2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

நான்காம் தலைமுறை ஆக்டேவியா மாடலை கடந்த ஆண்டில் ஐரோப்பாவில் காட்சிப்படுத்தியதை தொடர்ந்து புதிய தலைமுறை ஆக்டேவியா ஆர்எஸ் வெர்சனின் விபரங்களை ஸ்கோடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் உள்ள ஆக்டேவியா ஆர்எஸ் மாடலை போன்று தான் இந்த கார் வெளிப்புறத்தில் தோற்றத்தை கொண்டுள்ளது. இதனால் முன்புறத்தில் கருப்பு நிறத்தில் க்ரில் அமைப்பு மற்றும் ஸ்மோக்டு ஹெட்லேம்ப்கள் அப்படியே தொடர்ந்துள்ளன.

2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

18-இன்ச் மற்றும் 19-இன்ச் என்ற இரு விதமான தேர்வுகளில் அலாய சக்கரங்களை பெற்றுள்ள இந்த புதிய தலைமுறை கார் பின்புறத்தில் லிப் ஸ்பாய்லர் மற்றும் ட்வின் எக்ஸாஸ்ட் அமைப்பை கொண்டுள்ளது. உட்புறத்தில் புதிய ஆக்டேவியா ஆர்எஸ் மாடல் மஸாஜ் செயல்பாட்டுடன் லெதரால் மேம்படுத்தப்பட்ட இருக்கைகளுடன் காட்சியளிக்கிறது.

2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

அல்காண்ட்ரா உள்ளமைவு, 10.25 இன்ச் முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்ப்ளே உதவியுடன் 10 இன்ச் மல்டிமீடியா சிஸ்டம் மற்றும் ஃபாக்ஸ் கார்பன் ஃபைபர் ட்ரிம் உள்ளிட்டவை இதன் கேபின் சிறப்பம்சங்கள் ஆகும். ஏசி வெண்ட்ஸ் மற்றும் 3-ஸ்போக் பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரங்களில் க்ரோம் காணப்படுகிறது.

2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

பாதுகாப்பிற்கு புதிய ஆக்டேவிய ஆர்எஸ் மாடல் ஆறு காற்றுப்பைகள், அடாப்டிவ் முன்புற லைட் சிஸ்டம், ஏபிஎஸ். இபிடி மற்றும் பின்புற கேமிரா உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. என்ஜின் அமைப்பாக இந்த புதிய தலைமுறை கார் ஐரோப்பிய சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகளையும் பெற்றுள்ளது.

2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 241 பிஎச்பி பவரையும், 370 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதன் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

டீசல் வேரியண்ட்டில் பொருத்தப்படும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை காருக்கு வழங்கும் ஆற்றல் கொண்டது. இதற்கு ஒரே ஒரு 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் கியர்பாக்ஸ் மட்டும் தான் கொடுக்கப்படுகிறது.

2020 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் காரை பற்றிய விபரங்கள் வெளியீடு... புதிய அப்டேட்கள் என்னென்ன தெரியுமா..?

மொத்த தோற்ற அளவில் பார்த்தோமேயானால் வழக்கமான ஆக்டேவியா மாடலை காட்டிலும் ஆர்எஸ் மாடல்களின் உயரம் 15மிமீ குறைவாக வடிவமைக்கப்படுகிறது. எலக்ட்ரானிக் அடாப்டிவ் சஸ்பென்ஷன் உடன் டைனாமிக் சேசிஸ் கண்ட்ரோல் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது. இவற்றுடன் பெட்ரோல் வேரியண்ட் லிமிடேட் ஸ்லிப் டிஃப்ரென்ஷியலையும் பெறுகிறது.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Next-gen Skoda Octavia RS unveiled
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X