ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

ஸ்கோடா நிறுவனம் அதன் வருங்கால அறிமுக மாடலான என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலின் டீசர் படங்களை வெளியிட்டுள்ளது. அவற்றின் மூலமாக புதியதாக தெரியவந்துள்ள காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

ப்ராண்டின் முதல் முழு-எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக வெளிவரவுள்ள என்யாக் ஐவி கார் மிக விரைவில் தயாரிப்பு பணியில் உட்படுத்தப்படவுள்ளது. ஏனெனில் வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி ப்ராகுவேயில் இந்த எலக்ட்ரிக் காரை காட்சிப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இதுகுறித்து ஸ்கோடா நிறுவனத்தின் வெளிப்புற டிசைன் பிரிவின் தலைமை அதிகாரி கார்ல் நியூஹோல்ட் கூறுகையில், ஸ்காலா, காமிக் மற்றும் நான்காம் தலைமுறை ஆக்டேவியா ஆகியவற்றின் பண்பை கொண்ட ஸ்கோடா டிசைன் மொழியை மீண்டும் என்யாக் ஐவி காருக்காக உருவாக்கியுள்ளோம்.

ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இதன் காரணமாக சிற்பமான கோடுகள், தெளிவான மேற்பரப்புகள் மற்றும் போஹேமியன் படிகக் கலையிலிருந்து உருவாக்கப்பட்ட படிகக் கூறுகள் போன்றவற்றை என்யாக் ஐவி காரும் கொண்டுள்ளது. இருப்பினும், அதன் விகிதாச்சாரங்கள் எங்கள் முந்தைய எஸ்யூவி மாடல்களிலிருந்து சற்று வேறுபடும்.

ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

அதாவது என்யாக் ஐவி காரானது குறுகிய முன்பக்கத்தையும் நீண்ட ரூஃப்லைனையும் பெற்றுள்ளது என தெரிவித்தார். ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகனின் எம்இபி ப்ளாஃபாரத்தில் தயாரிக்கப்படவுள்ளதால் ஏகப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார் தேர்வுகளை ஸ்கோடா என்யாக் எலக்ட்ரிக் கார் பெறவுள்ளது.

இன்னும் சரியாக கூறினால், 55 கிலோவாட்ஸ், 62 கி.வா, 72 கி.வா என்ற மூன்று விதமான எலக்ட்ரிக் மோட்டார் தேர்வுடன் இந்த எலக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு வரவுள்ளது. இதில் 55 கி.வா மோட்டார் அதிகப்பட்சமாக 146 பிஎச்பி மற்றும் 340 கிமீ ரேஞ்ச்சை வழங்கும் வகையில் இருக்கும்.

ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

அதுவே 62 கி.வா மோட்டார் 177 பிஎச்பி மற்றும் 390 கிமீ ரேஞ்ச்சையும், 72 கி.வா மோட்டார் ஆனது 201 பிஎச்பி மற்றும் 500 கிமீ ரேஞ்ச்சையும் வெளிப்படுத்துபவைகளாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இதில் 72 கி.வா பேட்டரியானது இரு எலக்ட்ரிக் மோட்டார்களுடன் பொருத்தப்படவுள்ளது. அதாவது முன்புறத்திற்கு ஒன்று, பின்புறத்திற்கு ஒன்று.

ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

ஆனால் மற்ற இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் காரின் பின்புறத்தில் மட்டும் தான் பொருத்தப்பட்டிருக்கும். இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய 50 கி.வா விரைவான சார்ஜரையும் 125 கி.வா என்ற அதிவிரைவான சார்ஜரையும் ஸ்கோடா நிறுவனம் இந்த காருக்கு வழங்கவுள்ளது. இதில் அதிவிரைவான சார்ஜர் மூலம் என்யாக் காரை ஒரு மணிநேரத்திற்குள்ளாக 100 சதவீதம் சார்ஜ் செய்துவிட முடியும்.

ஸ்கோடா என்யாக் ஐவி எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் ஸ்கெட்ச் படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் சோதனை ஓட்டங்களின்போது அடையாளப்படுத்தப்பட்டிருந்த இந்த இவி எஸ்யூவி காருக்கு போட்டியளிக்கும் வகையில் இந்திய சந்தையில் எம்ஜி இசட்எஸ் இவி, ஹூண்டாய் கோனா மற்றும் டாடா நெக்ஸான் இவி (காம்பெக்ட் எலக்ட்ரிக் எஸ்யூவி) உள்ளிட்ட மாடல்கள் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Enyaq iV electric crossover SUV debut on Sep 1 – Official sketches
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X