சோப்பு டப்பாக்களை தூர வீசுங்க! பட்ஜெட் விலையில் உயிரை காக்கும் கார்கள்! டாடா, மஹிந்திராவால் பெருமை

டாடா, மஹிந்திரா நிறுவனங்கள், உயிரை காக்கும் பாதுகாப்பான கார்களை பட்ஜெட் விலையில் தயாரித்து, உலகின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளன.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

உலகிலேயே சாலை விபத்துக்கள் காரணமாக அதிக உயிர்களை பறிகொடுக்கும் நாடுகளில் ஒன்றாக நமது இந்தியா இருப்பது உண்மையிலேயே வேதனையான விஷயம். இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு மட்டும் சுமார் 1.50 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றனர். இப்படிப்பட்ட இந்தியாவில் கார்கள் மிகவும் பாதுகாப்பானவையாக இருக்க வேண்டியது அவசியம்.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

ஆனால் இந்திய வாடிக்கையாளர்களுக்கு துரதிருஷ்டவசமாக சமீப காலம் வரை அத்தகைய பாதுகாப்பான கார்களில் பயணிக்கும் வாய்ப்பு பெரிதாக கிடைக்கவில்லை என்பதே உண்மை. கார்களில் பாதுகாப்பு வசதிகளை அதிகரித்தால், கூடவே அவற்றின் விலையும் சேர்ந்து உயர்ந்து விடும். ஆனால் இந்திய மார்க்கெட்டோ விலைக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

இப்படிப்பட்ட சூழலில், 'மேட் இன் இந்தியா' கார்கள் தற்போது மிகவும் பாதுகாப்பானவையாக மாறி வருவது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயம். அதுவும் பட்ஜெட் விலை கார்கள் கூட தற்போது பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குகின்றன. இதற்கு இந்தியாவை சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களுக்குதான் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தும் க்ராஷ் டெஸ்ட்களில், தற்போது டாடா கார்கள் அசத்தி வருகின்றன. குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமையை டாடா நெக்ஸான் நமக்கு தேடி தந்தது. இதை தொடர்ந்து அதே டாடா நிறுவனத்தின் அல்ட்ராஸ் காரும் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார்களை பெற்றது.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

இதன் மூலமாக குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில், 5 ஸ்டார்களை முழுமையாக பெற்ற 2வது இந்திய கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் பெற்றது. அத்துடன் தங்களது லைன் அப்பில் இரண்டு 5 ஸ்டார் ரேட்டிங் கார்களை வைத்திருக்கும் ஒரே இந்திய கார் நிறுவனம் என்ற மிகப்பெரிய பெருமையை டாடா மோட்டார்ஸ் பெற்றது.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

இதுமட்டுமல்லாது, அதே டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரண்டு கார்களும் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அசத்தியுள்ளன. இதன் மூலம் தங்களது லைன்அப்பில் இரண்டு 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட கார்களை வைத்திருக்கும் ஒரே இந்திய நிறுவனம் என்ற பெருமையையும் டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

தற்போது டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவி, அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக், டியாகோ காம்பேக்ட் ஹேட்ச்பேக் மற்றும் டிகோர் காம்பேக்ட் செடான் ஆகிய கார்கள் தங்களது செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார்களாக உருவெடுத்துள்ளன. இதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்பான கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

ஏனெனில் தங்களது லைன்அப்பில், இரண்டு 5 ஸ்டார் ரேட்டிங் கார்கள் மற்றும் இரண்டு 4 ஸ்டார் ரேட்டிங் கொண்ட கார்களை வைத்திருக்கும் ஒரே இந்திய நிறுவனம் டாடா மோட்டார்ஸ் மட்டுமே. உண்மையில் பாதுகாப்பு என்ற விஷயத்தில், டாடாவை அடித்து கொள்ள ஆள் இல்லை என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இணையாக இந்தியாவை சேர்ந்த மஹிந்திராவும் பாதுகாப்பான கார்களை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த விஷயத்தில் தற்போது மஹிந்திரா வெற்றியும் காண தொடங்கியுள்ளது. டாடாவிற்கு அடுத்தபடியாக 5 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் கொண்ட கார்களை வைத்திருக்கும் ஒரே இந்திய நிறுவனம் மஹிந்திராதான்.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 கார், குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் சமீபத்தில்தான் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு முன்பாக மஹிந்திரா நிறுவனத்தின் மராஸ்ஸோ கார், குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றிருந்தது.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

இதில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரானது, காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. அதே சமயம் மஹிந்திரா மராஸ்ஸோ காரானது, எம்பிவி ரகத்தை சேர்ந்தது. சோப்பு டப்பாக்கள் என கிண்டல் அடிக்கப்பட்டு வந்த இந்திய நிறுவனங்களின் கார்கள் தற்போது பாதுகாப்பானவையாக மாற தொடங்கியிருப்பது நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயமே.

சோப்பு டப்பாக்களுக்கு மத்தியில் பாதுகாப்பான கார்கள்... டாடா, மஹிந்திராவிற்கு நன்றிகடன் பட்ட இந்தியா

இந்த நேரத்தில் மாருதி சுஸுகி போன்ற நிறுவனங்களும் பாதுகாப்பில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தும் பட்சத்தில், இந்திய வாடிக்கையாளர்களுக்கு இன்னும் நல்ல பாதுகாப்பான கார்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவில் கார்களின் பாதுகாப்பை அதிகரிக்க, மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Safest Indian Cars - Tata Nexon, Altroz, Tiago, Tigor, Mahindra XUV300, Marazzo. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X