லம்போர்கினி சூப்பர் காரை ஹாயாக ஓட்டிச் சென்ற சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்து போன மக்கள்!

நடிகர் ரஜினிகாந்த் விலையுயர்ந்த சூப்பர் கார் ஒன்றை ஓட்டிச் செல்வது போன்ற படங்கள் வெளியாகியுள்ளன.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் ஆகியவற்றில் லையன் இன் லம்போர்கினி #LionInLamborghini என்ற ஹேஸ்டேக்கில் வீடியோ ஒன்று வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

அதில், சென்னையின் காலியான சாலையில் ஒன்றில் விலையுயர்ந்த கார்களில் ஒன்றான லம்போர்கினி நிறுவனத்தின் புதுமுக மாடல் 'உருஸ்' கார் சீறிப் பாய்வதைப் போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

இந்த காரை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் ஓட்டிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை உறுதிச் செய்யும் வகையில், வெள்ளை நிற மாஸ்க் அணிந்து, நடிகர் ரஜினிகாந்த் கார் ஒன்றை இயக்குவது போன்ற புகைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. அதில், ரஜினிகாந்த் கையாளும் கார் ஸ்டியரிங் வீலில் லம்போர்கினி சின்னம் இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

இதை வைத்து பார்க்கையில் நடிகர் ரஜினிகாந்த் அந்த காரை இயக்கிச் சென்றிருப்பது உறுதியாகியுள்ளது. இதையே ஆட்டோமொபிலி ஆர்டென்ட் என்ற இன்ஸ்டாகிராம் பக்கமும் உறுதிச் செய்திருக்கின்றது.

அதேசமயம் இந்த விலையுயர்ந்த கார் நடிகர் ரஜினிக்காக வாங்கப்பட்டது அல்ல என்றும், இது அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்காகவே வாங்கப்பட்டது என அவர்களது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

புதிய கார் என்பதால் அதனை டெஸ்ட் டிரைவ் செய்யும் விதமாக நடிகர் ரஜினி, போயஸ் கார்டன் இல்லத்தின் சாலையில் வைத்து இயக்கி பார்த்திருக்கின்றார்.

அப்போது அவருடன் யாரும் இல்லை என்று கூறப்படுகின்றது. அதேசமயம், ரஜினி குடும்பத்தினர்-சிலரும் அக்காரை டெஸ்ட் செய்திருக்கின்றனர்.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

இந்த சம்பவம் குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள்தான் தற்போது ஆட்டோ மற்றும் சினி உலகின் ஹாட் டாபிக்காக மாறியிருக்கின்றது. தற்போது காட்டு தீயைப்-போல் பரவிக் கொண்டும் இருக்கின்றது.

நடிகர் ரஜினிகாந்த், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு பணிகளை முடக்கி வைத்துள்ளார்.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் வீட்டு பணியாளர்களைக் கூட கொரோனா அச்சம் ஓயும் வரை வர வேண்டாம் என நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், பத்திரிக்கையாளர்கள் மற்றும் கட்சிக்காரர்கள் சந்திப்பிற்கும் தற்காலிக முற்றி புள்ளியை வைத்திருக்கின்றார். எதுவாக இருந்தாலும் அலைபேசி அழைப்பில் தொடர்புகொள்ள அவர் அறிவுறுத்தியிருக்கின்றார்.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

இதுதவிர, நேரத்தைப் போக்குவதற்காக பேரன், பேத்திகளுடன் அதிக நேரத்தை ரஜினிகாந்த செலவழித்து வருகின்றார். இத்துடன், சில நேரங்களில் மாமல்லபுரம் பகுதியில் இருக்கும் தனது பண்ணை வீட்டுக்கும் அவர் அடிக்கடி சென்று வருவதாகக் கூறப்படுகின்றது.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

காலை முதல் மாலை வரை அங்கு ஓய்வெடுத்துவிட்டு பின்னர் மாலை நேரமே போயஸ்கார்டன் இல்லத்திற்கு திரும்புகின்றார். இதற்கிடைப்பட்ட நேரத்தில் புத்தகங்களுடன் அவர் நேரம் செலவு செய்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது, அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த பெரும்பாலானோர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதால், கார் ஓட்டுவது முதல் பல வேலைகளை ரஜினியே மேற்கொண்டு வருகின்றார்.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

இந்த நிலையில்தான் விலையுயர்ந்த ஆடம்பர கார்களில் ஒன்றான லம்போர்கினி உருஸ் எஸ்யூவி ரக காரை அவர் டெஸ்ட் டிரைவ் செய்துள்ளார். அப்போதும் கூட மாஸ்க் அணிந்தவாறே அவர் அதை மேற்கொண்டிருக்கின்றார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

சௌந்தர்யா ரஜினிகாந்திற்காக வாங்கப்பட்டிருக்கும் லம்போர்கினி உருஸ் காரானது வேர்ல்ட் பேமஸ் மாடலாகும். இதற்கு இந்திய மட்டுமின்றி உலக நாடுகள் மத்தியிலும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இது, உலகின் மிக ஸ்டைலான மற்றும் சக்திவாய்ந்த கார்களில் ஒன்றாக இருக்கின்றது.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

உலகம் முழுவதும் வாகன விற்பனை மந்த நிலையில் இருந்த போதிலும் லம்போர்கினி நிறுவனத்தின் உருஸ் செல்வந்தர்கள் மத்தியில் அமோகமான டிமாண்டைப் பெற்று வருகின்றது. இந்த காரின் திறன் மட்டுமின்றி சிறப்பு சொகுசு அம்சங்களே மிக முக்கியமான காரணமாக உள்ளது.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

இந்தியாவில் இக்காரை 50க்கும் குறைவானவர்களே பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதில், நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினரும் இணைந்திருக்கின்றனர். இந்த கார் இந்தியாவில் சுமார் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த உச்சபட்ச விலையுடையக் காரில்தான் நடிகர் ரஜினி காந்த் வலம் வந்துள்ளார்.

விலையுயர்ந்த சூப்பர் காரை தானே இறங்கி ஓட்டிய சூப்பர் ஸ்டார்... விலையை கேட்டு பிரம்மித்துபோன மக்கள்!!

இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 641 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இந்த உச்சபட்ச திறனானது வெறும் 3.6 வினாடிகளில் 0த்தில் இருந்து மணிக்கு 100கிமீ என்ற வேகத்தை எட்ட உதவும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 305 கிமீ ஆகும். எனவே, இந்த கார் சாலையில் ஜெட் விமானத்தைப் போல் சீறிப்பாய்ந்து செல்லும் திறனைக் கொண்டதாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Super Star Rajnikanth spotted driving Lamborghini Urus details. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X