ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

ரூ. 8 கோடி மதிப்பில் விற்பனையாகிக் கொண்டிருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் ஸ்கேல் மாடல் ரூ. 28 லட்சத்திற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அலங்கரிக்க மட்டும் பயன்படும் இந்த ஸ்கேல் மாடலுக்கு இவ்வளவு விலையா என உலக வாகனத்துறை அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

மது மற்றும் மாது இவற்றின்மீது எப்படி ஒரு சிலருக்கு அதிக மோகம் நிலவுகின்றதோ, அதேபோன்று குறிப்பிட்ட சிலர் வாகனங்களை அதிகம் விரும்பும் நபர்களாக இருந்து வருகின்றனர். இவர்களால் ஒரு சில வாகனங்களை விலை மற்றும் இந்தியாவில் விற்பனைக்கு வராதது போன்ற காரணங்களால் வாங்க முடியாத சூழல் ஏற்படும்.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

அம்மாதிரியான நேரத்தில் அந்த வாகனத்தின் மீதிருக்கும் அதிக மோகத்தை தீர்த்துக் கொள்வதற்காக அதன் ஸ்கேல் மாடலை வாங்கி, அவர்களின் அறையை அலங்கரித்துக் கொள்கின்றனர். இதை ஒரு சில வாகன ஆர்வலர்கள் தங்களின் பொழுதுபோக்கிற்காகவும் சேகரித்து வருகின்றனர்.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

ஸ்கேல் மாடல் என்பது சிறுவர்கள் விளையாடும் விளையாட்டுக் காரைப் போன்றதொரு சிறிய ரக டம்மி கார் ஆகும். இதனை ஒரு சில வாகன நிறுவனங்கள் மட்டுமே அதன் புகழ்வாய்ந்த மாடல்களை கவுரவிக்கும் விதமாக தயாரித்து வருகின்றன. மேலும், வாகன பிரியர்களை கவர வேண்டும் என்பதற்காகவும் அதனை விற்பனைக்கு களமிறக்கியும் வருகின்றன.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

அந்தவகையில், சமீபத்தில் டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் போன்ற அதிக வரவேற்பைப் பெற்று வரும் காரின் ஸ்கேல் மாடலை அறிமுகம் செய்தது. இதேபோன்று ராயல் என்பீல்டு நிறுவனமும் அதன் குறிப்பிட்ட ஒரு டூ-வீலர்களின் ஸ்கேல் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

MOST READ: இத்தாலியில் இருந்து இறக்குமதியான சைலென்சரை நொறுக்கிய போலீஸ்... விலை தெரிஞ்சா மயக்கமே போட்ருவீங்க...

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

இம்மாதிரியான ஓர் ஸ்கேல் மாடலைதான் உலக புகழ்வாய்ந்த நிறுவனங்களில் ஒன்றான ரோல்ஸ் ராய்ஸ் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. அது, அதன் கல்லினன் மாடலின் ஸ்கேல் மாடலையே தற்போது தயாரித்து வருகின்றது. இதன் விலையோ லக்சூரி கார்களில் ஒன்றான ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாக இருக்கின்றது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

அதாவது, வெறும் அலங்கரிப்பிற்கு மட்டுமே பயன்படுத்தும் வகையில் தயாராகி இருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஸ்கேல் மாடலுக்கு இந்திய மதிப்பில் ரூ. 28 லட்சம் என்ற விலை அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இது மிக மிக அதிக விலையாகும். இந்த தொகையைக் கொண்டு இந்தியாவில் லக்சூரி கார்களில் ஒன்றாக விற்பனையாகிக் கொண்டிருக்கும் ஜீப் நிறுவனத்தின் காம்பஸ் எஸ்யூவி காரையே வாங்கிவிட முடியும்.

MOST READ: 80s, 90s கார்களை தேடி பார்த்து திருடிய கொள்ளையன்... சொன்னாரு பாருங்க ஒரு காரணம்... போலீஸே மிரண்டாங்க

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

பொதுவாக, இதுமாதிரியான ஸ்கேல் மாடல்கள் ரூ. 120 முதல் 400 ரூபாய் வரையிலான விலையில் மட்டுமே சந்தையில் விற்கப்பட்டு வருகின்றது. அதேசமயம், கூடுதல் சிறப்புகளைக் கொண்டு அது தயார் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே சற்று அதிக விலையில் அவை விற்கப்படும். அதுவும், அந்த விலை ஆயிரங்களைத் தாண்டாது என்கின்றனர் ஆட்டோத்துறை வல்லுநர்கள்.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

ஆனால், இந்த நிலையை மாற்றும் விதமாக சமீப காலமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதி விலையில் ஸ்கேல் மாடல்களைக் களமிறக்கி வருகின்றன. அவை, பயன்படுத்தக் கூடிய வாகனங்களைக் காட்டிலும் அதிக விலையைக் கொண்டதாக இருப்பது பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

MOST READ: டூ-வீலர் வாங்கவே திணறிய இளைஞர்! இப்போது ஜாகுவார் எக்ஜேஎல் காரின் உரிமையாளர்... எப்படி இது சாத்தியம்?

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

அந்தவகையில் ஒட்டுமொத்த ஆட்டோச் சந்தைக்கே ஷாக் கொடுக்கும் வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் ஸ்கேல் மாடலின் விலை இருக்கின்றது.

இதில், மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த அதிக விலைக் கொண்ட ஸ்கேல் மாடலை, உலக பணக்காரர்கள் ஒரு சிலர் ஆர்டர் கொடுத்து பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

சரி இந்த ஸ்கேல் மாடலுக்கு ஏன் இவ்வளவு விலை?

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் அதன் கார்களை தயாரிப்பதைப் போலவே மிகவும் நேர்த்தியான முறையில் இந்த அலங்கரிப்பு ஸ்கேல் மாடலையும் உருவாக்கி வருகின்றது. அதாவது, கல்லினன் காரில் என்ன மாதிரியான சிறப்பம்சங்கள் எல்லாம் காட்சியளிக்கின்றதோ, அவையனைத்தும் இந்த ஸ்கேல் மாடலிலும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஆயிரத்திற்கும் அதிகமான உடற்கூறுகளை தனியாக ஆர்டர் கொடுத்து அது வாங்கி வருகின்றது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

இதுதவிர, உண்மையான மாடலில் இருந்து துளியளவும் மாறுபட்டுவிடக் கூடாது என்பதற்காக கூடுதல் யுக்திகளையும் அந்நிறுவனம் கையாண்டுள்ளது. அதாவது, பெயிண்டிங், திறக்கும் கதவுகள், ரிமோட் மூலம் இயங்கும் மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்தும் கல்லினனுக்கு இணையாக அதில் நிறுவப்பட்டிருக்கின்றது. இவ்வாறு, ஒவ்வொரு ஸ்கேல் மாடலையும் தனிக் கவனம் செலுத்தி உருவாக்க குறைந்தது 450 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

ரூ. 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 28 லட்சம் ரூபாய்க்கு அறிமுகம்... இது கனவல்ல, நிஜம்..!

இதுபோன்ற பல்வேறு காரணங்களினாலயே ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் 1:8 ஸ்கேல் மாடலுக்கு இந்திய மதிப்பில் ரூ. 28 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுமாதிரியான விலையுயர்ந்த ஸ்கேல் மாடல்களை ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் மட்டுமில்லாமல் ஒரு தனியார் நிறுவனங்களும் விற்பனைச் செய்து வருவது குறிப்பிடத்தகுந்தது. அவையும் நிஜ வாழ்க்கையில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு போட்டியளிக்கும் விலையைக் கொண்டதாக இருக்கின்றன.

Most Read Articles

English summary
Rolls Royce Scale Model Launched At Rs. 28 Lakh. Read In Tamil.
Story first published: Tuesday, May 26, 2020, 20:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X