இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் அதி லக்சூரி கார்களில் ஒன்றான கல்லினன் ஆஃப்-ரோடு பயண காராக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

உலக புகழ்வாய்ந்த சொகுசு கார் உற்பத்தி நிறுவனங்களில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தின் மிகுந்த பிரபலமான சொகுசு கார் மாடல்களில் ஒன்றாக பேந்தம் மற்றும் கோஸ்ட் கார் இருக்கின்றது. இவ்விரு கார்களே அந்த நிறுவனத்தின் அல்ட்ரா லக்சூரி கார்களாக இருக்கின்றது. இதேபோன்று இந்த நிறுவனத்தின் சிறப்பான விற்பனையைப் பெறும் காராக கல்லினன் உள்ளது.

இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

இந்த கார் ஓர் லக்சூரி கார் மட்டுமே ஆகும். ஆனால், இதனை ஓர் இளைஞர் ஆஃப்-ரோடர் காராக பயன்படுத்தியிருக்கின்றார். என்ன சொல்றீங்க, இந்த கார் ஆஃப்-ரோடு பயணத்திலா?, இதுபோன்று பல்வேறு கேள்விகள் உங்களுக்கு எழும்பலாம். இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் வகையில் ஓர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

யுகார் எனும் யுட்யூப் தளமே இந்த வீடியோ வெளியிட்டுள்ளது. அரபு நாட்டின் மணல் பாலை வனத்தில் எடுக்கப்பட்ட வீடியோவே தற்போது வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை பார்க்கையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் சொகுசு கார்தானா என்ற கேள்வியை எழுப்பும் வகையில் உள்ளது.

இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

இந்த சொகுசு கார் ஒட்டுமொத்தமாக 2.6 டன் எடைக் கொண்ட காராகும். இதில், 6¾ லிட்டர் அளவு கொண்ட வி12 எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 563 எச்பி பவரையும், 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த திறனைக் கொண்டே கல்லினன் காரே பாலை வனத்தை அசால்டாக கடந்து சாதனைப் படைத்திருக்கின்றது.

இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

இக்கார் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் கொண்டது. இந்த திறனும்கூட ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் பாலை வனத்தை அசால்டாக கடந்ததற்கு காரணமாக இருக்கின்றது. இத்துடன், காரை தயாரிக்க ரோல்ஸ் ராய்ஸ் பயன்படுத்தும் கட்டுமான முறையும் அனைத்து சாலைகளையும் சுலபமாக சமாளிக்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.

இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

இந்த திறன்களை மட்டுமில்லைங்க இந்த கார் பல்வேறு சொகுசு வசதிகளைத் தாங்கிய காராகவும் இருக்கின்றது. அதாவது, உல்லாச கப்பல்களுக்கு இணையான வசதியை இக்கார் பெற்றிருக்கின்றது. இக்காரில் பயணிக்கும்போது சிறு பள்ளமாக இருந்தாலும் சரி, பெரிய பள்ளமாக இருந்தாலும் சரி அப்படி ஒன்றின்மீது பயணித்ததாகவே தெரியாது.

இந்த காரில் இப்படியொரு திறமை இருக்கா..? வீடியோவ பாத்தீங்கனா மிரண்டு போய்ருவீங்க!!

மேலும், இக்காரில் பயணிக்கும்போது துளியளவும் வெளிப்புறத்தில் கேட்கப்படும் சத்தம் உட்புறத்தில் கேட்காது. இதுபோன்ற எக்கச்சக்க சொகுசு வசதிகளை இக்கார் கொண்டிருக்கின்றது. எனவேதான் சொகுசு வசதியைத் தேடும் பெரும்பாலான கோடீஸ்வரர்களின் தேடலில் இக்கார் முதல் இடத்தைப் பிடிக்கின்றது.

இந்த கார் இந்தியாவில் ரூ. 6.75 கோடி மதிப்பில் விற்பனைக்கு கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த உச்சபட்ச விலைக்கு ஏற்ப பன்முக வசதிகளை இக்கார் பெற்றிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆஃப் ரோடர் கார்கள் செய்யக்கூடிய விஷயத்தை ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் செய்திருக்கின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Rolls-Royce Cullinan Plays Like Off Roader. Read In Tamil.
Story first published: Wednesday, November 25, 2020, 14:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X