ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

தென் கொரியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸின் முதல் எஸ்யூவி மாடலாக முதல் தலைமுறை சாண்டா ஃபெ கடந்த 2000ல் வெளிவந்தது. இதன்படி இந்த கார் சந்தையில் விற்பனையில் 20ஆண்டு காலத்தை நிறைவு செய்துள்ளது.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

சாண்டா ஃபெ, நிச்சயம் ஹூண்டாயின் ஐகானிக் மாடலே ஆகும். ஏனெனில் இந்த எஸ்யூவி மாடல் தான் இந்நிறுவனத்தின் எதிர்கால எஸ்யூவி மாடலுக்கு அடித்தளமாக அமைந்தது. முதன்முதலாக இரு தசாப்தங்களுக்கு முன்னர் 2001மை திட்டத்தின் மூலம் வட அமெரிக்க சந்தையில் இந்த எஸ்யூவி மாடல் அறிமுகமானது.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

அதனை தொடர்ந்து ஐரோப்பாவிற்கு 2001ல் ஹூண்டாய் நிறுவனம் சாண்டே ஃபெ மாடலை கொண்டு சென்றது. அப்போதிலிருந்து இப்போதும் பல தலைமுறைகளை கடந்து இந்த எஸ்யூவி கார் அங்கு விற்பனையாகி கொண்டிருப்பதால் ஐரோப்பாவில் நீண்ட வருடங்களாக விற்பனையாகி கொண்டிருக்கும் ஹூண்டாய் காராக இது விளங்குகிறது.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

தற்சமயம் சாண்டா ஃபெ மாடலின் நான்காம் தலைமுறை கார் கடந்த 2018ல் இருந்து சர்வதேச சந்தையில் விற்பனையில் உள்ளது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு இறுதியில் இந்த எஸ்யூவி காரில் புதிய எலக்ட்ரிக்ஃபைடு என்ஜின் அமைப்பு மற்றும் முக்கியமான டிசைன் அப்டேட்களுடன் காரின் ஆயுட்காலத்தை அதிகரிக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

இதன் பெயரில் தான் நியூ மெக்ஸிகோ நாட்டின் தலைநகர் உள்ளதால் இந்த எஸ்யூவி கார் மிக விரைவாகவே வட அமெரிக்காவில் பிரபலமானது. எஸ்யூவி பிரிவில் ஹூண்டாய் நிறுவனம் நிலையான இடத்தை பிடிக்க சாண்டா ஃபெ முக்கியமான பணியாற்றியதால் இந்நிறுவனம் சாண்டா ஃபெ லோகோவில் சூரியனை கொண்டுவந்தது.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

இந்த எஸ்யூவி கார் குறித்து ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஐரோப்பா கண்டத்திற்கான சந்தைப்படுத்தல் மற்றும் தயாரிப்பு பிரிவின் துணை இயக்குனர் ஆண்ட்ரியாஸ்-கிறிஸ்டோஃப் ஹாஃப்மேன் கூறுகையில், சாண்டா ஃபெ, ஹூண்டாயின் முதல் எஸ்யூவி, அதுமட்டுமில்லாமல் நீண்ட வருடங்களாக விற்பனையில் உள்ள மாடல், உலகளவில் மட்டுமில்லாமல் ஐரோப்பாவிலும் இது முக்கிய மாடலாக உள்ளது.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

ஹூண்டாய்க்கு இது தான் ஐகான் காராகும். ஏனெனில் இதன் டிசைன், தொழிற்நுட்பம், உட்புற கேபினின் வடிவம் மற்றும் சவுகரியத்தின் அடிப்படையில் தான் அடுத்தடுத்து வெளிவந்த எஸ்யூவி மாடல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என கூறினார். ஹுண்டாய் நிறுவனம் இதுவரை 52.6 லட்ச சாண்டா ஃபெ எஸ்யூவி மாடல்களை உலகளவில் விற்பனை செய்துள்ளது.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

2000 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட இதன் முதல் தலைமுறை கார் அப்போதைய மாடல்கள் எதிலிலும் இல்லாத வகையில் ப்ரீமியமாக காட்சியளித்தது. சாண்டா ஃபெ மாடலின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை கார்கள் வட அமெரிக்க சந்தையில் 2006 மற்றும் 2012ல் அறிமுகப்படுத்தப்பட்டன.

ஹூண்டாய்யின் முதல் எஸ்யூவி கார் சாண்டா ஃபெ... 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது...!

இதன் மூன்றாம் தலைமுறை கார் கடைசியாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் சர்வதேச சந்தையில் அறிமுகமான இதன் நான்காம் தலைமுறை காரை இந்தியா இன்னமும் சந்திக்கவில்லை. இதற்கிடையில் சில வெளிநாட்டு சந்தைகள் இந்த எஸ்யூவி மாடலின் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனையும் விரைவில் காணவுள்ளன.

Most Read Articles
English summary
Hyundai’s First SUV ‘Santa Fe’ Celebrates 20th Anniversary
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X