எரிபொருள் வாகன தயாரிப்பை ஒரே அடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுடுவீங்க

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் விரைவில் அனைத்து எரிபொருள் வாகன தயாரிப்பையும் கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அதன் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்று உள் எரிப்பு இயந்திரம் (Internal Combustion Engines) கொண்ட வாகனங்களின் உற்பத்தியை முற்றிலுமாக கைவிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருளைக் கொண்டு இயங்கும் வாகனங்களையே உள் எரிப்பு இயந்திரம் கொண்ட வாகனங்கள் என அழைக்கப்படுகின்றது.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

இம்மாதிரியான வாகனங்களின் தயாரிப்பினையே பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் கை விட இருக்கின்றது. மேலும், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றமாக மின்சார வாகனங்களை மட்டுமே தயாரிக்க இருப்பதாக அது அறிவித்துள்ளது. உலகெங்கிலும் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த வரவேற்பை கருத்தில் கொண்டே முழுமையாக மின் வாகன தயாரிப்பில் மட்டும் ஈடுபட அது திட்டமிட்டுள்ளது.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

இந்தியா, ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளில் மக்களை மின்சார வாகனம் பக்கம் ஈர்க்கின்ற வகையில் மானியம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கணிசமான மக்கள் மின்சார வாகன பயன்பாட்டிற்கு மாறியிருக்கின்றனர். மேலும் மாறியும் வருகின்றனர்.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

தற்போது மின் வாகனங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருக்கின்ற காரணத்தினாலயே மக்கள் மின் வாகனங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, இந்தியா போன்ற குறிப்பிட்ட ஒரு சில நாடுகளில் மின் வாகனங்களின் விற்பனை இன்றளவும் குழந்தை பருவத்திலேயே காட்சியளிக்கின்றது. ஆனால் இந்த நிலை வெகுநாட்களுக்கு நீடிக்காது என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்று ஆகும்.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் பின் விளைவுகள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. இவை, பெரும் பராமரிப்பு செலவை மட்டுமின்றி பல்வேறு இன்னல்களையும் ஏற்படுத்தி வருகின்றன. எனவேதான் உலக நாடுகள் அனைத்தும் மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. இவை சுற்றுச் சூழலுக்கு நண்பனாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

மேலும், இதனைப் பராமரிப்பதும் மிக மிக சுலபம் மற்றும் செலவும் ரொம்ப கம்மி. ஆகையால், எதிர்காலத்தில் மின் வாகனங்களே இந்த உலகை ஆளுகை செய்யும் என்பதில் உலகின் ஒட்டுமொத்த வாகனத்துறையுமே அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் வகையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியின் பக்கம் திசை திரும்ப தொடங்கியிருக்கின்றது.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

அந்தவகையிலான ஓர் நடவடிக்கையிலேயே சொகுசு கார் தயாரிப்பு நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ் களமிறங்க இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பின்படி, ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் வருகின்ற 2040ம் ஆண்டிற்குள் அதன் அனைத்து தயாரிப்புகளையும் மின்சார வாகனமாக மாற்ற இருப்பது தெரியவந்துள்ளது.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

இதுகுறித்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் சிஇஓ டோர்ஸ்டன் முல்லர் ஓட்வோஸ் (Torsten Müller-Ӧtvӧs) ஃபினான்சியல் டைம்ஸ் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, மின் மயமாக்கப்படுதல் ரோல்ஸ் ராய்ஸுக்கு மிக கச்சிதமாக பொருந்துகின்றது. இது அமைதியானது, அதிக திறன் கொண்டது, கூடுதல் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. இவை அனைத்துமே ரோல்ஸ் ராய்ஸுடன் பொருந்துபவையாக இருக்கின்றன" என்றார்.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

இந்த கூற்றத்தைத் தொடர்ந்தே அந்நிறுவனத்தின் அதிகாரிகள் வட்டாரம் வாயிலாக, 2040ம் ஆண்டிற்குள் ரோல்ஸ் ராய்ஸ் ஒட்டுமொத்தமாக மின்சார வாகன தயாரிப்பில் களமிறங்க இருப்பது தெரியவந்துள்ளது. இந்த துறையில் நல்ல வரவேற்பு இருப்பதாக அந்நிறுவனம் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றது.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

தனது வாடிக்கையாளர்களுக்கும் இந்த நடவடிக்கையின் மூலம் பயன்களை வழங்க முடியும் என நம்புகின்றது. உலகின் முக்கிய வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் மின்வாகன தயாரிப்பில் களமிறங்கிவிட்டநிலையில், ரோல்ஸ் ராய்ஸ் தற்போதே உற்பத்தியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. இது சற்று கால தாமதமான முயற்சியாகும்.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

இந்த நிலையிலேயே சற்றும் தயக்கமின்றி மின் வாகன தொழில்நுட்பத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள அது தயாராகி வருகின்றது. தற்போது இந்நிறுவனம் 'பாந்தம்' அடிப்படையிலான '102இஎக்ஸ்' எனும் முன் மாதிரி மின்சார காரை உருவாக்கி வருகின்றது. இந்த மின்சார காருக்கு அதன் வாடிக்கையாளர்கள் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

பெட்ரோல்-டீசல் வாகன தயாரிப்பை ஒரேடியாக கைவிடும் பிரபல நிறுவனம்? எந்த நிறுவனம்னு தெரிஞ்சா மிரண்டுபோய்டுவீங்க!

ஆகையால், தசாப்தத்திற்குள் இக்கார் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்தே படிப் படியாக அதன் எரிபொருள் வாகன தயாரிப்பை ரோல்ஸ் ராய்ஸ் வெளியேற்ற இருக்கின்றது. ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை வரவேற்புடையதாக இருந்தாலும், அதன் வாடிக்கையாளர்கள் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Most Read Articles
English summary
Rolls Royce Planning To Ditch ICE Vehicles By 2040. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X