ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்-6 மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வருகை குறித்த புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் மாருதி சியாஸ், ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா ஆகிய டாப் - 3 மாடல்களுக்கு அடுத்த இடத்தில் வாடிக்கையாளர்களின் சிறந்த தேர்வாக கருதப்படும் மாடல் ஸ்கோடா ரேபிட். மேலும், ஸ்கோடா ரேபிட் காரை ரசித்து வாங்கும் வாடிக்கையாளர்களும் உள்ளனர். சிறந்த கட்டுமானம், நேர்த்தியான டிசைன், சிறந்த எஞ்சின் தேர்வுகள் இதன் முக்கிய அம்சங்களாக இருந்து வருகின்றன.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

இந்த நிலையில், பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சினுடன் புதிய ஸ்கோடா ரேபிட் கார் இரு தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில், போட்டியாளர்களைவிட விலை குறைவாக நிர்ணயிக்கப்பட்டு மதிப்பு வாய்ந்த தேர்வாக வந்துள்ளது.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

மாருதி சியாஸ் கார் ரூ.8.39 லட்சத்திலும், புதிய ஹூண்டாய் வெர்னா கார் ரூ.9.31 லட்சத்திலும், ஹோண்டா சிட்டி கார் ரூ.9.99 லட்சம் ஆரம்ப விலைகளில் கிடைக்கும் நிலையில், புதிய ஸ்கோடா ரேபிட் கார் ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் இந்த கார் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் நீக்கப்பட்டு, புத்தம் புதிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இல்லாதது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. இதனை போக்கும் விதமாக, இந்த ஆண்டு இறுதியில் ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் வழங்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கார்வாலே செய்தி தெரிவிக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கினால் நிச்சயம் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பையும் இந்த கார் போக்கிவிடும்.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், முன்புற, பின்புற பனி விளக்குகள், டின்ட் விண்டோஸ், 16 அங்குல அலாய் வீல்கள், க்ரோம் அலங்கார பாகங்களுடன் வசீகரிக்கிறது.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

இந்த காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 8.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன. இந்த காரில் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டீயரிங் வீல், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, க்ரூஸ் கன்ட்ரோல், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகிய வசதிகள் உள்ளன.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், பிரேக் அசிஸ்ட், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட பல பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.

ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 காரில் ஆட்டோமேட்டிக் மாடல் வருகை விபரம்!

புதிய ஸ்கோடா ரேபிட் கார் முக்கிய போட்டியாளர்களைவிட குறைவான விலையில் கிடைப்பது மிக முக்கிய விஷயமாக இருக்கிறது. கொரோனா பிரச்னையிலிருந்து விடுபட்டு, வரும் மாதங்களில் கார் விற்பனை அதிகரிக்கும்போது இந்த காருக்கு நிச்சயம் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda is expected to launch the Rapid TSI model with an optional automatic transmission sometime during this year in India. The automatic transmission option is expected to be offered only on the top-spec trims of the Rapid TSI.
Story first published: Friday, May 29, 2020, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X