ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் புத்தம் புதிய கரோக் மாடலின் இந்திய அறிமுகத்தை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது. ஏனெனில் தற்சமயம் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் இந்த எஸ்யூவி மாடலின் அறிமுகம் மே 6ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

முன்னதாக ஸ்கோடா நிறுவனம் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து கரோக் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவுகளை ரூ.50,000 தொகையுடன் ஏற்று கொண்டு வருகிறது. மிக குறைவான எண்ணிக்கையில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த கார் முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு வரவுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

இவ்வாறான இறக்குமதி முறையை ஊக்குவிக்கும் விதமாக வருடத்திற்கு 2,500 யூனிட் கார்களை முழுவதும் தயாரிக்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு கொண்டுவந்தால் ஒத்திசைவு தளர்த்தப்படும் என ஏற்கனவே இந்திய அரசாங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

கரோக் எஸ்யூவி காரை மற்ற ஆக்டேவியா, கோடியாக் மற்றும் டியாகுவான் மாடல்களை போன்று எம்க்யூபி ப்ளாட்ஃபாரத்தில் ஸ்கோடா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த கட்டமைப்பில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் கார்களும் விற்பனை போட்டிக்காக தயாரிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

ஸ்கோடா கரோக் மாடலில் பனோரோமிக் சன்ரூஃப், விர்ட்யூவல் காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லேம்ப்கள், 17 இன்ச் அலாய் சக்கரங்கள், 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூல்-ஜோன் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம், எலக்ட்ரிக் மூலமாக 12 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, இபிடியுடன் ஏபிஎஸ் சிஸ்டம், ப்ரேக் அசிஸ்ட், இஎஸ்சி மற்றும் ஒன்பது காற்றுப்பைகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ:நடிகர் விக்ரம்க்காக உருவாகிய மினி சொர்க்கம்.. அடேங்கப்பா இந்த வாகனத்துல இவ்ளோ வசதியா! நம்பவே முடியல!

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

இயக்க ஆற்றலுக்கு கரோக் எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினை ஸ்கோடா நிறுவனம் பொருத்தியுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி பவரையும் 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. ட்ரான்ஸ்மிஷனுக்கு 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: இந்தியாவில் எம்பிவி ரக கார் விற்பனையில் முதலிடத்தில் மாருதி எர்டிகா... மஹிந்திரா பொலிரோவை முந்தியது

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

இந்நிறுவனத்தில் இருந்து அடுத்த மாதம் ஆறாம் தேதி கரோக் எஸ்யூவி கார் அறிமுகமான பிறகு ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்ஸன் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிட வேண்டும். சிபியூ முறையில் இந்த எஸ்யூவி கார் விற்பனை செய்யப்படவுள்ளதால் எக்ஸ்ஷோரூம் விலை சற்று அதிகமாக நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

MOST READ: போர்ஷே நிறுவனத்திற்கு பெருமை தேடி தந்த டைகான்... எவ்வாறு தெரியுமா...?

ஸ்கோடா கரோக் எஸ்யூவியின் இந்திய வருகையில் தாமதம்... மறு அறிமுக தேதி அறிவிப்பு...

ஸ்கோடா நிறுவனம் இவ்வாறு கரோக் மாடலின் இந்திய அறிமுக தேதியை மாற்றி இருப்பது நாம் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான். டிஜிட்டல் மூலமாக அறிமுகம் செய்வது நிகழ்ச்சி மூலமாக அறிமுகம் செய்வதுபோல் இருக்காது என்ற கருத்து ஆட்டோமொபைல் துறையில் பரவலாக உள்ளது. இருப்பினும் கரோக் எஸ்யூவி காரின் அறிமுகத்தில் ஸ்கோடா நிறுவனம் எவ்வாறு செயல்பட உள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Karoq Launch Delayed: Company Reschedules Launch To 6 May
Story first published: Friday, April 10, 2020, 20:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X