இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

இங்கிலாந்து நாட்டு போலீசாரின் ரோந்து பணிக்காக நான்காம் தலைமுறை ஆக்டேவியா ஆர்எஸ் காரை அனுப்பி வைக்க ஸ்கோடா தயாராகி வருகிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

உலகளவில் பிரபலமான கார்கள் பல நாட்டு போலீசாரின் படை வாகனங்களில் இணைக்கப்பட்டதை பலமுறை நமது செய்திதளத்தில் பார்த்துள்ளோம். துபாய், மலேசியா நாட்டு போலீசார் புகாட்டி, லெக்ஸஸ் போன்ற லக்சரி கார்களை பயன்பாட்டிற்கு கொண்டுவந்து ஆச்சிரியப்படுத்தி இருந்தனர்.

இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

ஏன் சில நாட்டு போலீசார்களிடம் டெஸ்லா எலக்ட்ரிக் கார்கள் கூட உள்ளன. இந்த வகையில் ஸ்கோடாவின் செயல்திறன்மிக்க செடான் மாடலான ஆக்டேவியா ஆர்எஸ்-இன் நான்காம் தலைமுறை கார் யுகே நாட்டு போலீசாரின் ரோந்து படை வாகனமாக இணையவுள்ளது.

இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

போலீசாரின் பயன்பாட்டிற்காக கஸ்டமைஸ்ட் பெயிண்ட்டில் முன் கண்ணாடியின் பின்பகுதி, டெயில்கேட், க்ரில் மற்றும் நம்பர் ப்ளேட் உள்ளிட்டவற்றில் 360-கோணத்திற்கு ஒளி ஏற்படுத்தக்கூடிய ஆற்றல்மிக்க எல்இடி சிக்னல் விளக்குகளை இந்த செடான் காரில் ஸ்கோடா நிறுவனம் பொருத்தியுள்ளது.

இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

இதுமட்டுமில்லாமல் 3-நிறங்களில் சைரனையும் போலீசாருக்காக ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் ஏற்றுள்ளன. இந்த செயல்திறன்மிக்க கார்களில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு 4-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 245 பிஎச்பி மற்றும் 370 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

அதிகப்பட்சமாக மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த ஸ்கோடா கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.7 வினாடிகளில் எட்டிவிடும். இதன் 2020 வெர்சனில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், புதிய டிசைனில் டேஸ்போர்டு, அல்காண்ட்ரா, சிவப்பு & சில்வர் நிறங்களில் பளிச்சிடும் தையல்கள் உள்ளிட்டவை சிறப்பம்சங்களாக வழங்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

இவற்றுடன் காரின் கேபின் பிரத்யேக கிராஃபிக்ஸ் மற்றும் 10 இன்ச் மல்டிமீடியா சிஸ்டத்துடன் 10.25 இன்ச்சில் முழு டிஜிட்டல் இன்ட்ரூமெண்டேஷன், வெவ்வேறான கியர் விகிதத்துடன் ஸ்டேரிங் கியர், 18 (அல்லது 19) இன்ச்சில் கூடுதல் ஆற்றல்மிக்க ப்ரேக்குகள் மற்றும் சக்கரங்கள் உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளது.

இங்கிலாந்து போலீசாரின் ரோந்து பணிக்கு இப்படிப்பட்ட காரா!! மணிக்கு 250கிமீ வேகத்தில் இயங்கக்கூடியது

மேலும் க்ரோம் டிசைனில் பொத்தான்கள் மற்றும் புதிய க்னுர்லெட் சக்கரங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் டிஎஸ்ஜி வசதி கொண்ட ஷிஃப்ட் பெடல்கள் உள்ளிட்டவற்றையும் வாகனங்கள் ஏற்றுள்ளன. இவை அனைத்தினாலும்தான் இங்கிலாந்து அரசாங்கம் போலீசாரின் பணிக்காக ஆக்டேவியா ஆர்எஸ் செடான் காரை தேர்வு செய்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Fourth-gen Skoda Octavia RS now ready to join UK police fleet
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X