சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா?

சொக்க வைக்கும் அழகிலும், மிரள வைக்கின்ற அம்சத்திலும் கார்-இ பைக் ஒன்று இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து எலெக்ட்ரிக் வெஹிக்கிள் வெப்.இன் தளம் வெளியிட்ட செய்தியை இந்த பதிவில் காணலாம்.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அழகான நாடுகளில் ஒன்று நார்வே. இந்த நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம்தான் ஸ்காண்டிநேவியன் (Scandinavian). இது இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஏத்தர் எனர்ஜியைப் போல் ஓர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம்தான் தற்போது இந்தியாவில் கால் தடம் பதிக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இது, ஸ்டார்ட்அப் நிறுவனமாக காணப்பட்டாலும் மிகவும் தனித்துவமான வாகனங்களைத் தயாரிப்பதில் கைதேர்ந்த நிறுவனமாக காட்சியளிக்கின்றது. இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு சிட்டிக்யூ (CityQ). இது ஓர் நான்கு வீல்களைக் கொண்ட இ-சைக்கிள் ஆகும். என்ன சொல்றீங்க, உருவத்தைப் பார்த்தா கார் போல இருக்கு. இதைபோய் சைக்கிளுனு சொல்றீங்க என கேட்கத் தோன்றலாம்.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

ஆமாங்க, இது ஓர் சைக்கிள்தான். இதில் பெடல் வசதியெல்லாம் இருக்கு. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை பாதுகாப்பு அழைத்துச் செல்ல மற்றும் வெயில், மழை போன்ற இயற்கை சீதோஷ்ணத்தில் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் இந்த இந்தத வாகனத்தை ஸ்காண்டிநேவியன் தயாரித்துள்ளது. அதேசமயம், இதில் சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பயணிக்கலாம்.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இதில் டிரைவருடன் சேர்த்து மூன்று பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுமட்டுமின்றி இதனை ஓர் சரக்கு வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்கேற்ப ஸ்டோரேஜ் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. சிட்டிக்யூ ஓர் மின்சார வாகனம் ஆகும். இதில் நான்கு வீல்கள், இருவர் அமர்கின்ற வகையில் ரியர் சீட், கதவு, ஸ்டோரேஜ் கம்பார்ட்மெண்ட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் மிக முக்கியமாக பெடல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இத்துடன், கார்களில் காணப்படுவதைப் போன்று முன்பக்கத்தில் விண்ட்ஷீல்டு கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, இதில் பயணிக்கும்போது சைக்கிள் என்பதைக் காட்டிலும் கார் என்ற உணர்வே அதன் உரிமையாளருக்கு ஏற்படும். ஆகையால், இதனை பலர் கார்-இ பைக் என்றே செல்லமாக அழைக்கின்றனர்.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இந்த தனித்துவமான அமைப்பைக் கொண்ட கார்-இ பைக்கைதான் இந்தியாவில் அறிமுகம் செய்ய ஸ்காண்டிநேவியன் முயற்சி செய்து வருகின்றது.

இந்த மின்சார வாகனம் இந்தியாவில் கால் தடம் பதிக்குமேயானால் நிச்சயம் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என யூகிக்கப்படுகின்றது.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இந்த வித்தியாசமான வாகனத்தை உருவாக்க ஸ்காண்டிநேவியன் 3 வருடங்களுக்கும் மேலாக கடினமாக உழைத்ததாகக் கூறப்படுகின்றது. குறிப்பிட்டு கூற வேண்டுமானால், இந்த வாகனத்தை வடிவமைக்கும் பணியில் கார் மற்றும் பைக் என இரு வாகனங்களையும் வடிவமைக்கும் குழு இணைந்தே சிட்டிக்யூ-வை உருவாக்கியிருக்கின்றன.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இந்த வாகனம் மிக முக்கியமாக ஐடி துறையில் பணியாற்றுபவர்களை மையக் கருத்தாகக் கொண்டே இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சிறு வணிகர்கள் நுகரும் வகையில் இந்த வாகனத்தின் பின் புறத்தில் பெரிய இடவசதிக் கொண்டே ஸ்டோரேஜ் ஸ்பேஸ் வழங்கப்பட்டுள்ளது.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

சிட்டிக்யூ கார்-இ பைக்கின் உச்சபட்ச வேகம் மணிக்கு 25 கிமீ ஆகும். எனவே, இதனை இயக்க பைக் அல்லது சைக்கிள் லேன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற வழிமுறையுடன் வெளிநாடுகளில் சிலவற்றில் சிட்டிக்யூ வாகனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இது ஸ்கூட்டரைப் போன்று ஆட்டோமேட்டிக் கியரில் இயங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. இதில், 800 W திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்படுகின்றது. இது, 48V 125W திறனுடை மின் மோட்டாருக்கு தேவையான மின் சக்தியை வழங்கும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமகா 250வாட் வரை திறனை வெளிப்படுத்தும். அதேசமயம், இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ முதல் 100 கிமீ வரை நம்மால் பயணிக்க முடியும்.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இந்த மின்சார வாகனம் டிராஃபிக் எளிதாக புகுந்து செல்லும் வகையில் மிகவும் மெல்லிய உருவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்ப பைக்குகளில் காணப்படுவதைக் காட்டிலும் மெல்லிய வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது தற்போது ஐரோப்பிய சந்தையில் அந்நாட்டு மதிப்பில் 7,450 யூரோக்களுக்கு விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

இது இந்திய மதிப்பில் ரூ. 6.32 லட்சம் ஆகும். இந்த வாகனத்திற்கு ஐரோப்பிய நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளே 500க்கும் மேற்பட்ட ப்ரீ புக்குங்குகள் சிட்டிக்யூ எலெக்ட்ரிக் கார்-இ பைக்கிற்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில்தான் இந்த கார்-இ பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக பேச்சுகள் அடிபட்ட வண்ணம் இருக்கின்றது.

இதுகுறித்து சிட்டிக்யூ-வின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிறுவனர் மோர்டன் ரைனிங் கூறியதாதவது, "இந்தியாவில் கார்-இ பைக்கை காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளோம். தற்போது உள்ளூர் உற்பத்திக்கான உரிமங்களைப் பெற முயற்சித்து வருகின்றோம். இது இந்தியாவில் களமிறக்கப்படும்போது சற்றே விலை குறைந்த மாடலாக காட்சிப்படுத்தப்படும்" என்றார்.

சொக்க வைக்கும் அழகு-வியக்க வைக்கும் திறன்! இது இ-பைக்னு சொன்ன நம்ப முடிகிறதா? விரைவில் இந்தியா வரும் கார்-இ பைக்?

தொடர்ந்து பேசிய அவர், "விலை குறைக்கப்பட்டாலும், அது இன்னும் உயர்தர தயாரிப்பாகவே வழங்கப்படும். தனிப் பயனர் சந்தையில் மட்டுமின்றி சரக்கு வர்த்தகத்திலும் கார்-இ பைக் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான பேச்சுவார்த்தை இந்திய பார்ட்னர்களுடன் நடைபெற்று வருகிறது" என கூறினார்.

எனவே, விரைவில் சிட்டிக்யூ இந்தியாவின் மின்சார வாகன சந்தையில் புரட்சிக்கு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
A Scandinavian Startup Interested Entering India With Innovative Car eBike. Read In Tamil.
Story first published: Saturday, June 27, 2020, 16:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X