ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 'டூர் டெலிவரி' சேவை பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளில் எரிபொருள் ஹோம் டெலிவரி என்பது மிக சாதாரணமான சேவையாக உள்ளது. அதாவது, தற்போது நம் நாட்டில் இருக்கும் ஸ்விக்கி, சொமோட்டா ஃபுட் டெலிவரி போல் அங்கு எரிபொருள் வீடு தேடி சென்று தேவைக்கேற்ப நிரப்படுகின்றது. புக் செய்த கொஞ்ச நேரத்தில் பெட்ரோல் அல்லது டீசல் ஆகிய எரிபொருள் உடனடியாக டெலிவரி கொடுக்கப்படும். இந்தியாவைப் பொருத்தவரை இந்த செயல் சற்று ஆச்சரியமானதாக காட்சியளிக்கின்றது.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

நாட்டின் ஒரு சில பகுதிகளில் இந்த சேவை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது, குறிப்பிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் பெட்ரோல், டீசல் ஹோம் டெலிவரி சேவைத் தொடங்கப்பட்டிருக்கின்றது. இந்த சேவை விரைவில் நாடு முழுவதும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

இந்த நிலையில், ஹோம் டெலிவரி எரிபொருள் சேவையைப் பயன்படுத்தி கியா செல்டோஸ் காரின் உரிமையாளர் எரிபொருள் நிரப்பும் வீடியோ வெளியாகியுள்ளது. இதுகுறித்த வீடியோவை அருண் பன்வார் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. இந்த சேவைக்கு ஒரு ரூபாகூட கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. வீடியோவில், கார், சிறிது தூரம் சென்று எரிபொருள் நிரப்புவதைப் போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றது.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடம் மிக சிறிய தெருவாக இருந்ததன் காரணத்தினாலயே கார் வெளியே திறந்தவெளி இடத்திற்கு வந்து எரிபொருளை நிரப்பியிருக்கின்றது. இது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் 'டூர் ஸ்டெப் எரிபொருள் டெலிவரி' சேவையாகும். 'ப்யூவல் கார்ட்', 'ப்யூவல் ஆன் கால்' எனும் பெயரில் இந்த எரிபொருள் ஹோம் டெலிவரி சேவையை பாரத் பெட்ரோலியம் செய்து வருகின்றது.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

இந்த சேவை எப்படி இயங்குகின்றது என்பதனை விளக்கும் வகையிலேயே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவை வைத்து பார்க்கையில் வழக்கமான எரிபொருள் நிரப்பும் நிலைத்தைப் போலவே இது செயல்படுவதை நம்மால் காண முடிகின்றது. இதில் இருக்கக்கூடிய வித்தியாசம், பெட்ரோல் பங்க்கை நாம் தேடி போவோம், இங்கு எரிபொருளைக் கொண்ட லாரி நம்மைத் தேடி வருகின்றது.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

இவைதான் இவற்றில் இருக்கும் மிகப்பெரிய வித்தியாசமாக இருக்கின்றது. இதற்கான தொகையை பணமாக மட்டுமின்றி ஏடிஎம் கார்டு மூலமாகவும் செலத்திக் கொள்ள முடியும். இதனை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோவை எடுத்தவர் கார்டின் மூலமாகவே பணத்தைச் செலுத்தியிருக்கின்றனர். இந்த சிறப்பு சேவைக்கு ஏதேனும் தனி கட்டணம் வசூலிக்கப்பட்டதா என்ற கேள்வியும், சந்தேகமும் நம்மில் அநேகருக்கு தோன்றியிருக்கும் என நம்புகின்றோம்.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

ஆனால், உண்மையைக் கூற வேண்டுமானால், டூர் டெலிவரி சேவைக்கு தனியாக எந்த கட்டணத்தையும் பாரத் பெட்ரோலியம் வசூலிக்கவில்லை. மேலும், வழக்கமாக பெட்ரோல் பங்குகளில் என்ன விலை ஒரு லிட்டருக்கு வசூலிக்கப்படுகிறதோ அந்த தொகையை மட்டுமே பெட்ரோல் பங்க் ஊழியர்கள் கியா செல்டோஸ் கார் உரிமையாளரிடத்தில் இருந்து வசூலித்திருக்கின்றனர்.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

இதனை பில் ரசீதும் உறுதி செய்துள்ளது. அதில், ஒரு லிட்டர் ரூ. 71.84 காசுகள் என பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 50 லிட்டர் வரை நிரப்பட்டதால் அவரிடத்தில் இருந்து 3,600 ரூபாய் வசூலிக்கப்பட்டது. காரில் டீசல் நிரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

ஒரு ரூபாகூட எக்ஸ்ட்ரா வாங்கல... வீடு தேடி வந்த பெட்ரோல் பங்க்... நம்ப முடியலையா இதோ வீடியோவை பாருங்க...

எரிபொருள் நிரப்பப்பட்ட கியா செல்டோஸ் கார் அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான மாடல் ஆகும். இந்த கார் ஹூண்டாய் கிரெட்டாவைப் போல் பன்முக எஞ்ஜின் மற்றும் வேகக்கட்டுப்பாட்டு தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. பெட்ரோல் எஞ்ஜின்களில் 1.5 லிட்டர் - 4 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் மற்றும் 1.4 லிட்டர் - 4 சிலிண்டர் டர்போசார்ஜ் ஆகியவற்றில் கிடைக்கின்றது. டீசல் எஞ்ஜினில் 1.5 லிட்டர் - 4 சிலிண்டர் டர்போசார்ஜ்டு யூனிட் மட்டுமே கிடைக்கின்றது.

இதேபோன்று பன்முக வேகக்கட்டுப்பாடு தேர்விலும் இக்கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அவை, சிவிடி ஆட்டோமேட்டிக், 6 ஸ்பீடு மேனுவல், டிசிடி ட்வின் கிளட்ச் தானியங்கி மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர். இவையே கியா செல்டோஸ் கார்களில் கிடைக்கும் கியர்பாக்ஸ் தேர்வாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Seltos Refueled By Bharat Petroleum Fuel Tanker. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X