சவாலான விலையால் ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக புக்கிங் குவிந்துள்ளதால், முன்பதிவு செய்வோருக்கு அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் டெலிவிரி கொடுக்கப்படும் வாய்ப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஸ்கோடா ரேபிட் கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், இதன் பிஎஸ்-6 மாடல் ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், இந்த காருக்கு எகிடுதகிடான வரவேற்பு கிடைத்துள்ளது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

இந்த நிலையில், பிஎஸ்-6 ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக அளவில் டிமான்ட் இருந்து வருவது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

இதுதொடர்பாக, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஸாக் ஹொல்லிஸ் சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டு இருக்கிறார். அதில், ரேபிட் காருக்கு எங்களது உற்பத்தி திறனை விட அதிக அளவில் புக்கிங் வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிவரை டெலிவிரி கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

இதனால், வரும் ஜனவரிக்கு பின்னர்தான் புக்கிங் செய்வோருக்கு டெலிவிரி கொடுக்க இயலும் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே, உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று அவரது பதிவிற்கு பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

ஸ்கோடா ரேபிட் கார் மிகவும் வலிமையான கட்டமைப்பை பெற்ற மாடலாக வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. மேலும், பிஎஸ்-6 மாடலானது பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலில் இருக்கும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் 108 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் மிக நேர்த்தியான க்ரில் அமைப்பு, எல்இடி பகல்நேர விளக்குகள், பின்புற பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

புதிய ஸ்கோடா ரேபிட் காரில் டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபியூஷன், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ஹை ஸ்பீடு அலர்ட், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா ஆகிய பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் உள்ளன.

ஸ்கோடா ரேபிட் காருக்கு அதிக டிமாண்ட்... காத்திருப்பு காலம் அதிகரிப்பு!

இந்த காரில் 8.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. மிரர் லிங்க் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் ப்ளே அல்லது ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகளும் உள்ளன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதிகள் உள்ளன. மிக சவாலான விலை இந்த காருக்கு அதிக வரவேற்பை பெற்று தந்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Rapid TSI model has received an overwhelming response from customers.
Story first published: Wednesday, November 11, 2020, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X