சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

ஸ்கோடா ரேபிட் காரின் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்ததையடுத்து, முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி, மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா கார்கள் டாப்-3 மாடல்களாக இருக்கின்றன. இந்த மாடல்களுக்கு சரியான மாற்றுத் தேர்வாக ஸ்கோடா ரேபிட் கார் இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த மே மாத இறுதியில் பிஎஸ்6 எஞ்சின் மற்றும் கூடுதல் வசதிகள் நிரம்பிய ஸ்கோடா ரேபிட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

புதிய ஸ்கோடா ரேபிட் பிஎஸ்6 மாடலானது ரைடர், ஆம்பிஷன், ஓனிக்ஸ், ஸ்டைல் மற்றும் மான்ட்டே கார்லோ ஆகிய 5 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்தது. புதிய ரேபிட் கார் ரூ.7.49 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் என்ற மிக சவாலான விலையில் வந்தது.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

குறிப்பாக, இந்த காரின் ரைடர் என்ற பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.7.49 லட்சம் என்ற மிக சவாலான விலை நிர்ணயிக்கப்பட்டதுடன், போதுமான வசதிகளையும் பெற்றிருந்தது. அதாவது, காம்பேக்ட் செடான் கார்களுக்கு இணையான விலையிலும், அதிக வசதிகளுடன் வந்தது.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

ரேபிட் காரின் ரைடர் என்ற பேஸ் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ஸ்கஃப் பிளேட்டுகள், தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்டீயரிங் வீல், 2 டின் ஆடியோ சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், பவர் அட்ஜெஸ்ட் வசதியுடன் ரியர் வியூ மிரர்கள், பவர் விண்டோஸ், முன்புற, பின்புற இருக்கைகளுக்கு தனி சார்ஜர்கள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங், டியூவல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

பழைய பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் நீக்கப்பட்டன. அதற்கு பதிலாக புதிய 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 110 பிஎஸ் பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கிறது.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

இந்த நிலையில், இந்த பேஸ் வேரியண்ட் மிக சவாலான விலையில் வந்தது குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்ததுடன், அதிக வரவேற்பை பெறும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருந்தோம். அதன்படியே, தற்போது புதிய ரேபிட் காரின் பேஸ் வேரியண்ட்டிற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

இதனால், காத்திருப்பு காலம் அதிகரித்துள்ளதையடுத்து, ரேபிட் ரைடர் வேரியண்ட்டிற்கான முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது. இதனிடையே, கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ரைடர் ப்ளஸ் என்ற வேரியண்ட் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

சவாலான விலை... புதிய ஸ்கோடா ரேபிட் பேஸ் வேரியண்ட்டிற்கு எக்கச்சக்க வரவேற்பு!

இதனிடையே, ஸ்கோடா ரேபிட் காருக்கான வரவேற்பை தக்க வைக்கும் விதத்தில், விரைவில் பெட்ரோல் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் செப்டம்பரில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Auto launched the 2020 Rapid earlier this year in the Indian market. The car now comes with a petrol engine and features the 1.0-litre TSI unit, borrowed from the Volkswagen Vento. The new 1.0-litre petrol engine replaces the older 1.6-litre MPI unit present on the previous model.
Story first published: Monday, July 13, 2020, 13:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X