மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் செல்டோஸ் எஸ்யூவி கார் மூலம் இந்திய சந்தையில் அறிமுகமாகி தற்போது இங்கு முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

இந்நிறுவனத்தின் இரண்டாவது காராக கார்னிவல் எம்பிவி கடந்த 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட, மூன்றாவது தயாரிப்பு சொனெட் என்ற பெயரில் போட்டி மிகுந்த காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் சமீபத்தில் நுழைந்தது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

இந்தியாவில் தயாரிக்கபட்டு உலகளவில் அறிமுகம் செய்யப்பட்ட சொனெட், கியா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சர்வதேச சந்தையில் மிக பெரிய விற்பனை எண்ணிக்கையை பெற்று கொடுத்துள்ளது. இந்திய சந்தையில் இந்த மூன்று தயாரிப்புகள் என்றால், மற்ற நாட்டு சந்தைகளில் வேறு சில மாடல்கள் மூலம் கியா நிறுவனம் கோலோச்சி வருகிறது. அவற்றில் சிலவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

கியா ஸ்போர்டேஜ்

கியா பிராண்டில் இருந்து சொனெட் அல்லாமல் புதிய காம்பெக்ட் எஸ்யூவி காரை எதிர்பார்ப்பவர்கள் தாராளமாக ஸ்போர்டேஜின் இந்திய அறிமுகத்திற்கு காத்திருக்கலாம். பார்ப்பவரின் கண்ணை கவரும் விதத்திலான முன்பக்கத்தை கொண்ட இந்த கியா காரின் உட்புறம் விசாலமாக வடிவமைக்கப்படுகிறது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

இதன் காரணமாக ஸ்போர்டேஜில் அதிகளவிலான பயணிகளை அமர வைக்கலாம். சர்வதேச சந்தையில் கியா ஸ்போர்டேஜிற்கு ஹூண்டாய் மோட்டார்ஸின் டக்ஸன் முக்கிய போட்டி மாடலாக விளங்குகிறது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

கியா நீரோ

ஹைப்ரீட் என்ஜின் உடன் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுவரும் கியா நீரோ-வும் காம்பெக்ட் எஸ்யூவி ரக காராகும். உள்ளுணர்வு இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை பெறுகின்ற இந்த காரும் குடும்பத்துடன் பயணிப்பதற்கு ஏற்ற காராகும்.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

கியா டெல்லுரைடு

செல்டோஸ் போன்ற எஸ்யூவி கார்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் ஆண்டுகளில் டெல்லுரைடு எஸ்யூவி காரை இந்தியாவில் கியா நிறுவனம் அறிமுகப்படுத்த அதிக வாய்ப்புகள் உள்ளது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

அதிகப்பட்சமாக 8 நபர்கள் வரையில் அமரக்கூடிய இந்த எஸ்யூவி காரின் உட்புறத்தில் தற்போதைய மாடர்ன் எஸ்யூவி கார்களுக்கான வசதிகள் எதுவும் குறைவில்லாமல் வழங்கப்படுகின்றன. இதன் விளைவாக 2020ஆம் ஆண்டிற்கான உலக கார் விருதை டெல்லுரைடு பெற்றிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

கியா ஸ்டிங்கர்

கியா ஸ்டிங்கர், ஸ்மார்ட், காம்பெக்ட் மற்றும் கவர்ச்சிகரமான கூபே ரக காராகும். அதற்காக மற்ற கூபே கார்களான ஆடி ஏ5 ஸ்போர்ட்பேக், ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் போன்றது என நினைத்துவிட வேண்டாம், ஏனெனில் ஸ்டிங்கர் அவற்றுடன் ஒப்பிடுகை வித்தியாசமானது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

ஏனெனில் இது ஸ்போர்டியான கேபின், அனைத்து-லெதர் இருக்கைகள் மற்றும் எளிமையான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தினால் தற்சமயம் சர்வதேச சந்தைகளில் கிடைக்கும் மிகவும் ஸ்போர்டியான பண்பை கொண்ட கார் மாடலாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் அப்கிரேட் செய்யப்பட்ட ஸ்டிங்கரில் ‘ஸ்மார்ட்ஸ்ட்ரீம்' 2.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் சில நாட்டு சந்தைகளில் வழங்கப்படுகிறது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

கியா சோல் இவி

சோல் இவி, கியா பிராண்டில் இருந்து இந்திய சந்தைக்கு எதிர்பார்க்கப்படும் எலக்ட்ரிக் வாகனங்களுள் ஒன்று. 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த உலக நகர்புற கார் விருதை வாங்கியுள்ள இந்த எலக்ட்ரிக் காரில் 64kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

இது முழு சார்ஜில் அதிகப்பட்சமாக 450 கிமீ தூரத்திற்கு காரை இயக்கி செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் ஹூண்டாய் கோனா இவி காருக்கு சரியான போட்டி மாடலாக கியா சோல் இவி கார் விளங்கும் என்பது உறுதி.

மற்ற நாட்டு சந்தைகளில் சக்கைபோடு போடும் கியா கார்கள் இவைதான்!! நம் நாட்டிற்கும் வந்தால் நல்லா இருக்கும்

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்குதான் கடந்த சில வருடங்களாக மார்க்கெட் உள்ளது. இதனால் கியாவின் கவனமும் புதிய எஸ்யூவி கார்களை நம் நாட்டில் அறிமுகப்படுத்துவதில்தான் இருக்கும். ஏற்கனவே இந்திய சந்தையில் முன்னணி கார் பிராண்டாக உருவெடுத்துவிட்ட கியா மோட்டார்ஸ், இவற்றில் எந்தெந்த கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
Five Kia cars India deserves in the times to come
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X