நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

நடிகர் சிம்புவுக்கு அவரோட அம்மா உஷா ஆச்சரிய பரிசாக மினி கன்ட்ரிமேன் அதி நவீன சொகுசு காரை வழங்கியிருக்கின்றார். இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

சிம்புவிற்கு அவரது அம்மா உஷா திடீர் அன்பு பரிசு ஒன்றை வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. மினி நிறுவனத்தின் கன்ட்ரீமேன் எஸ் எனும் சொகுசு காரையே அவர் பரிசாக வழங்கியிருக்கின்றார். இது பார்ப்பதற்கு மிகச் சிறிய ஹேட்ச்பேக் காரைப் போன்று காட்சியளித்தாலும் சொகுசு மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கு இதில் பஞ்சம் என்பதே இருக்காது.

நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

எனவேதான் பலரின் கனவு வாகனமாக இக்கார் இருக்கின்றது. அந்தவகையில், நீண்ட நாட்களாக இக்காரின் மீது சிம்புவும் ஆசை வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. இக்கார் படு கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் பலரை அது கவர்ந்து வருகின்றது. இந்த நிலையிலேயே இந்த அதி நவீன சொகுசு காரை சிம்புவிற்கு அவரது அம்மா உஷா பரிசாக வழங்கியிருக்கின்றார்.

நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

சிம்பு வெகு நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தொடர்ச்சியாக படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கின்றார். இதனைத் தொடர்ந்தே அவரை மகிழ்விக்கும் விதமாக மினி கன்ட்ரீமேன் எஸ் கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. சிம்பு மீது தமிழ் திரையுலகில் பல்வேறு தவறான விமர்சனங்கள் நிலவிய வண்ணம் இருக்கின்றது. இவர், படப்பிற்கு சரிவர வர மாட்டார் மற்றும் நீண்ட நாட்களுக்கு படப்பிடிப்பை இழுத்தடிப்பார் என பல விதமான கருத்துகள் முன் வைக்கப்படுகின்றது.

நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

இதனை உடைக்கும் வகையில் நடிகர் சிம்பு தற்போது செயல்பட்டு வருகின்றார். சுசீந்திரன் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட 'ஈஸ்வரன்' படத்தை 40 நாட்களுக்குள்ளாகவே முடித்து கொடுத்துவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதையடுத்து, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் அவர் நடித்து வருகின்றார். இதனையும் மிக விரைவில் அவர் முடித்துக் கொடுப்பார் என நம்பப்படுகின்றது. இவ்வாறு அடுத்தடுத்து படப்பிடிப்புகளில் சிம்பு பிஸியாகியுள்ளார்.

நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

இதன்காரணமாகவே இந்த லக்சூரி கார் பரிசாக வழங்கப்பட்டிருக்கின்றது. சிம்பு முன்பு இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு எடையைக் குறைத்து புதிய நபராக உருவாகியிருக்கின்றார். ஈஸ்வரன் படத்திற்காக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு பல கிலோ வரை எடையை அவர் குறைந்திருந்தார். இந்த கடும் உழைப்பிற்கு தற்போது அவருக்கு பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

மினி நிறுவனம், கன்ட்ரீமேன் காரை இந்தியாவில் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் இக்கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், முந்தைய மாடலைக் காட்டிலும் தற்போது விற்பனையில் இருக்கும் கார் அதிக இடவசதிக மற்றும் லக்சூரி வசதிகளைக் கொண்ட மாடலாக காட்சியளிக்கின்றது.

நடிகர் சிம்புவுக்கு அவங்க அம்மா கொடுத்த ஆச்சரிய பரிசு! இதோட விலையவிட அதுல இருக்கும் சொகுசு வசதி கண்ண கட்டுது!

இத்துடன், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், பிரீமியம் தரத்திலான ஆடியோ சிஸ்டம் மற்றும் ஆம்பிசியன்ட் மின் விளக்கு என எக்கசக்க அம்சங்கள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் இக்கார் விலையுயர்ந்த காராக இருக்கின்றது. இக்கார், ரூ.35 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரையிலான விலையில் விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. புதிய மினி கன்ட்ரிமேன் எஸ் கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் கார்களில் ஒன்று என்பதும் இங்கு கவனிக்க தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Simbu Gets Mini Countryman S Luxury As Gift From Mom Usha. Read In Tamil.
Story first published: Tuesday, December 1, 2020, 13:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X