ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் கார்களின் எண்ணிக்கை குறித்த விபரங்களை ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (Federation of Automobile Dealers Associations - FADA) வெளியிட்டுள்ளது. இதன்படி இந்தியாவில் கடந்த ஜூலை மாதம் மொத்தம் 1,57,373 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 25.2 சதவீதம் குறைவாகும். ஏனெனில் கடந்த ஆண்டு ஜூலையில் மொத்தம் 2,10,377 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. கொரோனா வைரஸ், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு காரணமாக கார்கள் விற்பனை குறைந்திருப்பதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

நடப்பாண்டு ஜூலை மாதம் மாநில வாரியாக கார்களின் விற்பனை எண்ணிக்கை தொடர்பான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில், உத்தர பிரதேச மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் நடப்பாண்டு ஜூலை மாதம் 19,185 கார்கள் மட்டும்தான் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டின் ஜூலை மாதத்தில் இந்த எண்ணிக்கை 22,635ஆக இருந்தது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

அதாவது 3,450 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 15.24 சதவீத வீழ்ச்சி ஆகும். இரண்டாம் இடத்தை மஹாராஷ்டிரா பிடித்துள்ளது. அங்கு நடப்பாண்டு ஜூலை மாதம் 16,149 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 22,155ஆக இருந்தது. 6,006 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இது 27.11 சதவீத வீழ்ச்சியாகும்.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

மூன்றாவது இடத்தை குஜராத் பிடித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் 19,983 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், நடப்பாண்டு ஜூலை மாதம் 14,331 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5,652 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள சூழலில், 28.28 சதவீத சரிவு பதிவாகியுள்ளது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

நான்காவது இடத்தை ஹரியானா பெற்றுள்ளது. அங்கு நடப்பாண்டு ஜூலை மாதம் 12,162 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 13,987 ஆக இருந்தது. 1,825 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 13.05 சதவீத வீழ்ச்சியாகும். ஐந்தாவது இடத்தை கர்நாடகா பெற்றுள்ளது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

அங்கு நடப்பாண்டு ஜூலையில் 11,107 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 14,105ஆக இருந்தது. 2,998 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 21.25 சதவீத வீழ்ச்சியாகும். ஆறாவது இடத்தை ராஜஸ்தான் பிடித்துள்ளது. கடந்த ஜூலையில் சொற்ப எண்ணிக்கையிலான மாநிலங்கள் மட்டுமே கார் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இதில், ராஜஸ்தானும் ஒன்று. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்தாண்டு ஜூலை மாதம் 10,607 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் நடப்பாண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 10,903ஆக உயர்ந்துள்ளது. அங்கு 296 கார்கள் அதிகம் விற்பனையாகியுள்ளன. இது 2.79 சதவீத வளர்ச்சியாகும். ஏழாவது இடத்தை டெல்லி பெற்றுள்ளது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

அங்கு நடப்பாண்டு ஜூலையில் 9,817 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த எண்ணிக்கை 12,076ஆக இருந்தது. 2,259 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், 18.71 சதவீத வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழகம் 8வது இடத்தை பெற்றுள்ளது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை மாதம் 16,945 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் இந்த எண்ணிக்கையானது நடப்பாண்டு ஜூலையில் வெறும் 9,001ஆக சுருங்கி போயுள்ளது. 7,944 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ளன. இது 46.88 சதவீத வீழ்ச்சியாகும். அதாவது தமிழகத்தில் கார்களின் விற்பனை சரிபாதியாக குறைந்துள்ளது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

இந்த பட்டியலில் 9வது இடத்தை கேரளா பெற்றுள்ளது. கேரளாவில் நடப்பாண்டு ஜூலை மாதம் 8,785 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு ஜூலையில் இந்த எண்ணிக்கை 17,901ஆக இருந்தது. 9,116 கார்கள் குறைவாக விற்பனையாகியுள்ள நிலையில், 50.92 சதவீத வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

பத்தாவது இடத்தை பஞ்சாப் பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடப்பாண்டு ஜூலை மாதம் 6,783 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்தாண்டு ஜூலையில் இந்த எண்ணிக்கை 6,598ஆக இருந்தது. அதாவது 185 கார்கள் அதிகமாக விற்பனையாகியுள்ளன. இது 2.80 சதவீத வளர்ச்சியாகும். தற்போது பெரும்பாலான மாநிலங்கள் வீழ்ச்சியைதான் பதிவு செய்துள்ளன.

ஜூலை மாதம் அதிக கார்கள் விற்பனையான மாநிலங்களின் பட்டியல்... தமிழகம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

ஆனால் தீபாவளி பண்டிகை காலம் விரைவில் தொடங்கவுள்ளதால் கார் விற்பனை மீண்டும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொது போக்குவரத்திற்கு பதிலாக சொந்த கார்களில் பயணம் செய்வதை மக்கள் பாதுகாப்பானதாக கருதுகின்றனர். இதன் காரணமாக சிறிய கார்களின் விற்பனை உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

Most Read Articles
English summary
Statewise Car Sales Report For July 2020 - Tamil Nadu In Eighth Spot. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X