2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

ஒரே ஒரு ஓட்டுனர் இரு கார்களை இயக்கிய சம்பவம் உலகம் முழுவதும் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த தகவலையே இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

எஞ்ஜின் கோளாறு அல்லது பிரேக் டவுண் ஆகிய காரணங்களுக்காக ஒரு காரை மற்றொரு கார் டோவ் செய்வது போன்ற வீடியோ நாம் பார்த்திருப்போம். சில நேரங்களில் மீட்பு வாகனங்கள் (Recovery Van) செயலற்ற வாகனங்களை இழுத்துச் செல்வதைக்கூட நாம் கண்டிருப்போம். இம்மாதிரியான சூழ்நிலையில் கயிறு மற்றும் சங்கிலி போன்ற எந்த இணைப்பும் இல்லாமல் ஒரு காரில் இருந்தே மற்றொரு காரை, ஒற்றை வாகன ஓட்டி இயக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

இது எப்படி சாத்தியம்?, என்று தானே கேட்குறீங்க. இந்த நவீன காலத்தில் அனைத்துமே சாத்தியமே. ஆமாங்க, உலக புகழ்பெற்ற ஸ்கோடா நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை வடிவமைத்து வருகின்றது. அது ஒரு காரில் இருந்தே மற்றொரு காரைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகும். அதாவது, ஓட்டுனர் இருக்கும் காருக்கு கொடுக்கப்படும் கட்டளைகளை ஓட்டுனரில்லா (ஆளே இல்லா) காரும் ஏற்கும் தொழில்நுட்பத்தை அது உருவாக்கியுள்ளது.

2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

இதைக் கொண்டே ஓர் காரில் இருந்து மற்றொரு காரை ஓட்டுனரால் கட்டுப்படுத்த முடிந்துள்ளது. இதன்மூலம் தன்னாட்சி கார் இயக்கத்தின் வரலாற்றில் அடுத்தபடி நிலைக்கு ஸ்கோடா உயர்ந்துள்ளது. இதனை செக் குடியரசின் ஒஸ்ட்ராவா தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - விஎஸ்பி உடன் இணைந்தே ஸ்கோடா உருவாக்கியுள்ளது.

2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

'வாகனத்தை பின்தொடர்' (Follow the Vehicle) எனும் இந்த தொழில்நுட்பம் ஓட்டுநர்களுக்கான உதவியாளர்கள் சிஸ்டத்தை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தொழில்நுட்பம் பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டு வருகின்றது. ஸ்கோடாவின் சூப்பர்ப் ஐவிஎஸ் (Superb iVs) எனும் மாடலிலேயே இந்த புதிய தொழில்நுட்பம் நிலை நிறுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

புதிய தொழில்நுட்பம் காரை டெலிவரி கொடுப்போர் மற்றும் வாடகை வாகன சேவையில் ஈடுபடுவோருக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என கருதப்படுகின்றது. குறிப்பாக, பார்க்கிங் மற்றும் பிரேக்டவுண் ஆன வாகனங்களைக் கையாள்வதில் இந்த தொழில்நுட்பம் மிகுந்த பயனளிக்கும்.

2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

கார்-டூ-எக்ஸ் (Car-to-X) இந்த தொழில்நுட்பத்தின் மூலமே ஒரு காரில் இருந்து மற்றொரு காரை இயக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது. இந்த தொழில்நுட்பமானது 4ஜி, எல்டிஇ மற்றும் 5ஜி ஆகிய நெட்வொர்க்குகளின் அடிப்படையில் இயங்கும். அதாவது இணைய இணைப்பின் மூலமாகவே செயல்படும். மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் ப்ளூடுத் ஸ்பீக்கர்களை செல்போன் மூலம் இணைத்து, கட்டுவதைப் போன்று இதன் செயல்பாடு இருக்கும்.

2 கார்களை இயக்கிய ஒரு ஓட்டுனர்... எப்படிங்க இது சாத்தியமாக முடியும்?.. இதோ முழு விபரம்!

இதன்படி, ஓர் காரை இணைக்கும்போது குறிப்பிட்ட இடைவெளியுடன் அந்த ஆளில்ல கார் பின் தொடரும். மேலும், இணைக்கப்பட்ட கார் எந்த வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்திலேயே ஆளில்லா காரும் பின் தொடரும். தொடர்ந்து, ஓட்டுநர் இருக்கும் கார் எந்தெந்த செயலை எல்லாம் செய்கின்றதோ அதே செயலையே அதுவும் செய்யும். அதாவது, இன்டிகேட்டர், ஹார்ன், பிரேக், வலது-இடது திரும்புவது என அனைத்தையுமே கார் செய்யும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

குறிப்பு: குறிப்பிட்ட சில காரணங்களுக்கு தகவல்குறித்த வீடியோவை இங்கு பதிவிட முடியாததற்கு நாங்கள் வருந்துகின்றோம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Makes New Tech 'Follow The Vehicle'. This Makes Your Car Follow A Manned One. Read In Tamil.
Story first published: Monday, November 23, 2020, 11:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X