டீலர்களை சென்றடைந்தது புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

கடந்த மாதத்தில் முன்பதிவு துவங்கியதை அடுத்து இன்று ஸ்கோடாவின் புதிய ஆக்டேவியா மாடல் டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த செய்தியில் காண்போம்.

டீலர்களை சென்றடைந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளதால் புதிய ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலின் டெலிவிரிகள் தற்சமயம் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் தணிந்தவுடன் ஆரம்பமாகவுள்ளது.

டீலர்களை சென்றடைந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் மிகவும் சக்தி வாய்ந்த வெர்சனாக சந்தைக்கு வரும் ஆக்டேவியா ஆர்எஸ்245 மால் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிலும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் பலரது கவனத்தை ஈர்த்த இந்த காருக்கு சந்தையில் மிக பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டீலர்களை சென்றடைந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

வெறும் 200 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள இந்த காருக்கான முன்பதிவுகள் ரூ.1 லட்சத்தில் நடைபெற்று வருகிறது. எக்ஸ்ஷோரூமில் ரூ.3.99 லட்சத்தை விலையாக கொண்டுள்ள இந்த காருக்கு ராலி க்ரீன், ரேஸ் ப்ளூ, கொரிடா ரெட், மேஜிக் ப்ளாக் என்ற 5 நிறத்தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

டீலர்களை சென்றடைந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

புதிய ஆக்டேவியா ஆர்எஸ்245 மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை ஸ்கோடா நிறுவனம் பொருத்தியுள்ளது. 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 245 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும்.

டீலர்களை சென்றடைந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

0-விலிருந்து 100 kmph வேகத்தை 6.6 வினாடிகளில் எட்டக்கூடிய இந்த கார் அதிகப்பட்சமாக 250 kmph வேகம் வரை இயங்கக்கூடியது. தற்போதைய ஆக்டேவியா மாடலில் இருந்து வேறுப்படுவதற்காக தேன் கூடு வடிவிலான ஏர் டேம், கருப்பு நிற ஹெட்லைட், 18 இன்ச் இரட்டை வண்ண அலாய் சக்கரங்கள், கருப்பு நிற ஸ்பாய்லரை பெற்றுள்ளது.

டீலர்களை சென்றடைந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

பாதுகாப்புக்கு 9 காற்றுப்பைகள், அடாப்டிவ் லைட் சிஸ்டம், ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ப்ரேக் டிஸ்ட்ரீபியூஷன் சிஸ்டம், ஹைட்ராலிக் ப்ரேக் அசிஸ்ட் உள்ளிட்டவை கொடுக்கப்பட்டுள்ளன.

டீலர்களை சென்றடைந்தது ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ்245...

சிபியூ முறையில் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த கார் டீலர்ஷிப்களுக்கு சென்றடைந்துள்ளதால் இந்த காரின் விற்பனை இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது. மேலும் டீலர்ஷிப்களில் உள்ள இந்த காரின் ஸ்பை புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

Source: Team BHP

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Octavia RS 245 Arrives At Dealerships: Deliveries To Begin Soon
Story first published: Monday, April 6, 2020, 20:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X