புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்

புதிய பெட்ரோல் எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. போட்டியாளர்களை ஒப்பிடும்போது சில லட்சங்கள் குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டு அசத்தி இருக்கிறது ஸ்கோடா ஆட்டோ நிறுவனம். கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

ஸ்கோடா ஆட்டோ நிறுவனம் இந்திய கார் சந்தையை ஒரு கை பார்க்கும் முடிவோடு பல திட்டங்களை கையில் எடுத்துள்ளது. அதன்படி, ஆட்டத்தை இன்று துவங்கி இருக்கிறது. கொரோனா பிரச்னையால் ஆட்டோமொபைல் துறை முடங்கி நிலையில், இன்று மூன்று புதிய கார் மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதில், ரேபிட் பிஎஸ்6 மாடலும் ஒன்று. இந்த காரை மிக சவாலான விலையில் களமிறக்கி போட்டியாளர்களை மிரள வைத்துள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடல் கடந்த பிப்ரவரி மாதமே இந்திய ஆட்டோ எக்ஸ்போவில்பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. கொரோனா ஊரடங்கு பிரச்னையால், சற்று தாமதமாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் நீக்கப்பட்டுவிட்டன. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் புதிய ஸ்கோடா ரேபிட் கார் வந்துள்ளது. இந்த எஞ்சின் செயல்திறனிலும், எரிபொருள் சிக்கனத்திலும் இந்திய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை தக்க வைக்கும் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

இந்த காரில் வழங்கப்பட்டுள்ள புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ பெட்ரோல் எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் பெட்ரோல் எஞ்சின் லிட்டருக்கு 18.97 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பழைய ரேபிட் காரில் வழங்கப்பட்டு வந்த 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை விட இது 23 சதவீதம் கூடுதல் மைலேஜை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய பிஎஸ்6 எஞ்சின் தவிர்த்து, இந்த காரில் கூடுதலாக புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இடம்பெற்று இருக்கின்றன.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

மேலும், தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகளுடன் ஸ்டீயரிங் வீல் ஆகியவை உட்புறத்தில் முக்கிய அம்சங்களாக கூறலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய ஸ்கோடா ரேபிட் கார் பிரில்லியண்ட் சில்வர், கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல், கேண்டி ஒயிட், லேபிஸ் புளூ, டாஃபி பிரவுன் மற்றும் ஃப்ளாஷ் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய ஸ்கோடா ரேபிட் கார் ரைடர், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். வசதிகள் மற்றும் வண்ணத் தேர்வுகளை பொறுத்து வாடிக்கையாளர் விருப்பம்போல் தேர்வு செய்து கொள்ளலாம்.

புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத ஆரம்ப விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்!

புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலுக்கு ரூ.7.49 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கும். ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களைவிட மிகப்பெரிய விலை வித்தியாசத்தில் விற்பனைக்கு வந்துள்ளது புதிய ஸ்கோடா ரேபிட் கார். மாருதி சியாஸ் காரைவிடவும் விலை குறைவான தேர்வாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has launched Rapid BS6 model with all new 1.0 liter TSI petrol engine option in India prices starting at Rs.7.49 Lakhs (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X