ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா நிறுவனம் கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சனை உருவாக்கியுள்ளது. லிமிடேட்-எடிசனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய வெர்சன் கார் முற்றிலும் கோடியாக் ஆர்எஸ் மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

இந்தியாவிலும் அறிமுகமாகக்கூடும் என எதிர்பார்க்கப்படும் இந்த காரின் பெயருக்கு ஏற்ப ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலில் இருந்து செயல்படுதிறனில் எந்த அப்கிரேட்டையும் பெறவில்லை. மாறாக தொழிற்நுட்பங்களில் தான் சில அப்டேட்களை ஏற்றுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

இந்த கூடுதல் தொழிற்நுட்ப வசதிகளில் ட்ரைவிங்கிற்கு உதவியாக 2.0 பேக்கேஜ், 9 காற்றுப்பைகள், ஹீட்டட் ஸ்டேரிங் சக்கரம் மற்றும் 9.2 இன்ச் கொலம்பஸ் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்கும். ட்ரைவிங்கிற்கு உதவியாக கொடுக்கப்பட்டுள்ள 2.0 பேக்கேஜ்ஜின் மூலமாக சில உதவி வசதிகளை பெற முடியும்.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

இந்த உதவி வசதிகள் லேன் சேலன்ஞ் அசிஸ்டண்ட், லேன் மெயிண்டனஸ் அசிஸ்டண்ட், ட்ராஃபிக்கை அடையாளம் கண்டு செயல்படும் வசதி, பார்க்கிங் அசிஸ்டண்ட், போக்குவரத்து நெரிசலை சமாளிக்க உதவி மற்றும் ஆர்எஸ் கிராஃபிக்ஸ் உடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

இயக்கத்திற்கு ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் சேலன்ஞ் மாடலில் இந்நிறுவனத்தின் ஆற்றல்மிக்க 2.0 லிட்டர் பை-டர்போ 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 240 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

இந்த இரட்டை-டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 4-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படவுள்ளது. கோடியாக் ஆர்எஸ் மாடலின் இந்த சேலன்ஞ் வெர்சன் 0-லிருந்து 100 kmph என்ற வேகத்தை 6.9 வினாடிகளில் அடைந்துவிடும். இந்த காரின் அதிகப்பட்ச வேகம் 221 kmph ஆகும்.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

விரைவாக இடம்பெயர விரும்பும் குடும்பங்களுக்கு ஏற்ற வாகனமாக இருக்கும் இந்த புதிய வெர்சன் 16.12 kmpl மைலேஜ்ஜை வழங்கவல்லது. வெறும் 300 யூனிட்களில் மட்டுமே விற்பனைக்கு வரவுள்ள கோடியாக் ஆர்எஸ் சேனலஞ் மாடலின் விலை செக் குடியரசு நாட்டில் CZK 13,99,900 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.42,43,360 ஆகும்.

ஸ்கோடா கோடியாக் ஆர்எஸ் மாடலின் புதிய சேலன்ஞ் வெர்சன் விற்பனைக்கு வருகிறது..!

ஸ்கோடா நிறுவனம் கோடியாக் ஆர்எஸ் மாடலை 2020ஆம் வருடத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த ஆண்டில் அறிவித்திருந்தது. இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.40-45 லட்சமாக நிர்ணயிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Kodiaq RS Challenge revealed, priced at INR 42 lakh
Story first published: Wednesday, April 22, 2020, 22:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X