யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா... வாடிக்கையாளர்களுக்கான நன்மைகள்

இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனை வர்த்தகத்தை துவங்கி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். ஸ்கோடா பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைப் பிரிவு மூலமாக வாங்கும்போது என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

கொரோனா பிரச்னைக்கு பிறகு வர்த்தகத்தில் நிலைத்தன்மையை கொண்டு வருவதிலும், வருவாயை பெருக்குவதிலும் கார் நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில், புதிய கார் விற்பனை மட்டுமின்றி, கார் குத்தகை திட்டங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைப் பிரிவுகளையும் துவங்கி வருகின்றன.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

இந்த நடவடிக்கை மூலமாக விற்பனையை அதிகரிக்கவும், வருவாயை அதிகரிக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்று கார் நிறுவனங்கள் கருதுகின்றன. மேலும் பெரும் வருவாய் இழப்பை சந்தித்துள்ள தனது டீலர்களுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்க இது வழி வகை செய்யும்.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

இந்த நிலையில், பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையை இந்தியாவில் துவங்கி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். மேலும், அனைத்து நிறுவனத்தின் கார்களையும் வாங்கி விற்பனை செய்யும் வகையில் இந்த பிரிவு செயல்படும். வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரிவு மூலமாக நிம்மதியான பயன்படுத்தப்பட்ட கார் வாங்கும் அனுபவத்தை பெற முடியும் என்று ஸ்கோடா தெரிவிக்கிறது.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

பயன்படுத்தப்பட்ட ஸ்கோடா கார்களை வாங்கி 160 விதமான பரிசோதனைகளை செய்து பழுதுகள் சரிசெய்ப்பட்ட பின்னர் விற்பனை செய்யப்பட உள்ளது. பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கு சிறப்பு தரச்சான்றும் அளிக்கப்படும் என்று ஸ்கோடா தெரிவித்துள்ளது.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

இதுபோன்ற சான்றளிக்கப்படும் பயன்படுத்தப்பட்ட ஸ்கோடா கார்களுக்கு 24 மாதங்கள் அல்லது 1.50 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான சிறப்பு வாரண்டி திட்டமும் வழங்கப்படும். இதர நிறுவனங்களின் கார்களுக்கு 12 மாதங்கள் அல்லது 15,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படும்.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

கோவை, மும்பை, டெல்லி உள்ளடக்கிய வடமத்திய பிராந்தியம், ஜெய்ப்பூர், ஆமதாபாத், சூரத், வதோதரா, ஹைதராபாத் மற்றும் கோவா ஆகிய 9 நகரங்களில் ஸ்கோடா நிறுவனத்தின் பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைப் பிரிவு செயல்படும்.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

பயன்படுத்தப்பட்ட காரை உடனடியாக மதிப்பீடு செய்து தரும் பணி, வாங்கும் நடைமுறைகளுக்கான ஆலோசகர் உள்ளிட்டவை இந்த நகரங்களில் உள்ள பயன்படுத்தப்பட்ட கார் விற்பனைப் பிரிவு மூலமாக பெற முடியும் என்று ஸ்கோடா தெரிவிக்கிறது. பயன்படுத்தப்பட்ட காருக்கான காப்பீடு மற்றும் கடன் திட்டங்களும் உள்ளன.

யூஸ்டு கார் விற்பனையில் இறங்கியது ஸ்கோடா!

பொதுவாக பயன்படுத்தப்பட்ட காரை வாங்கும்போது விபத்தில் சிக்கிய வாகனங்கள், ஆவணங்களில் மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், இவை அனைத்தையும் சரிபார்த்து பின்னர் விற்பனை செய்யப்படுவதுடன் கூடுதல் வாரண்டி திட்டமும் பயன் அளிக்கும் என்று நம்பலாம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto has launched used car business in India.
Story first published: Thursday, October 8, 2020, 6:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X