Just In
- 22 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
மார்ச் மாதம் இல்லையாம்.. மோகன்லாலின் அந்த மெகா பட்ஜெட் பட ரிலீஸ் மீண்டும் தள்ளி வைப்பு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- News
150 ஆடுகள், 300 கோழிகள், 2500 கிலோ பிரியாணி அரிசி.. கலகலக்கும் முனியாண்டி திருவிழா.. பின்னணி என்ன?
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விற்பனையில் புதிய உச்சம்... 116 வருடங்களில் இல்லாத அளவில் விற்பனையை எட்டிய ரோல்ஸ் ராய்ஸ்...
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கடந்த 116 வருடங்களில் இல்லாத விற்பனையை எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதிலும் புகழ்பெற்ற நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் காட்சியளிக்கின்றது. இந்த நிறுவனம், அறிமுகமாகி 116 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை இல்லாத அளவிலான விற்பனையை கடந்த 2019ம் ஆண்டில் எட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்தவகையில், உலகில் உள்ள 50 நாடுகளின் வழியாக 5,152 யூனிட் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் விற்பனைச் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.
இது கடந்த 116 ஆண்டுகளில் இல்லாத ஓர் அதிக விற்பனையாகும். இதேபோன்று, கடந்த 2018ம் ஆண்டு 25 சதவீத விற்பனை வளர்ச்சியை இந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் பிடித்திருந்தது. அப்போது, 4,107 யூனிட்டுகள் விற்பனைச் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.

இந்த வரலாற்று சாதனைகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி டார்ஸ்டன் முல்லர்-அட்வாஸ் (Torsten Müller-Ötvös) கூறியதாவது, "2019ம் ஆண்டில் 250 சதவீத வளர்ச்சியை பெற்றதற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் மிகச் சிறந்த விற்பனையாகும். இந்த விற்பனை வளர்ச்சியைக் கொண்டாடும் அதே தருணத்தில், நாங்கள் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு அளித்த வாக்குறுதியை எப்போதும் காக்க கடமைப்பட்டுள்ளோம்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "ரோல்ஸ் ராய்ஸின் இந்த அதிக விற்பனையில் எஸ்யூவி ரக கல்லினன் மாடலே அதிக பங்கினை வகிக்கின்றது. இந்த காருக்கு தற்போது வரையிலும் உலகளாவிய அளவில் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆகையால், இந்த புதிய சாதனை வரும் காலங்களில் நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது, எங்களின் தயாரிப்புகளுக்கு ஓர் சிறந்த சான்றாகும்" என தெரிவித்தார்.

முன்னதாக, ரோல்ஸ் ராய்ஸின் அதிகம் விற்பனையாகும் கார்களில் பாந்தம் கார்களே முதன்மை வகித்துக் கொண்டிருந்தது. ஆனால், அது தற்போது மாற்றமடைந்துள்ளது. அதிக சொகுசு வசதி மற்றும் கவர்ச்சியான தோற்றம் என ஏராளமான வசதிகள் காரணமாக மக்கள் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பக்கம் சாய்ந்துள்ளனர். இதன் காரணமாகவே, முந்தைய மாடல்களைக் காட்டிலும் இது தற்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

மிகவும் பழமை வாய்ந்த ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் இருந்து வெளிவரும் முதல் எஸ்யூவி ரக காராக கல்லினன் இருக்கின்றது. இந்த காரை பலர் சொந்தமாக்க போட்டி போட்டு கொண்டிருப்பதால், அதற்கான காத்திருப்பு காலம் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்த எஸ்யூவி ரக கார் தற்போது இந்திய மார்க்கெட்டில் ரூ. 6.95 கோடி என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கின்றது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஆன் ரோடு வருகையில் இதன் விலை இன்னும் அதிகரிக்கும்.

ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் எஸ்யூவி காரில் 6.75 லிட்டர், வி12 பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 563 பிஎஸ் பவர் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைப் பெற்றிருக்கின்றது.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் கார்கள் என்னதான் அதிக விற்பனை வளர்ச்சியைப் பெற்றாலும் அந்த கார் அனைவராலும் வங்க முடியாத அளவிலேயே இருக்கின்றது.
அதேசமயம், ஒரு சில கோடிஸ்வரர்களாலேயே இந்த காரை வாங்க முடியாத சூழலே நிலவுகின்றது. ஏனென்றால், ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருக்க வேண்டும் என்பதும் ஓர் ரூலாகும்.

முன்னதாக இதுகுறித்த பல்வேறு சர்ச்சையான சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.