய் வீல்கள் தனித்துவமான வடிவமைப்பை பெற்றிருப்பதுடன், சிவப்பு வண்ணத்திலான பிரேக் காலிபர்கள் இந்த கருப்பு காருக்கு அட்டாகசமான தோற்றத்தை வழங்குகிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

வெளிப்புறத்தை போன்றே உட்புறத்திலும் கருப்பு வண்ணம் ஆக்கிரமித்துள்ளது. ஒரு சில இடங்களை தவிர்த்து, அனைத்துமே கருப்பு வண்ணத்திலும், அதற்கு ஈடுகொடுக்கும் சிவப்பு வண்ண ஆக்சஸெரீகளும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் கருப்பு - சிவப்பு காம்பினேஷன் அசத்தலாக உள்ளது. இதற்கு ஈடுகொடுக்கும் வகையில், பிரிமீயம் ஆக்சஸெரீகளும், அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

இந்த காரில் நட்சத்திரங்கள் போன்று தோற்றமளிக்கும் சிறிய விளக்குகளுடன் கூடிய உட்கூரை அமைப்பு, பின் இருக்கை பயணிகளுக்காக 12 அங்குல டிவி திரைகள், 18 ஸ்பீக்கர்களுடன் ஆடியோ சிஸ்டம், நைட் விஷன் சிஸ்டம், 4 கேமராக்களுடன் கண்காணிப்பு வசதி, ஆக்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், வைஃபை ஹாட்ஸ்பாட் இணைய வசதி, ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே என இந்த காரில் இடம்பெற்றிருக்கும் வசதிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

பாதசாரிகள் மற்றும் விலங்குகள் சாலைகளை கடப்பது குறித்த எச்சரிக்கை, மோதலை தவிர்க்கும் தொழில்நுட்பம், சாலை சந்திப்புகள் குறித்த எச்சரிக்கை, நெடுஞ்சாலையில் தடம் மாறுதலை எச்சரிக்கும் வசதிகள் என பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சமில்லை.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

புதிய ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் மாடலில் இரட்டை டர்போ சார்ஜர்கள் துணையுடன் இயங்கும் 6.75 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பிரம்மாண்ட எஸ்யூவிக்கு உறுதுணையாக இருக்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 592 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வாரி வழங்கும்.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

இந்த எஞ்சினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண கல்லினன் மாடலைவிட இந்த எஞ்சின் 28 பிஎச்பி பவரையும், 50 என்எம் டார்க் திறனையும் கூடுதலாக வழங்கும் திறனை பெற்று வந்துள்ளது. இதுவும் கூடுதல் மதிப்பை வழங்கும்.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

ஏற்கனவே ரோல்ஸ்ராய்ஸ் டான், ரெயீத் மற்றும் கோஸ்ட் கார்களில் பிளாக் பேட்ஜ் எடிசன் வெளியிடப்பட்டது. அந்த வரிசையில், இந்த புதிய கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசனும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும்.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் என்றாலே ஆடம்பரத்தின் உச்சமாகவும், அடையாளத்தின் சின்னமாகவும் விளங்குகின்றன. மேலும், வாடிக்கையாளர் விருப்பத்தின்பேரில் தனித்துவமான அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் Bespoke கார்கள் என்ற பெருமையையும் இந்த கார்கள் பெற்றிருக்கின்றன.

ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசன் இந்தியாவில் அறிமுகம்... விலைய கேட்டு மயக்கம் போட்றாதீங்க?

அதாவது, ஒவ்வொரு காருமே வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு இணங்க பல்வேறு தனித்துவமான அம்சங்களை பெற்றிருக்கும். ஆனால், ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனமே, சொந்தமாக ஒரு கஸ்டமைஸ் மாடலை வெளியிட்டால் அது எப்படி இருக்கும். நிச்சயமாக அது வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் அம்சங்களை கொண்டிருக்கும் அல்லவா? அந்த வகையில், ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டு இருக்கும் புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலாக கல்லினன் பிளாக் பேட்ஜ் எடிசனும் இந்திய பெரும் பணக்காரர்களை சுண்டி இழுக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

English summary
Rolls-Royce Cullinan Black Badge Launched In India. Read in Tamil.
Story first published: Saturday, January 25, 2020, 14:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X