தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

விரைவில் இந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கும் சுசுகி நிறுவனத்தின் பிரபல மாடல்களில் ஒன்றான சுசுகி ஜிம்னி எம்கே4 எஸ்யூவி காருக்கு காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகபட்ச அளவில் நீடித்து வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

சுசுகி நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்புகளுக்கு இந்தியாவில் எப்படி கணிசமான வரவேற்பு நிலவுகின்றதோ அதேபோன்று சில உலக நாடுகளில் அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான வரவேற்பு காணப்படுகின்றது. அதிலும், குறிப்பிட்ட மாடல்களுக்கு அது கூடுதலாகவே உள்ளது.

அந்தவகையில் தற்போதைய புதிய தலைமுறை சுசுகி ஜிம்னி எம்கே4 மாடலுக்கு உலக நாடுகள் பலவற்றில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

அதிலும், கடந்த சில மாதங்களாக இதற்கான வரவேற்பு தீவிரமடையத் தொடங்கியுள்ளது. இந்த புதிய தலைமுறை சுசுகி ஜிம்னி எம்கே4 மாடல் கடந்த 2018ம் ஆண்டு ஜீலை மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஓர் காம்பேக்ட் ஆஃப்-ரோட் எஸ்யூவி வாகனம் ஆகும்.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

இந்த வாகனத்திற்கு நிலவி வரும் அதீத வரவேற்பின் காரணமாக இதற்கான காத்திருப்பு காலம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆகையால், சுசுகி ஜிம்னி எம்கே4 எஸ்யூவி காரைப் பெற வேண்டுமானால் பத்து மாதங்கள் காத்திருக்க வேண்டும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

இந்த நீண்ட நாள் காத்திருப்பு அதன் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வாகனம் அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்தும் இத்தகைய வரவேற்பு கிடைத்திருப்பது வாகனத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

அதேசமயம், தற்போது நிலவும் காத்திருப்பு காலம் ஓரளவிற்கு ஆருதல் அளிக்கும் வகையில் இருப்பதாக அதன் ரசிகர்கள் கூறுகின்றனர். இந்த சுசுகி ஜிம்னி எம்கே4 அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் காத்திருப்பு காலம் 12 மாதங்களாக இருந்தது. இதற்கு பத்து மாதங்கள் என்பதே எவ்வளவோ பரவாயில்லை என்றும் அவர் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து இந்த காத்திருப்பு காலம் ஆறு மாதங்கள் கழித்து பத்து மாதங்களாக குறைந்தது. இந்த காத்திருப்பு காலமே தற்போது வரை நீடித்து வருகின்றது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

இந்த வாகனத்திற்கு ஜப்பானில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. ஆனால், இந்த சுசுகி ஜிம்னி எம்கே4 இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை. இதனை இந்த ஆண்டு சுசுகி இந்தியா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

இந்த காருக்கான எதிர்பார்ப்பு இந்தியாவிலும் அதிகமாக நிலவுவதாகவே கூறப்படுகின்றது. ஆகையால், இது மிக விரைவில் இந்திய சந்தையில் கெத்து காட்ட களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கார் நடப்பாண்டின் நவம்பர் மாதத்திற்குள்ளாகவே களமிறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

ஒரு வேலை இந்த வாகனம் இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்கப்படுமேயானால், ஐந்து கதவுகள் கொண்ட மாடலாகவே களமிறங்கும் என கூறப்படுகின்றது. இது இந்தியர்களின் எதிர்பார்ப்பில் ஒன்றாக உள்ளது. ஆனால், இது சர்வதேச சந்தையில் மூன்று கதவுகள் கொண்ட மாடலகவே விற்பனைக்குக் கிடைக்கின்றது.

ஆகையால், இந்தியர்களுக்கு தேவையான மாற்றங்களுடன் களமிறங்கும் பட்சத்தில் இந்த வாகனம் ஜிப்சி என்ற பெயரில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

இந்த ஜிப்ஸியை மாருதி சுசுகி கடந்த ஆண்டு இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியது குறிப்பிடத்தகுந்தது. தற்போது புதிய தலைமுறையாக சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும் சுசுகி ஜிம்னி எம்கே4 மாடலில் கே15பி 1.5 லிட்டர் 4 சிலிண்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதே எஞ்ஜின்தான் சுசிகியின் சியாஸ், எர்டிகா, எக்ஸ்எல்6 மற்றும் புதுப்பிக்கப்பட்ட விட்டாரா ப்ரெஸ்ஸா உள்ளிட்ட மாடல்களில் சுசுகி பயன்படுத்தி வருகின்றது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 102 பிஎஸ் பவரையும், 130 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கின்றது.

தொடரும் காத்திருப்பு காலம்... என்ன சொல்றீங்க இத்தனை மாசங்கள் இந்த ஜிம்னிக்காக வெயிட் பண்ணனுமா..?

4X4 என்ற வடிவமைப்பில் கிடைக்கும் இந்த வாகன் அதன் தயாரிப்பு நாடான ஜப்பானில் மட்டும் இரு வேரியண்டில் கிடைக்கின்றது. அதில் ஒரு சில காஸ்மெட்டிக் சேஞ்ஜஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 660சிசி திறன் கொண்ட 3 சிலிண்டர் டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் ஆப்ஷனில் காணப்படுகின்றது.

இது அதிகபட்சமாக 64 பிஎஸ் பவரையும், 95 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

Most Read Articles
English summary
Suzuki Jimny Has 10 Month Waiting Period In Abroad. Read In Tamil.
Story first published: Friday, February 21, 2020, 11:21 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X