ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

வருகிற ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்ற ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. கோடியாக் எஸ்யூவியின் சிறிய அளவு வெர்சன் காராக அறிமுகமாகவுள்ள இந்த கரோக் எஸ்யூவி ஜீப் காம்பஸ் மற்றும் ஹூண்டாய் டக்சன் மாடல்களுக்கு போட்டியாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

ஸ்கோடாவின் கூட்டணி நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் இந்தியா 2.0 தத்துவத்தின் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி கார் தயாரிக்கப்பட்டுள்ளது. செக் ஆட்டோமொபைல் நிறுவனமான ஸ்கோடா, தற்சமயம் புதிய மாடுலர் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தை தனது தொழிற்சாலையில் நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

இதனால் சரியான நேரத்தில் இந்த கட்டமைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் மாடல்களின் அறிமுகத்தை எதிர்பார்க்கலாம். ஸ்கோடாவின் அடுத்த அறிமுக மாடலான இந்த கரோக் எஸ்யூவி சிபியூ முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

இவ்வாறு இந்த 2020 எஸ்யூவி மாடல் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளதால் இந்த காருக்கான இந்திய விலையை தீர்மானிப்பது ஸ்கோடா நிறுவனத்திற்கு தலைவலியை ஏற்படுத்தினாலும், காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ள மற்ற மாடல்களுடன் எந்தவொரு சிக்கலுமின்றி போட்டியிட உதவும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

மேலும் இவ்வாறான விற்பனை முறையால், ஆண்டிற்கு 2,500 யூனிட் கார்களை ஒத்திசைவு செயல்முறைக்கு உட்படுத்தாமல் இந்தியாவில் இறக்குமதி செய்ய முடியும் என்கிற அரசாங்கத்தின் தளர்வையும் ஸ்கோடா நிறுவனத்தால் பெற முடியும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

ஐரோப்பிய நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை ஸ்கோடா நிறுவனம் வழங்கியுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

ஆனால் இந்திய தயாரிப்பு மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக மேம்படுத்தப்பட்ட 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டும் தான் தேர்வாக வழங்கப்படும் என தெரிகிறது. இந்த பெட்ரோல் என்ஜின் 150 பிஎச்பி வரையில் ஆற்றலை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கவல்லது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

இந்த என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன. குறைவான பட்ஜெட் விலையில் தான் இந்த ஸ்கோடா கரோக் மாடல் விற்பனையாகவுள்ளது. இருப்பினும் ஏகப்பட்ட நவீன தொழிற்நுட்பங்களை இந்த எஸ்யூவி கார் கொண்டுள்ளது.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

எல்இடி ஹெட்லைட்ஸ், அலாய் சக்கரங்கள், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கும் வசதி கொண்ட தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ட்யூல்-ஜோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஒன்றுக்கும் மேற்பட்ட காற்றுப்பைகள், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், எபிடி, க்ரூஸ் கண்ட்ரோல், மாற்றியமைக்கக்கூடிய வசதியை பெற்ற முன்புற இருக்கைகள் உள்ளிட்டவை இந்த காரில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் ஆகும்.

ஸ்கோடா கரோக் எஸ்யூவி மாடல் முழு மறைப்புடன் சோதனை ஓட்டம்..!

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப முழுக்க முழுக்க எஸ்யூவி கார்களின் தயாரிப்பில் இறங்க ஸ்கோடா இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் எஸ்யூவி அளவில் தயாரிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம், இந்திய சந்தையில் ஸ்கோடா காமிக் மாடலுக்கு கிடைத்துள்ள வரவேற்பு இந்த மாடலுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கமாக தான் இருக்கும்.

Source: Rushlane

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Karoq SUV for India interiors and exterior spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X