புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

சர்வதேச சந்தையில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அக்ராஸ் எஸ்யூவி மாடலை பற்றிய விபரங்களை தயாரிப்பு நிறுவனமான சுசுகி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அவற்றை விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

சுசுகி-டொயோட்டா என்ற இரு ஜப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கூட்டணியால் உருவாகியுள்ள அக்ராஸ் எஸ்யூவி மாடலானது ஆர்ஏவி4 அடிப்படையிலான எஸ்யூவி காராக தயாரிக்கப்பட்டு வருவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்தே தகவல்கள் வெளிவந்திருந்தன.

புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

சுசுகி நிறுவனத்தின் மிக பெரிய தோற்றத்தை கொண்ட எஸ்யூவி மாடலாக விளங்கும் விட்டாராவிற்கு கீழே புதிய அக்ராஸ் எஸ்யூவி கார் நிலைநிறுத்தப்படவுள்ளது. டொயோட்டா ஆர்ஏவி4 எஸ்யூவி மாடலின் அடிப்படையிலான கார் என்பதால் பெரும்பான்மையான உடல் பேனல்களை இந்த எஸ்யூவி கார் அதிலிருந்து தான் பெற்றுள்ளது.

இருப்பினும் ஸ்டைலிங் பாகங்களை பொறுத்தவரையில் அக்ராஸ் மாடல் குறைந்த விலை கொண்ட ஆர்ஏவி4 காராக ஆசிய சந்தையில் விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டொயோட்டா கரோல்லா க்ராஸ் எஸ்யூவி காருடன் கிட்டத்தட்ட ஒத்து பெற்றிருக்கும் என எதிர்பார்க்கலாம்.

புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

சுசுகி அக்ராஸ் எஸ்யூவி மாடலின் நீளம் 4,635மிமீ ஆகவும், அகலம் 1,855மிமீ ஆகவும், உயரம் 1,690மிமீ ஆகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் வீல்ஸ்பேஸ் அளவு 2,690மிமீ என்ற அளவில் உள்ளது. இந்த பரிணாம அளவுகளின் மூலம் பார்த்தோமேயானால், அக்ராஸ் எஸ்யூவி மாடல் டாடா ஹெரியரை காட்டிலும் உருவத்தில் சற்று பெரியதாக இருக்கும்.

புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

5-இருக்கைகான கேபின் லேஅவுட் உடன் உள்ள சுசுகியின் இந்த புதிய எஸ்யூவி மாடலின் பூட் ஸ்பேஸ் 490 லிட்டராக கொடுக்கப்பட்டுள்ளது. இயக்க ஆற்றலை பெறுவதற்கு இந்த கார், டொயோட்டா ஆர்ஏவி4 மாடலில் உள்ள ப்ளக்-இன்-ஹைப்ரீட் என்ஜின் அமைப்பை பெற்றுள்ளது.

இந்த என்ஜின் அமைப்பில் 175 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய 2.5 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜினும், இரு எலக்ட்ரிக் மோட்டார்களும் அடங்கும். இந்த ப்ளக்-இன்-ஹைப்ரீட் என்ஜின் ஆனது காரின் முன் அச்சிற்கு 182 பிஎச்பி/270 என்எம் டார்க் திறனையும், பின் அச்சிற்கு 54 பிஎச்பி மற்றும் 121 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

இந்த என்ஜின் உதவியுடன் கார் அதிகப்பட்சமாக 180 kph வேகத்தில் இயங்கும். ஆல்-வீல் ட்ரைவ் ஆனது சுசுகியின் இ-4 எலக்ட்ரானிக் 4x4 சிஸ்டத்துடன் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக அக்ராஸ் எஸ்யூவி கார் எவ்வளவு ஆற்றலில் இயங்கும் என்பது குறித்த எந்த தகவலும் இப்போதைக்கு இல்லை.

புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

டொயோட்டா ஆர்ஏவி4 மாடலில் இதே சிஸ்டம் 300 பிஎச்பி வரையிலான ஆற்றலை வழங்குகிறது. அக்ராஸ் எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள நான்கு ட்ரைவிங் மோட்களில் இவி மோட் ஆனது முழு-எலக்ட்ரிக் ட்ரைவிங்கிற்கும், ஆட்டோ இவி/எச்வி மற்றும் எச்வி மோட்கள் பெட்ரோல் என்ஜின் அவ்வப்போது ஆற்றலை பூஸ்ட் செய்வதற்கும் உதவும் வகையில் வழங்கப்பட்டுள்ளன.

நான்காவது பேட்டரி சார்ஜர் மோட் ஆனது பெட்ரோல் என்ஜினை பிரத்யேகமாக பயன்படுத்தும். இந்த எஸ்யூவி காரில் வழங்கப்பட்டுள்ள 18.1 kWh பேட்டரி, எலக்ட்ரிக் ஆற்றல் மூலமாகவே காரை 75கிமீ தூரம் வரையில் இயங்கி செல்லும். இந்த நிலையில் காரை அதிகப்பட்சமாக 135கிமீ வேகத்தில் இயக்க முடியும்.

புதிய அக்ராஸ் எஸ்யூவி காரை பற்றிய விபரங்களை வெளியிட்டது சுசுகி... இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுமா?

அக்ராஸ் எஸ்யூவி காரின் உட்புற கேபின் கிட்டத்தட்ட டொயோட்டா ஆர்ஏவி4 மாடலை தான் ஒத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகளை கொண்ட 9.0 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை (இப்போதுவரையில் உள்ள சுசுகியின் மிக பெரிய தொடுதிரை) இந்த எஸ்யூவி மாடலில் எதிர்பார்க்கலாம்.

பயணிகளின் பாதுகாப்பிற்கு ப்ரீ-கொலிஷன் சிஸ்டம், லேன் ட்ராக்கிங் அசிஸ்ட் மற்றும் டைனாமிக் ரேடார் க்ரூஸ் கண்ட்ரோல் போன்ற ட்ரைவிங் அசிஸ்ட் செயல்பாடுகள் இந்த அக்ராஸ் மாடலில் வழங்கப்பட்டிருக்கலாம். சுசுகியின் இந்த எஸ்யூவி கார் இந்திய சந்தைக்கு வருகை தருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Most Read Articles

மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Suzuki ACross SUV revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X