தடை உத்தரவு முடிந்தாலும் சில கார்களை இனி இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா..?

கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது ஊரடங்கு உத்தரவு நிலவி வருகின்றது. இதனால் புதிய வாகனங்கள் வாங்குவது தடுக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு முடிந்த பின்னரும் சில கார் மாடல்களை நம்மால் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக தற்போது தேசிய அளவில் ஊரடங்கு உத்தரவு அமலுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. மக்களின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த உத்தரவால், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. மேலும், பழைய நிலைக்கு திரும்ப முடியாமல் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

இந்தியாவின் இந்த நிலை, அனைத்து துறைகளுக்குமே தற்காலிக மூடுவிழாவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அத்தியாவசிய தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்களைத் தவிர மற்ற எந்தவொரு பொருளின் விநியோகத்திற்கும் அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், கடுமையான வீழ்ச்சியைச் சந்திவரும் துறைகளில் ஒன்றாக வாகன சந்தை மாறியிருக்கின்றது. குறிப்பாக, கடந்த மாதம் 24ம் தேதிக்கு பின்னரில் இருந்து ஒரு யூனிட்டைக் கூட விற்க முடியாமல் டீலர்கள் தவித்து வருகின்றனர்.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

இந்த நிலை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என தெரிகின்றது. கொரோனா வைரசின் அதி-தீவிர பரவும் தன்மையே இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. அதேசமயம், வைரசின் தீவிர தன்மை விளகிய பின்னரும் ஒரு சில கார்களை நம்மால் வாங்கவே முடியாத சூழ்நிலை உருவாயுள்ளது. இதற்கு கொரோனா ஓர் காரணமாக இருந்தாலும், இந்தியா அரசே இதற்கான முக்கிய காரணமாக இருக்கின்றது.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

நாட்டின் மாசுபாடு பிரச்னையைக் கருத்தில் கொண்டு புதிய மாசு உமிழ்வு விதியான பிஎஸ்-6 நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆகையால், முன்னதாக தயாரிக்கப்பட்ட பிஎஸ்-4 வகனங்களை மார்ச் மாதத்துடன் விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என டீலர்கள் மற்றும் வாகன உற்பத்தி நிறுவனங்கள் நினைத்து வந்தன.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

ஆனால், இதற்கு முற்றுகட்டையாக கொரோனா வைரஸ் அமைந்தது. தற்போது கால அவகாசமும் முடிந்துவிட்டது. ஆகையால், குறிப்பிட்ட டீசல் வாகனங்களை கட்டாயம் சந்தையை விட்டு வெளியேற்றும் நிலை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

அவ்வாறு, சந்தையை விட்டு வெளியேற்றப்பட்ட மற்றும் இதற்கு பின் நம்மால் வாங்கவே முடியாத என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் பிஎஸ்-4 டீசல் வாகனங்களைப் பற்றிய தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். சந்தையைவிட்டு வெளியேற்றப்பட்டிருக்கும் ஒரு சில கார்கள் அதிக விற்பனையாகும் கார்களாக இருந்தவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

மாருதி சுசுகி (Maruti Suzuki)

மாருதி சுசுகி நிறுவனத்தின் பல தயாரிப்புகள் புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றன. அதிகமாக சிறிய ரக டீசல் எஞ்ஜின் கார்களை இந்திய சந்தையை விட்டு வெளியேற்றிய நிறுவனங்களில் மாருதி சுசுகி முதன்மை இடத்தில் உள்ளது. அது வெளியேற்றிய கார்களில் ஸ்விஃப்ட் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்ஜினும் (Swift 1.3 Litre DDis Diesel) அடங்கும்.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

இதேபோன்று, பலினோ 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்ஜின் (Baleno 1.3 Litre DDis Diesel), டிசையர் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்ஜின் (Dzire 1.3 Litre DDis Diesel), விட்டாரா ப்ரெஸ்ஸா 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்ஜின் (Vitara Brezza 1.3 Litre DDis Diesel), எஸ் க்ராஸ் 1.3 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்ஜின் (S-Cross 1.3 Litre DDis Diesel), சியாஸ் 1.5 லிட்டர் டிடிஐஎஸ் 225 டீசல் எஞ்ஜின் (Ciaz 1.5 Litre DDiS 225 Diesel) மற்றும் எர்டிகா 1.5 லிட்டர் டிடிஐஎஸ் டீசல் எஞ்ஜின் (Ertiga 1.5 Litre DDiS 225 Diesel) உள்ளிட்டவையும் சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றன.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

டாட மோட்டார்ஸ் (Tata Motors)

மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களைப் போலவே இந்திய வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்ஸும், அதன் அதிகம் விற்பனையாகும் கார்கள் சிலவற்றை இனி இந்தியாவில் வாங்கவே முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

அவை:

டாடா டியாகோ 1.05 லிட்டர் ரெவோடோர்க் டீசல் (Tiago 1.05 Litre Revotorq Diesel)

டிகோர் 1.05 லிட்டர் ரெவோடோர்க் டீசல் (Tigor 1.05 Litre Revotorq Diesel)

போல்ட் 1.3 லிட்டர் ரெவோடோர்க் டீல் (Bolt 1.3 Litre Revotorq Diesel)

ஜெஸ்ட் 1.3 லிட்டர் ரெவோடோர்க் டீசல் (Zest 1.3 Litre Revotorq Diesel)

ஹெக்ஸா 2.2 லிட்டர் எம்வேரிக்கோர் டீசல் (Hexa 2.2 Litre mVaricor Diesel)

சஃபாரி ஸ்டோர்ம் 2.2 லிட்டர் எம்வேரிக்கோர் டீசல் (Safari Storme 2.2 Litre mVaricor Diesel) இந்த மாடல்கள்தான் இனி இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத டீசல் கார்கள் ஆகும்.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

ஃபோக்ஸ்வாகன் (Volkswagen)

இந்தியாவில் எப்படி டாடா நிறுவனம் ஜாம்பவானாக தோற்றமளிக்கின்றதோ, அதேபோன்று உலகளவல் ஃபோக்ஸ்வேகன் ஜாம்பவனாக திகழ்ந்து வருகின்றது. அதாவது உலகளவில் அதிகம் விற்பனையாகும் வாகனங்களில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தயாரிப்புகளும் முக்கிய இடத்தில் இருக்கின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் சிலவும் இந்தியாவின் புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக சந்தையை விட்டு வெளியேறியிருக்கின்றன.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

அவை:

போலோ 1.5 லிட்டர் டிடிஐ டீசல் (Polo 1.5 Litre TDI Diesel)

வென்டோ டீசல் 1.5 லிடடர் டிடிஐ டீசல் (Vento Diesel 1.5 Litre TDI Diesel)

டிகுவான் 2.0 லிட்டர் டிடிஐ டீசல் (Tiguan 2.0 Litre TDI Diesel)

அமியோ 1.5 லிட்டர் டிடிஐ டீசல் (Ameo 1.5 Litre TDI Diesel)

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

டொயோட்டா (Toyota)

டொயோட்டா நிறுவனமும் அதன் அதிகம் விற்பனையாகும் சில சிறிய எஞ்ஜின் கொண்ட கார்களை சந்தையை விட்டு பிஎஸ்-6 மாசு உமிழ்வு காரணமாக வெளியேற்றியுள்ளது.

அதில், எடியோஸ் 1.4 லிட்டர் டீசல் (Etios 1.4 Litre Diesel) காரும் அடங்கும். அதுமட்டுமின்றி, எடியோஸ் லிவா 1.4 ��ிட்டர் டீசல் (Etios Liva 1.4 Litre Diesel) மற்றும் கரோலா ஆல்டிஸ் 1.4 லிட்டர் டீசல் (Corolla Altis 1.4 Litre Diesel) எஞ்ஜினுடைய கார்களும் இனி இந்தியாவில் கிடைக்காத கார்களாக மாறியிருக்கின்றன. இவையும் பிஎஸ்-4 தர எஞ்ஜினைக் கொண்ட மாடல்களாகும்.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

ஸ்கோடா (Skoda)

புதிய விதியின் தீவிரத்தை தாக்கு பிடிக்க முடியாமல் ஸ்கோடா பிராண்டின் சில கார்களும் இந்தியாவை விட்டு வெளியேறியிருக்கின்றன. இந்த வரிசையில் ஸ்கோடாவின 1.5 முதல் 2.0 லிட்டர் கொள்ளளவுடையை பிஎஸ்-4 தரம் கொண்ட டீசல் எஞ்ஜின்களே அதிகம் நீக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றின் பட்டியல்

ரேபிட் 1.5 லிட்டர் டிடிஐ (Rapid 1.5 Litre TDI)

ஆக்டேவியா 2.0 லிட்டர் டிடிஐ (Octavia 2.0 Litre TDI)

சூப்பர்ப் 2.0 லிட்டர் டிடிஐ (Superb 2.0 Litre TDI)

கோடியாக் 2.0 லிட்டர் டிடிஐ (Kodiaq 2.0 Litre TDI)

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

ரெனால்ட் (Renault)

ரெனால்ட் நிறுவனத்தின் சில பிரபல மாடல் கார்களுக்கும் புதிய பிஎஸ்-6 உமிழ்வு சோகமான சூநிலையை ஏற்படுத்தியுள்ளது.

அவற்றின் பட்டியல்:

டஸ்டர் 1.5 லிட்டர் டீசல் (Duster 1.5 Litre Diesel)

கேப்சர் 1.5 லிட்டர் டீசல் (Captur 1.5 Litre Diesel)

லாட்ஜி 1.5 லிட்டர் டீசல் (Lodgy 1.5 Litre Diesel)

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

Nissan (நிஸ்ஸான்)

ரெனால்ட் நிறுவனத்தின் கார்களைப் போன்று நிஸ்ஸான் நிறுவனத்தின் சில கார்களும் இந்தியாவை விட்டு பிரியா விடைப் பெற்றுள்ளது. அதில், கிக்ஸ் 1.5 லிட்டர் டீசல் (Kicks 1.5 Litre Diesel) மற்றும்

டெர்ரனோ 1.5 லிட்டர் டீசல் (Terrano 1.5 Litre Diesel) ஆகியவை அடங்கும்.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

மஹிந்திரா

இந்திய வாகன உலகில் டாடாவிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனமும் புதிய விதியின் காரணமாக சில கார்களை சந்தையை விட்டு வெளியேற்றியுள்ளது. குறிப்பாக, மஹிந்திரா கேயூவி100 1.2 லிட்டர் டீசல் வகைங்கள் முழுமையாக முடக்கப்பட்டுள்ளன. இதேபோன்று, எக்ஸ்யூவி500 மற்றும் ஸ்கார்பியோவில் சில டீசல் என்ஜின்களயும் நிறுத்த இருக்கின்றது.

ஊரடங்கு உத்தரவு முடிந்தாலும் உங்களால் இனி சில கார்களை இந்தியாவில் எங்குமே வாங்கவே முடியாது.. ஏன் தெரியுமா?

மேற்கூறிய சிறிய டீசல் எஞ்ஜின்களை பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்துவது அதிக செலவீணத்தை ஏற்படுத்தும். இதனால் தற்போது குறைந்த விலையில் காணப்படும் இந்த மாடல்கள் அனைத்தும் விலையுயர்ந்தவையாக மாறிவிடும். ஆகையால், விற்பனையில் கொடி கட்டி பறக்கும் இந்த மாடல்கள், ஒரு யூனிட் கூட விற்பனையாகமல் தேக்கமடைய ஆரம்பிக்கும். இது உற்பத்தி மற்றும் டீலர்களுக்கு பெருத்த இழப்பை ஏற்படுத்தும். இதன் காரணத்தினாலயே வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிறிய டீசல் எஞ்ஜின்களைச் சந்தைவிட்டு வெளியேற்றியுள்ள. இதனாலயே இதனை இனி இந்தியாவில் வாங்கவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Several Manufacturers Have Slimmed Their Diesel Line-Up From India: Here Is The List. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X