ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் தனித்துவமான வாடிக்கையாளர் வட்டத்தை ஸ்கோடா ரேபிட் கார் பெற்றிருக்கிறது. டிசைன், கட்டுமானம், சிறந்த எஞ்சின் தேர்வுடன் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை வசமாக்கி உள்ளது.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் ஸ்கோடா ரேபிட் கார் கடந்த பிப்ரவரி மாதமே ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடலானது லாக்டவுன் முடிந்த உடன் சந்தைக்கு விரைவில் வர இருக்கிறது.

MOST READ: லாக்டவுன் நேரத்திலும் புதிய பைக் மாடலை களமிறக்க தயாராகும் டுகாட்டி...

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்ட மாடலில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 113 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் வர இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

ஏற்கனவே இருந்த 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் எஞ்சின் தேர்வுகள் விலக்கப்பட்டுள்ளன. பிஎஸ்4 எஞ்சின்களை விட தற்போது வழங்கப்படும் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் சக்திவாய்ந்ததாக இருக்கும்.

MOST READ: புதிய பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் புகைப்படங்கள் இணையத்தில் லீக்..

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் பிஎஸ்6 மாடலானது ஆக்டிவ், ஆம்பிஷன், ஸ்டைல், ஓனிக்ஸ் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய 5 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

புதிய ஸ்கோடா ரேபிட் காரின் ஆக்டிவ் வேரியண்ட் கேண்டி ஒயிட் மற்றும் கார்பன் ஸ்டீல் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். ஆம்பிஷன் வேரியண்ட்டில் கூடுதலாக பிரில்லியண்ட் சில்வர், டாஃபி பிரவுன் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படும். ஸ்டைல் வேரியண்ட்டில் கேண்டி ஒயிட், கார்பன் ஸ்டீல் மற்றும் பிரில்லியண்ட் சில்வர் ஆகிய வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

MOST READ: ஸ்கூட்டரில் ஆட்டம் காட்டிய பெண்கள்.. இருவரையும் கொத்தாக தூக்கிய போலீஸ்... வைரல் வீடியோ!

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

ஓனிக்ஸ் வேரியண்ட்டில் கேண்டி ஒயிட், லேபிஸ் புளூ மற்றும் மான்ட்டே கார்லோ வேரியண்ட்டில் கேண்டி ஒயிட் மற்றும் ப்ளாஷ் ரெட் ஆகிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படும்.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலின் முக்கிய விபரங்கள் வெளியானது

புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலுக்கு ஆன்லைனில் முன்பதிவு துவங்கப்பட்டு இருக்கிறது. ரூ.25,000 முன்பணம் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். லாக்டவுன் முடிவுக்கு வந்த பின்னர் டெலிவிரி கொடுக்கப்படும்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda has revealed the variant details and colour options for Rapid BS6 model ahead of it's launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X