ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளன. ஸ்பை படங்கள் மற்றும் அறிமுக விபரங்களை இந்த செய்தியில் தொடர்ந்து படிக்கலாம்.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

இந்தியாவில் புரொஜெக்ட் 2.0 என்ற திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை வளர்ச்சிப் பாதையில் தூக்கி நிறுத்தும் திட்டங்களை ஸ்கோடா கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பல புதிய எஸ்யூவி மாடல்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

அந்த வகையில், புத்தம் புதிய மிட்சைஸ் எஸ்யூவி மாடலையும் விரைவில் அறிமுகம் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் ஸ்கோடா ஈடுபட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த ஸ்கோடா விஷன் ஐஎன் கான்செப்ட் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவி மாடல் வர இருக்கிறது.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

புதிய ஸ்கோடா எஸ்யூவி மாடலானது சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. மும்பையில் சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்டு இருக்கும் ஸ்கோடா மிட்சைஸ் எஸ்யூவியின் ஸ்பை படங்கள் டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு கிடைத்துள்ளது.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

கான்செப்ட் நிலை மாடலுக்கும் தயாரிப்பு நிலை மாடலுக்கும் பெரிய அளவிலான வித்தியாசங்கள் இருக்காது என்று தெரிகிறது. எல்இடி ஹெட்லைட், எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்கோடாவின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, கவர்ச்சியான அலாய் வீல்கள், பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள், ஸ்கிட் பிளேட்டுகள் என சிறந்த எஸ்யூவி மாடலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெறும் என்று தெரிகிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

புதிய ஸ்கோடா மிட்சைஸ் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. டீசல் எஞ்சின் தேர்வு இருக்க வாய்ப்பில்லை. இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

மற்றொரு 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மேனுவல் மற்றும் டிஎஸ்ஜி கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும் வாய்ப்புகள் உள்ளன.

ஸ்கோடாவின் புதிய மிட்சைஸ் எஸ்யூவியின் பிரத்யேக ஸ்பை படங்கள்

வரும் ஆண்டு ஜனவரி- மார்ச் இடையிலான காலக் கட்டத்தில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா உள்ளிட்ட கார் மாடல்களுக்கு மிக நேரடி போட்டியாக நிலைநிறுத்தப்படும். ரூ.10 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda will soon launch a new SUV that is specifically made for the Indian market. Ahead of its launch, the SUV has been spotted several times testing in the country. The latest set of spy images reveals the Vision IN testing in Mumbai with complete camouflage. The SUV is using camouflage to hide the design and crease lines of the upcoming SUV.
Story first published: Saturday, December 5, 2020, 16:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X