2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

கடந்த சில வருடங்களாக இந்திய சந்தையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத ஸ்கோடா நிறுவனம் 2020ல் அதை மாற்றி காட்டும் என்றே தெரிகிறது. சமீபத்தில் புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலை சந்தைக்கு கொண்டுவந்த இந்நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட ரேபிட் மாடலுக்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

ஸ்கோடா கரோக்

ஸ்கோடா நிறுவனம் காம்பஸ் வடிவிலான கரோக் எஸ்யூவி மாடலுக்கான முன்பதிவுகளையும் துவங்கியுள்ளது. நீண்ட காலமாக வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பில் உள்ள இந்த கார் யெட்டி க்ராஸ்ஓவரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பயன்படுத்தப்பட்ட உலோகம் வித்தியாசப்படும் என தெரிகிறது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

அதேபோல் ஸ்கோடா யெட்டி கார் டீசல் வேரியண்ட்டில் மட்டும் தான் சந்தைப்படுத்தப்பட்டது. கரோக் எஸ்யூவி பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் என்ஜினை பெற்றுள்ளது. இந்த காரில் வழங்கப்படவுள்ள 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின், 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் 150 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கும்.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

மற்ற மாடல்களில் இருந்து வேறுபடுவதற்காக இந்த காரில் ஸ்கோடா நிறுவனம் பனோராமிக் சன்ரூஃப், காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 8.0 இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், இரு நிலைகளில் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் 9 காற்றுப்பைகள் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளன. தற்சமயம் உலகம் முழுவதும் நிலவிவரும் இக்கட்டான சூழ்நிலை சரியானவுடன் சில மாதங்களுக்கு பிறகு அறிமுகமாகவுள்ள இந்த காரின் எக்ஸ்ஷோரூமின் விலை ரூ.25 லட்சத்தில் நிர்ணயிக்கபட அதிக வாய்ப்புள்ளது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

ஸ்கோடா கோடியாக் பெட்ரோல்

புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக வாகனங்கள் அப்டேட் செய்யப்பட்டு வருவதால் ஸ்கோடா கோடியாக் மாடலின் டீசல் வேரியண்ட்டின் தயாரிப்பு மற்றும் விற்பனை இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள இதன் பெட்ரோல் மாடல் காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 190 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும். இந்த என்ஜின் மாற்றம் தவிர்த்து புதிய கோடியாக் மாடலில் வேறெந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. இதன் டாப் எல்&கே வேரியண்ட் பனோராமிக் சன்ரூஃப், காக்பிட் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பெரிய அளவிலான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் போன்றவற்றை கூடுதலாக பெற்றுள்ளது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

இந்த ஆண்டு இறுதியில் ரூ.33 லட்ச ஆரம்ப விலையுடன் சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளதாக கூறப்படும் இந்த பெட்ரோல் கார் ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான டிகுவான் ஆல்ஸ்பேஸ், ஹூண்டாய் டக்ஸன் மற்றும் ஹோண்டா சிஆர்-வி உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடவுள்ளது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

ஸ்கோடா விஷன் இன்

ஸ்கோடாவின் இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்டுள்ள விஷன் இன் எஸ்யூவி கார் கடந்த பிப்ரவரி மாத துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சியிலும் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. இதேபோல் இந்நிறுவனத்தின் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்ட முதல் மாடலாகவும் விளங்கும் இந்த எஸ்யூவி காரின் 95 சதவீத பாகங்கள் இந்தியாவில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

அளவில் மிக பெரியதாக ஸ்கோடா விஷன் இன் எஸ்யூவி கார் இல்லாவிட்டாலும், இதன் முரட்டுத்தனமான தோற்றம் நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும். அதிக அளவில் வீல்ஸ்பேஸ் அளவை கொண்டிருப்பதால் உட்புறத்தில் கேபினை சற்று பெரியதாக எதிர்பார்க்கலாம்.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

அதேபோல் உட்புறத்தில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், ட்ரைவ் மோட்கள் மற்றும் பனோராமிக் சன்ரூஃப் உள்ளிட்ட வசதிகளையும் எதிர்பார்க்கலாம். ஸ்கோடா நிறுவனம் இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் 115 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. மற்றொரு என்ஜின் தேர்வாக 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது. இவற்றுடன் சிஎன்ஜி வேரியண்ட்டும் சில மாதங்கள் கழித்து வழங்கப்படவுள்ளது.

2020ல் எதிர்பார்க்கப்படும் ஸ்கோடாவின் புதிய 3 எஸ்யூவி கார்கள்... இவை தானாம்...

இந்த புதிய ஸ்கோடா மாடலின் இந்திய அறிமுகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது ஜூன் மாதத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள விஷன் இன் எஸ்யூவி காரின் விலை கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு இணையாக ரூ.10 லட்சத்தில் நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
New Skoda SUVs for India – What’s coming and when?
Story first published: Monday, March 30, 2020, 20:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X