கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா கூட்டணி நிறுவனம் இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதி செய்வதில் புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

இந்திய சந்தையில் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவதற்காகவும் மற்ற நடவடிக்கைகளுக்காகவும் செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோவும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனமும் கூட்டணியில் உள்ள விஷயம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

இந்நிறுவனங்களுக்கு இந்தியாவிலும் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் தயாரிக்கப்படும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்வது மட்டுமில்லாமல் விற்பனைக்காக மற்ற நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுவது உண்டு.

கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

அவ்வாறு இந்திய தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மொத்தம் 500,000 கார்களை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் மற்ற நாடுகளுக்கு இதுவரை ஏற்றுமதி செய்து புதிய மைல்கல்லை தொட்டுள்ளது. இந்த வகையில் 5 லட்சமாவது வாகனமாக இடது கை ட்ரைவ் கொண்ட ஃபோக்ஸ்வேகன் வெண்டோ கார் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

இந்த ஃபோக்ஸ்வேகன் கார் புனேவில் உள்ள அந்நிறுவனத்தின் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 5 லட்சமாவது காருடன் மொத்தம் 982 கார்கள் கப்பல் மூலமாக மெக்ஸிகோ நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

மெக்ஸிகோ மட்டுமின்றி தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியா உள்பட வளைகுடா மற்றும் கரீபியன் நாடுகளுக்கும் இந்தியாவில் தயாரிக்கப்படும் கார்களை இந்த கூட்டணி நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

இந்த 2020ஆம் வருடத்தை மட்டும் கணக்கில் எடுத்து பார்த்தோமேயானல், 25,000-க்கும் அதிகமான கார்களை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்த ஆண்டில் தயாரிக்கப்பட்ட மொத்த கார்களின் எண்ணிக்கையில் சுமார் 45 சதவீதமாகும்.

கார்கள் ஏற்றுமதியில் ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணி புதிய சாதனை!

எதிர்காலத்திற்காக புதிய எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரம் என்ற ஆயுதத்தை இந்த கூட்டணி நிறுவனம் கையில் எடுக்கவுள்ளது. இந்த ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் 95 சதவீதம் இந்தியாவில் உருவாக்கப்படும் பாகங்களை வைத்தே தயாரிக்கப்படவுள்ளன. மேலும் வழக்கம்போல் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Skoda Auto VW India exports 500,000th Made-in-India car
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X