ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

ஸ்கோடா நிறுவனம் ஆர்எஸ்245 என்ற புதிய வேரியண்ட்டின் மூலம் ஆக்டேவியா ஆர்எஸ் மாடலை இந்தியாவில் மீண்டும் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் இந்நிறுவனம் இந்த புதிய வேரியண்ட்டின் டீசர் வீடியோ ஒன்றை புதிதாக தனது யூடியுப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

இதன்மூலம் ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியாகியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய டீசரில் இந்த ஆர்எஸ்245 வேரியண்ட் வருகிற 5ஆம் தேதி டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெறும் 200 யூனிட்களில் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் இந்த புதிய வேரியண்ட் முந்தைய தலைமுறை ஆர்எஸ்230 காரை விட அதிக எரிபொருள் திறனை பெற்றுள்ளது. ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் முதல் தலைமுறை காரை கடந்த 2017ல் ஸ்கோடா நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

அறிமுகத்திற்கு முன்னதாக இந்த மாடலுக்கு சந்தையில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருந்ததால், ஸ்கோடா நிறுவனம் நினைத்திருந்ததை விட அதிகமாக 300 யூனிட் கார்களின் விற்பனையை மிக விரைவாகவே பதிவு செய்தது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

அதன்பின்னும் கூடுதலாக 200 யூனிட் கார்களின் விற்பனை எண்ணிக்கையை குறைவான நேரத்தில் அடைந்திருந்த ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் விற்பனை மொத்தமாக 500 யூனிட்கள் கடந்தபின் நிறுத்தி கொள்ளப்பட்டது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

ஸ்கோடா ஆக்டேவியா மாடலின் முந்தைய தலைமுறை காரான ஆர்எஸ்230-ல் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டிருந்தது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 5,500- 6,200 ஆர்பிஎம்-ல் 230 பிஎச்பி பவரையும் 1,500- 4,500 ஆர்பிஎம்-ல் 350 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

இந்த புதிய ஆர்எஸ்245 வேரியண்ட்டில் அதே 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த என்ஜின் சற்று அதிகமாக 5,000- 6,700 ஆர்பிஎம்-ல் 245 பிஎச்பி பவரையும் 1,600-4,300 ஆர்பிஎம்-ல் 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.

ஆக்டேவியா மாடலின் இந்த புதிய வேரியண்ட்டிற்கு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளன. சிறந்த ஹேண்டிலிங்கிற்காக பின்புற ட்ராக் 30மிமீ கூடுதல் அகலமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

முந்தைய தலைமுறை காரில் இருந்து இந்த புதிய வேரியண்ட் கூடுதலாக க்ளாசிக், பேஸிக், எக்ஸ்டெண்டட் மற்றும் மாடர்ன் என்ற நான்கு வகையான மோட் தேர்வுகளை கொண்ட 10.25-இன்ச் முழுவதும் டிஜிட்டலில் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை அப்டேட்டாக பெற்றுள்ளது.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

இந்த கார் 0-லிருந்து 100kmph என்ற வேகத்தை ஆக்டேவியா ஆர்எஸ்230 வேரியண்ட்டை விட 0.1 வினாடிகள் முன்னதாகவே 6.6 வினாடிகளில் எட்டி விடுகிறது. இந்த புதிய வேரியண்ட்டின் அதிகப்பட்ச வேகம் 250kmph ஆகும்.

ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் மாடலின் மறு அறிமுகம் உறுதியானது.. புதிய வேரியண்ட்டின் டீசர் வெளியீடு...!

இந்தியாவில் பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இங்குள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனையாகவுள்ள இந்த ஆக்டேவியா ஆர்எஸ்245 வேரியண்ட்டின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.35 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே சிபியூ முறையில் இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்ட இதன் முந்தைய தலைமுறை ஆர்எஸ்230 மாடல் ரூ.24.62 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Octavia RS 245 India Launch Confirmed
Story first published: Wednesday, January 29, 2020, 15:25 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X