அட்ராசக்கை... இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய மார்க்கெ்டடில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கு ஒரு முடிவோடு முண்டாசு கட்டி களமிறங்கி உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவையை வழங்கும் விதத்தில், டீலர் கட்டமைப்பை இந்தியாவில் வெகுவாக அதிகரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

 இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் கார்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. நேர்த்தியான டிசைன், வலுவான கட்டமைப்பு,, சிறந்த எஞ்சின் தேர்வுகளுடன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. எனினும், விற்பனைக்கு பிந்தைய சேவையிலும், டீலர் நெட்வொர்க்கிலும் பின்தங்கி இருக்கிறது.

 இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

இது ஸ்கோடா பிரியர்களுக்கும், அதன் வாடிக்கையாளர்களுக்கும் நீண்ட கால பிரச்னையாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், அந்த பிம்பத்தை மாற்றும் முயற்சியில் ஸ்கோடா ஆடடோ ஈடுபட்டுள்ளது.

 இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

மேலும், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் விதத்தில், பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, பல புதிய மாடல்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளுடன் சேர்த்து, டீலர்கள் விரிவாக்கப் பணியிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

 இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

புராஜெக்ட் 2.0 இந்தியா திட்டத்தின் கீழ் வரும் 2022ம் ஆண்டுக்குள் டீலர்கள் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்துவதற்கு ஸ்கோடா ஆட்டோ திட்டமிட்டுள்ளது.

 இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

கொரோனா பிரச்னைக்கு முன்னதாக 124 புதிய டீலர்களை இந்த ஆண்டுக்குள் திறப்பதற்கு ஸ்கோடா ஆட்டோ முடிவு செய்திருந்தது. ஆனால், தற்போது அதனை 100 புதிய டீலர்கள் என்ற இலக்குடன் செயலாற்றி வருகிறது.

 இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

அதேநேரத்தில், அடுத்த ஆண்டு முற்பாதியில் மேலும் 30 டீலர்கள் என்ற இலக்குடன் 130 புதிய டீலர்களை திறப்பதற்கு முடிவு செய்திருப்பதாக ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஸாக் ஹொல்லிஸ் தெரிவித்துள்ளார்.

 இந்த ஆண்டுக்குள் 100 புதிய டீலர்களை திறக்கும் ஸ்கோடா!

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் டீலர்கள் இருக்குமாறு நகரங்களை தேர்வு செய்து, புதிய டீலர்களை நியமித்து வருகிறது ஸ்கோடா ஆட்டோ. மேலும், புதிய மாடல்கள் மூலமாக குறிப்பிடத்தக்க இடத்தை பிடிப்பதற்கு ஸ்கோடா திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda is planning to add 100 new dealers in India by end of this year.
Story first published: Monday, September 21, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X