ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

ஸ்கோடாவின் புதிய எஸ்யூவி காரான காமிக் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள ஸ்பை படங்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

இந்தியாவில் புதிய புதிய எஸ்யூவி கார்களால் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவும் சப்-காம்பெக்ட் எஸ்யூவி பிரிவை போலவே வேகமாக வளர்ந்து வருகிறது. இருப்பினும் ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் தயாரிப்பு எதுவும் இந்த பிரிவில் இதுவரை இல்லை.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

ஆனால் இந்த நிலை நீண்ட காலங்களுக்கு இருக்க போவது இல்லை. ஏனெனில் இரு நிறுவனங்களும் தங்களது எஸ்யூவி கார்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றன. இந்த வகையில் ஸ்கோடா நிறுவனம் இந்திய சந்தைக்காக தயாரித்துவரும் மிட்-சைஸ் எஸ்யூவி மாடலே காமிக் ஆகும்.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

அடுத்த 2021ஆம் ஆண்டில் ஏதேனும் ஒரு கால்பகுதியில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்கோடா காமிக் தற்போது சோதனை ஓட்டத்தின்போது கார்ப்ளாக் இந்தியா செய்திதளத்தின் கண்களில் பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்கள் இவையாகும். காமிக், ஸ்கோடாவின் உலகளாவிய தயாரிப்புகளில் மிகவும் சிறிய எஸ்யூவி காராகும்.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடாவின் சர்வதேச லைன்அப்பில் காரோக்கிற்கு அடுத்ததாக நிலைநிறுத்தப்படும் காமிக் எஸ்யூவி, கரோக்-ஐ போல் சிபியூ முறையில்தான் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவுள்ளது. இருப்பினும் இதன் எக்ஸ்ஷோரூம் விலை மலிவானதாகவே நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

இந்தியாவில் ஸ்கோடா கரோக் ரூ.24.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் காமிக்கின் விலையை ரூ.16- 18 லட்சத்தில் எதிர்பார்க்கலாம். கரோக் மற்றும் ஃபோக்ஸ்வேகன் டி-ராக் கார்களை போல் ஸ்கோடா காமிக்கும் ஃபோக்ஸ்வேகனின் எம்க்யூபி ஏ0 ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

அதேநேரம் ஸ்கோடாவின் மற்றொரு எஸ்யூவி காரான விஷன் இன் கான்செப்ட் இதே ப்ளாட்ஃபாரத்தின் இந்திய வெர்சனான எம்க்யூபி ஏ0 இந்தியா-வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. விஷன் இன் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் அதன் எக்ஸ்ஷோரூம் விலை மற்ற இரண்டை காட்டிலும் மிகவும் மலிவானதாக ரூ.10- 17 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

இந்தியாவில் அறிமுகமாகும் காமிக் அதன் சர்வதேச வெர்சனை தான் பெரிய அளவில் ஒத்திருக்கும். இருப்பினும் இந்திய வாடிக்கையாளர்களின் இரசனைக்கு ஏற்ப கூடுதல் க்ரோம்களின் பயன்பாடு இருக்கும். அதேபோல் உட்புற கேபின் பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவற்றுடன் ஸ்கோடாவின் மாடர்ன் அம்சங்களை கொண்டிருக்கும்.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

குறிப்பாக பனோராமிக் சன்ரூஃப்-ஐ புதிய ஸ்கோடா காமிக்கில் எதிர்பார்க்கலாம். மற்ற வெளிநாட்டு சந்தைகளில் மூன்று பெட்ரோல், இரு டீசல் மற்றும் ஒரு சிஎன்ஜி தேர்வுகளுடன் காமிக் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் இந்த எஸ்யூவி காருக்கு வழங்கப்படவுள்ள என்ஜின் தேர்வுகள் என்னென்ன என்பது இதுவரை தெரியவில்லை.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

நமக்கு தெரிந்தவரை ஃபோக்ஸ்வேகன் டி-ராக் மற்றும் ஸ்கோடா கரோக்கில் வழங்கப்பட்டு வருகின்ற 150 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜினை காமிக்கில் எதிர்பார்க்கலாம். இந்த டர்போ என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 7-ஸ்பீடு டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் மட்டும் இணைக்கப்படலாம்.

ஸ்கோடா காமிக் எஸ்யூவி மீண்டும் இந்தியாவில் சோதனை... க்ரெட்டா & கியா செல்டோஸிற்கு வரப்போகும் சவால்...

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்து சந்தைப்படுத்தப்படும் ஸ்கோடா -ஃபோக்ஸ்வேகன் எஸ்யூவி கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ட்ரெண்ட்டை விஷன் இன்-னின் தயாரிப்பு வெர்சன் வெளிவரும் வரை புதிய ஸ்கோடா காமிக் பார்த்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kamiq Spied Testing in India Again; To Rival Hyundai Creta, Kia Seltos
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X