கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

கெத்தான பாடகர் ஒருவரை விலையுயர்ந்த ஆடம்பர காருடன் காவல்துறையினர் தூக்கியிருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வல்லாவை சண்டிகர் போலீஸார் தண்டித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய அளவிலான ஊரடங்கு நீடித்து வருகின்றது. லேசான தளர்வுகள் வழங்கப்பட்டிருந்தாலும் மக்கள் வழக்கம்போல் நடமாட தடைவிதிக்கப்பட்ட நிலையேக் காட்சியளிக்கின்றது.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

அதிலும், குறிப்பாக தமிழகத்தில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை மக்கள் வெளியில் நடமாடவேக் கூடாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாட்டுக்களைதான் மற்ற மாநில அரசுகளும் கடைபிடித்து வருகின்றன. ஆகையால், போலீஸார் அதிக விழிப்புடன் அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

அந்தவகையில், சண்டிகர் மாநிலத்தில் நிலவி வரும் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அம்மாநில போலீஸார் பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கை பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வைரஸ் பரவலை தடுக்கின்ற பணியில் மிக கடுமையான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

அவ்வாறு, நபா பகுதி காவல்நிலைய போலீஸார் பணியில் ஈடுபட்டிருந்த சாலை வழியாக சொகுசு காரான லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் கார் வந்துள்ளது. அந்த காரில் பிரபல பஞ்சாபி பாடகரான சித்து மூஸ்வல்லா இருந்ததாக அக்காரை மடக்கிய போலீஸார் கூறுகின்றனர்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

மேலும், அக்கார் முழுவதுமாக மறைக்கப்பட்ட கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளைக் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே அவரின் காரை போலீஸார் மடக்கியிருக்கின்றனர். இதுபோன்று மறைக்கப்பட்ட கண்ணாடிகளை வாகனங்களில் பயன்படுத்துவது இந்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி குற்றமாகும். எனவேதான், போலீஸார் அக்காரை மடக்கி பாடகருக்கு அபராத செல்லாணை வழங்கியிருக்கின்றனர்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

இந்த சம்பவம் அரங்கேறுவதற்து சில நாட்களுக்கு முன்புதான் பாடகர் சித்து, லாக்டவுண் உத்தரவை மீறியதாக போலீஸார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுமட்டுமின்றி, சட்டத்திற்கு புறம்பாக நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றத்திற்காகவும் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. எனவே, அவர்மீது குறிப்பிட்ட வழக்குகள் காரணமாக காவல்நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

எனவே, பாடகர் சித்து சர்ச்சையில் சிக்குவது முதல் முறையல்ல என்கின்றது அவரைச் சார்ந்த வட்டாரம். சித்துவின் ரேஞ்ஜ் ரோவர் மட்டுமின்றி அவரது பாதுகாப்பிற்காக அவரையே வலம் வந்துக் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரிலும் கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளேப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், இரு கார்களுக்குமான அபராத செல்லாணையும் நபா பகுதி போலீஸார் அவருக்கு வழங்கினர்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

இந்த சம்பவத்தின்போது பாடகரைக் கண்டதும் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் அங்கு கூட ஆரம்பித்துவிட்டனர். எனவே, சித்து அவர் அணிந்திருந்த துண்டு ஒன்றை வைத்து முகத்தை மறைத்தவாறு அபராத செல்லாண்களைப் பெற்றுச் சென்றார். இந்த சம்பவம் தற்போது பஞ்சாப் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் போலீஸார் முன்பு முகத்தை மூடியவாறு அமர்ந்திருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

பாடகர் சித்து வைத்திருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ஜ் ரோவர் கார் பழைய தலைமுறை மாடல் ஆகும். இந்த காரை அவர் 2013ம் ஆண்டிலிருந்தே பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஸ்யூவி ரக காருக்கு கருப்பு நிற மேட் ஃபினிஷிங் பெயிண்டைக் கொடுத்து அவர் பயன்படுத்தி வருகின்றார்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

இந்த கார்களில் மட்டுமல்ல வேறு எந்த நான்கு சக்கர வாகனங்களிலும் கருப்பு நிற ஜன்னல் கண்ணாடிகளைப் பயன்படுத்தக்கூடாது என இந்திய மோட்டார் வாகனம் கூறுகின்றது. இருப்பினும், ஒரு சிலர் அதிக வெப்பநிலை மற்றும் பிரைவேசி காரணமாக அதுபோன்ற ஜன்னல் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

குற்றச் சம்பவங்களுக்கு வழி வகுக்கும் என்ற காரணத்தினாலயே இதுபோன்ற கண்ணாடிகளுக்கு இந்திய போக்குவரத்து சட்டம் தடை விதித்துள்ளது. அதேசமயம், சில குறிப்பிட்ட முக்கிய நபர்களுக்கு மட்டும் இதுபோன்ற கண்ணாடிகளைப் பயன்படுத்திக் கொள்ள இந்த விதிகள் அனுமதிக்கின்றது. பாதுகாப்பு மற்றும் பிரைவேசி உள்ளிட்ட காரணங்களுக்கு இதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

ஆனால், கருப்பு நிற கண்ணாடிகளை பொருத்துவதற்கு முன்பு அத்துறைச் சார்ந்த அதிகாரிகளியிடம் இருந்து உரிய அனுமதியைப் பெற வேண்டும். இதைக் கடைபிடிக்காமல் பயன்படுத்தும்பட்சத்தில் அபராதம் மற்றும் சம்பவ இடத்திலேயே கண்ணாடிகளை அகற்றும் மேற்கொள்ளப்படலாம். இதனடிப்படையில்தான் பாடகர் சித்துவிற்கு போலீஸார் அபராதம் வழங்கியிருக்கின்றனர்.

போலீஸார் வழங்கும் இந்த அபராதம் மிகக் குறைவானதாக இருப்பதால் பலர் அபராதத்தைப் பெற்றும் தொடர்ச்சியாக பார்வையை மறைக்கும் கருப்பு நிற கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். எனவேதான் சில நேரங்களில் சம்பவ இடத்திலேயே கண்ணாடிகளை அகற்றும் பணியை போலீஸார் மேற்கொள்கின்றனர்.

கெத்தான பாடகரை விலையுயர்ந்த காருடன் கொத்தாக தூக்கிய காவல்துறை... காரணத்தை கேட்டு மிரண்ட ரசிகர்கள்!

ஆனால், பாடகர் சித்து விஷயத்தில் போலீஸார் இதுபோன்ற செயலை மேற்கொள்ளவில்லை. மேலும், அபராதம் எவ்வளவு வழங்கப்பட்டது என்ற தகவலும் கிடைக்கவில்லை. இதேபோன்று, சட்ட விரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்த விவகாரத்திலும் போலீஸார் ஏன் அவரை விடுவித்தனர் என்பது பற்றிய தகவலும் மர்மாகவே உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Singer Sidhu Moosewala Gets Fine For Tinted Glass. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X