க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

தயாரிப்பு பணிகளை நிறைவு செய்த நிலையில் ஸ்கோடா விஷன் எஸ்யூவி கார் இந்தியாவில் சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கார்தேக்கோ செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் விஷன் இன் டிசைன் கான்செப்ட் வடிவத்தில் ஸ்கோடா நிறுவனம் அதன் மிட்-ப்ரீமியம் க்ராஸ்ஓவர் எஸ்யூவி காரை காட்சிப்படுத்தி இருந்தது.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

பெரும்பான்மையாக, ஐரோப்பிய சந்தையில் விற்பனையில் இருக்கும் காமிக் மாடலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ள விஷன் இன் காரில் இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற சில மாற்றங்கள் நிச்சயம் கொண்டுவரப்படும். ஃபோக்ஸ்வேகன் எம்க்யூபி ஏ0 இன் ப்ளாட்ஃபாரத்தை உள்ளூர்மயமாக்குவதில் ஸ்கோடா முன்னிலை வகிக்கிறது.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

இந்த ப்ளாடஃபாரத்தின் அடிப்படையில்தான் வருங்கால ஸ்கோடா மற்றும் ஃபோக்ஸ்வேகன் கார்கள் தயாரிக்கப்படவுள்ளன. இதில் விஷன் இன் கான்செப்ட்டின் தயாரிப்பு வெர்சனும் அடங்கும். இதுவரை இந்த எஸ்யூவி காரின் பாகங்களையும் துணை சிஸ்டங்களையும் ஸ்கோடா நிறுவனம் ஐரோப்பிய காமிக் மற்றும் சியட் அரோனா கார்களின் மூலமாக இந்தியாவில் சோதனை செய்துவந்தது.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

ஆனால் தற்போது முதன்முறையாக விஷன் எஸ்யூவி தயாரிப்பு பணிகள் நிறைவு செய்த நிலையில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கார் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது.

முழுக்க முழுக்க மறைக்கப்பட்டு இருப்பினும் சோதனை காரில் இரு-துண்டுகளாக ஹெட்லேம்ப் உள்ளதை பார்க்க முடிகிறது. ஆனால் காரின் முன்பக்கத்தில் இறுதி வடிவம் சற்று தாழ்வாக கொண்டுவரப்படலாம். கான்செப்ட் மாடலின் நீளம் 4,256மிமீ, வீல்பேஸ் 2,671மிமீ, உயரம் 1,589மிமீ ஆகும்.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

இந்த சோதனை காரில் எல்இடி ஹெட்லேம்ப்கள் & டெயில்லேம்ப்கள், அலாய் சக்கரங்கள், கருப்பு நிற ப்ளாஸ்ட்டிக்கில் பாடி க்ளாடிங், மேற்கூரை தண்டவாளங்கள் உள்ளிட்டவற்றை பார்க்க முடிகிறது. விற்பனைக்கு வரும் ஸ்கோடா விஷன் எஸ்யூவியில் பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் எதிர்பார்க்கலாம்.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற தற்சமயம் சந்தையில் மிக பிரபலமாக உள்ள எஸ்யூவி கார்களின் போட்டியினை சமாளிக்கவுள்ளதால் இந்த ஸ்கோடா காரின் உட்புறத்தில் ஏகப்பட்ட வசதிகளை எதிர்பார்க்கலாம். ஏனெனில் விஷன் இன் கான்செப்ட்டும் பல அம்சங்களை கொண்டிருந்தது.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தும்போது இந்த எஸ்யூவி காரில் 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டர்போசார்ஜ்டு நேரடி இன்ஜெக்‌ஷன் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளதாக ஸ்கோடா கூறியிருந்தது. அதிகப்பட்சமாக 150 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்படவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் ஆற்றலை 7-ஸ்பீடு டிஎஸ்ஜி ட்ரான்ஸ்மிஷன் வழியாக முன் சக்கரங்களுக்கு வழங்கும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருந்தது.

க்ரெட்டா, செல்டோஸின் ஆதிக்கத்திற்கு போட்டியாக, விஷன் எஸ்யூவி காரை கொண்டுவரும் ஸ்கோடா!!

இந்த என்ஜின் உடன் 110 பிஎச்பி மற்றும் 175 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் டிஎஸ்ஐ என்ஜினையும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுடன் ஸ்கோடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் ஏற்கக்கூடிய விலையில் இந்த எஸ்யூவி காரை அடுத்த ஆண்டில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஸ்கோடா #skoda
English summary
Skoda Vision SUV Production Spec Spied 1st Time – Creta, Seltos Rival
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X