ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் கார் கலெக்சன் பற்றிய தகவல் வெலியுலகிற்கு தெரிய வந்துள்ளது. இதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

கர்நாடாக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் பிஆர் ஷெட்டி (பவகுது ரகுராம் ஷெட்டி). ஐக்கிய அரபு நாட்டில் கொடிக்கட்டி பறக்கும் ஐந்து மிகப்பெரிய இந்திய செல்வந்தர்களில் இவரும் ஒருவர் ஆவார். இந்தியாவை விட்டு வெளியேறி அரபு நாட்டில் குடி புகுந்த இவர், பல்வேறு வெற்றிகரமான நிறுவனங்களை அங்கு நடத்தி வருகின்றார்.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

குறிப்பாக, அபுதாபியில் என்எம்டி (நியூ மெடிகர் சென்டர்) எனப்படும் மிகப்பெரிய மருத்துவமனையை இயக்கி வருகின்றார். 1970ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனை நிர்வாகத்தின்கீழ் 19 நாடுகளில் 194 மருத்துவமனைகள் தற்போது இயங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

அதுமட்டுமின்றி, பண பரிமாற்ற தொழிலிலும் பிஆர் ஷெட்டி ஈடுபட்டு வருகின்றார். ஆகையால், ஷெட்டி நிறுவனத்தின் பங்குகள் உலக நாடுகள் பலவற்றில் பங்குக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், லண்டன் பங்கு வர்த்தக சந்தையிலும் இவருடைய பங்குகள் இடம்பெற்றிருக்கின்றன.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

இந்த பங்குகளில் பிஆர் ஷெட்டியின் நிர்வாகம் விதிகளை மீறியிருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இதனால், தற்போது அவருடைய நிர்வாகம் அனைத்தும் கலைக்கப்பட்டு பிரிட்டன் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, பல மில்லியன் டாலர்களை கடனாக பெற்று அதை திருப்பு தராமல் இழுத்தடிப்பு செய்து வருவதாக பகீரங்க குற்றச்சாட்டை அபுதாபி கமர்சியல் வங்கி முன் வைத்துள்ளது.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

இந்த வங்கி மட்டுமின்றி அரபு நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கும் சில முக்கியமான வங்கிகளிலும் பிஆர் ஷெட்டி கடனைப் பெற்றுக்கொண்டு, அதை திரும்பிச் செலுத்தாமல் இருப்பதாக புகார்கள் எழும்பியிருக்கின்றன. இதனால், அவர் தலை மறைவாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது அவர் எந்த நாட்டில் இருக்கின்றார் என்ற உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

புதிய வங்கி மோசடி மன்னனாக உரு மாறியிருக்கும் இவர், மிகப்பெரிய கார் பிரியர் என கூறப்படுகின்றது. எனவே இவரிடத்தில் பல்வேறு விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்கள் இந்தியா மற்றும் அரபு நாடுகளில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கும் ஒரு சில கார்கள் பற்றிய பிரம்மிப்பை ஏற்படுத்தும் தகவல்களே தற்போது வெளியாகியுள்ளது. இது பற்றிய தகவலைதான் இந்த பதவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

1961 மோர்ரிஸ் மைனர் 1000

பிஆர் ஷெட்டி மிகப்பெரிய வாகன பிரியர் என்பதற்கு சான்றாக அவரிடத்தில் தற்போதும் பல விண்டேஜ் கார்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றே 1961 மோர்ரிஸ் மைனர் 1000 வகை காராகும். இதுமட்டுமின்றி பல விண்டேஜ் கார்கள் அவரிடத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால், தற்போது 1961 மோர்ரிஸ் மைனர் 1000 கார் பற்றிய தகவல் மட்டுமே தெரியவந்துள்ளது.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

தன்னிடத்தில் இருக்கும் பல விலையுயர்ந்த கார்களைக் காட்டிலும் இந்த விண்டேஜ் காரையே அவர் அதிகம் விரும்புவதாக சில தொலைக்காட்சி பேட்டிகளின்போது அவர் கூறியிருக்கின்றார். இதில், பெரும்பாலான கார்கள் தற்போது இந்தியாவிலேயே இருக்கின்றன. அவை தற்போது இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர்

பிஆர் ஷெட்டியின் பெங்களூரு இல்லத்தில்தான் தற்போது விலையுயர்ந்த பல கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அதில், லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் காரும் ஒன்றாகும். இது ஓர் பழைய தலைமுறை மாடல் ஆகும். இந்திய வரும்போது எல்லாம் இக்காரையே அவர் பெரும்பாலும் பயன்படுத்துவாராம். இதுதவிர மேலும் பல பழைய தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் கார்களும் அவரிடத்தில் இருக்கின்றன.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி

பிஆர் ஷெட்டியின் மகன் பினே இந்த காரை பயன்படுத்தி வருகின்றார். ஷெட்டியின் பல தொழில்களை தற்போது இவரே தலைமை தாங்கி நடத்தி வருகின்றார். இவரும் ஓர் மிகப்பெரிய கார் பிரியர் ஆவார். இவரிடத்தில் லெக்சஸ் மற்றும் மசேராட்டி உள்ளிட்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இதில், மெர்சிடிஸ் ஏஎம்ஜி ஜிடி காரை டிராக் மற்றும் ரேஸிங் பயணத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றார்.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம்

பிஆர் ஷெட்டி இடத்தில் பயன்பாட்டில் இருக்கும் மிக விலையுயர்ந்த செடான் ரக காராக ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் இருக்கின்றது. இதுவே அவரின் மிகவும் விருப்பமான காராகும். எனவேதான், பல முக்கிய நிகழ்வுகளுக்கு செல்ல இக்காரை அவர் அதிகம் பயன்படுத்துகின்றார். ஆனால், இக்கார் இந்தியாவில் இல்லை. அபுதாபியில் அவரின் பயன்பாட்டிற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.

இது ஓர் கடைசி தலைமுறை பேந்தம் ஆகும். ஆனால், தற்போது உலகின் மிகுந்த சொகுசு நிறைந்த காராக இதுவே இருக்கின்றது. ஆகையால், இக்காரை பிஆர் ஷெட்டி அதிகம் விரும்புகின்றார். மேலும், பல தொலைக்காட்சி பேட்டிகளில் தனக்கு மிகவும் பிடித்தமான காராக இதை கூறியிருக்கின்றார்.

மெர்சிடிஸ் மேபேக் எஸ்600 லிமோசைன்

இந்தியா போன்ற சில முக்கியமான நாடுகளில் குடியரசு தலைவர் போன்ற நாட்டின் மிக முக்கியமான தலைவர்களின் பயன்பாட்டில் மெர்சிடிஸ்ஸ் மேபேக் எஸ்600 லிமோசைன் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய காரையே பிஆர் ஷெட்டி தனது பாதுகாப்பான பயணத்திற்காக பயன்படுத்தி வருகின்றார். இந்த கார், புல்லட் ப்ரூஃப் மற்றும் அதிக பாதுகாப்பு திறன்மிக்க வாகனம் ஆகும். உலகிலேயே இக்காரை தனி நபர் பயன்பாட்டிற்காக களமிறக்கிய முதல் நபராக இவர் இருக்கின்றார்.

ஜனாதிபதிதானே இந்த காரை வச்சிருப்பாங்க!! மோசடி மன்னன் பிஆர் ஷெட்டியின் தலை சுற்ற வைக்கும் கார் கலெக்சன்...

எனவேதான் பிஆர் ஷெட்டியை மிகப் பெரிய கார் பிரியர் என அழைக்கப்படுகின்றார். இவரிடத்தில் இன்னும் பல விலையுயர்ந்த மற்றும் சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் வெளியுலகிற்கு தெரியாத பல பிரமாண்ட கார்கள் அவரிடத்தில் பயன்பாட்டில் இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Scam-Accused BR Shetty & His Luxury Car Collection. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X