சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

சுசுகி நிறுவனம் ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலின் புதிய லிமிடேட் எடிசனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. அட்டிட்யூட் ஹைப்ரீட் என்ற பெயரால் வெளிவந்துள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் மாடலின் இந்த லிமிடேட் எடிசனில் மிக முக்கியமான அம்சமாக மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் ஆனது சில வெளிப்புற டிசைன் மாற்றங்களுடன் வழங்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரை குறி வைத்து விற்பனைக்கு வந்துள்ள இந்த எடிசன் வெறும் 350 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது.

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

ஃபெர்வென்ட் ரெட், ப்யூர் வொய்ட், ப்ரீமியம் சில்வர், சூப்பர் ப்ளாக், ஸ்பீடி ப்ளூ, மினரல் க்ரே மற்றும் பர்னிங் ரெட் என்ற ஏழு விதமான நிறத்தேர்வுகள் ஸ்விஃப்ட் காரின் இந்த லிமிடேட் எடிசனிற்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் ஸ்விஃப்ட் மாடலின் மிட்-ஸ்பெக் எஸ்இசட்-டி க்ரேடின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

இந்த வகையில் இந்த லிமிடேட் எடிசன் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, 16-இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் ஏசி சிஸ்டம் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்துடன் இதன் உட்புறத்தில் பின்புற பயணிக்களுக்கான ப்ரைவசி கண்ணாடியும் வழங்கப்பட்டுள்ளது.

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

வெளிப்புறத்தில் எல்இடி தரத்தில் ஹெட்லேம்ப்பை கொண்டுள்ள இந்த லிமிடேட் எடிசன் காரில் க்ரோம்-ஆல் அழகுப்படுத்தப்பட்ட முன்புற க்ரில், க்ரே நிறத்தில் ஸ்கிர்ட்ஸ், பின்புறத்தில் அப்பர் ஸ்பாய்லர் மற்றும் கருப்பு நிற பில்லர்கள் போன்றவையும் பொருத்தப்பட்டுள்ளன.

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

கவர்ச்சிக்கரமான பொருளாதார தேர்வுகளுடன் சந்தைப்படுத்தப்பட்டுள்ள ஸ்விஃப்ட் மாடலின் இந்த ஸ்பெஷல் எடிசன் காரில் 1.2 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. 12 வோல்ட் ஹைப்ரீட் சிஸ்டத்துடன் உள்ள இந்த என்ஜின் அமைப்பு தேவையில்லாமல் வெளியேறும் வெப்ப ஆற்றலை குறைத்து காரின் எரிபொருள் திறனை மேம்படுத்துகிறது.

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

89 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடிய இந்த ஹைப்ரீட் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இது என்ஜின் ஆற்றலை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும். மைல்டு-ஹைப்ரீட் சிஸ்டம் காரின் மொத்தம் எடையை 10 கிலோ அதிகரிக்க செய்திருந்தாலும் 11 சதவீதம் வரையில் கார்பன்-டை-ஆக்ஸைடு உமிழப்படுவதை குறைக்கிறது.

சுசுகி ஸ்விஃப்ட் மாடலின் புதிய லிமிடேட் எடிசன் கார் அறிமுகம்... மைல்டு-ஹைப்ரீட் என்ஜின் உடன் விற்பனை

22.4 kmpl மைலேஜ்ஜை வழங்கும் இந்த ஹைப்ரீட் எடிசன் கார் ஒரு கிமீ-க்கு 121 கிராம் கார்பன்-டை-ஆக்ஸைடை வெளியிடும். ஜப்பானிய சந்தையில் ஸ்விஃப்ட் அட்டிட்யூட் ஹைப்ரீட் காரின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.14.94 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வருகிற செப்டம்பர் மாத இறுதி வரையில் மட்டுமே இந்த விலை செல்லப்படியாகும்.

மேலும் இந்த வாடிக்கையாளர்கள் பூஜ்ஜிய-சதவீத தனிப்பட்ட ஒப்பந்த கொள்முதல் திட்டத்தின்படி ரூ.2.16 லட்சம் முன்தொகையை செலுத்தி மாதத்திற்கு ரூ.17,659 என்ற கட்டணம் அடிப்படையிலும் இந்த லிமிடேட் எடிசன் காரை பெற்று கொள்ளலாம். இந்த மாத கட்டணத்தை நான்கு வருடங்களுக்கு செலுத்த வேண்டிவரும்.

Most Read Articles
மேலும்... #சுஸுகி #suzuki
English summary
Suzuki Swift Attitude Hybrid Limited Edition Unveiled
Story first published: Saturday, July 11, 2020, 2:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X