ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

ஜப்பானிய வாகன தயாரிப்பு நிறுவனமான சுஸுகி ஐரோப்பிய சந்தைக்கான 2021 ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

2021ஆம் ஆண்டிற்கான ஸ்விஃப்ட் திருத்தியமைக்கப்பட்ட முன்பக்கம் மற்றும் உயர்தரத்திலான வசதிகள் மற்றும் அதிகளவிலான பாதுகாப்பு அம்சங்களை பெற்றுவரவுள்ளது. ஐரோப்பாவில் எஸ்இசட்-எல், எஸ்இசட்-டி, எஸ்இசட்5 மற்றும் எஸ்இசட்5 ஆல்க்ரிப் வேரியண்ட்களில் இந்த ஹேட்ச்பேக் கார் விற்பனை செய்யப்படவுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

மேற்கூறப்பட்ட சிறப்பம்சங்களுடன் இந்த அனைத்து வேரியண்ட்களும் 12 வோல்ட் ஹைப்ரீட் என்ஜினை பெற்றுள்ளன. இவற்றில் ஆரம்ப நிலை எஸ்இசட்-எல் வேரியண்ட்டில் ஏசி, பின்பக்கத்தை பார்க்க கேமிரா, அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் உடன் ரேடார் ப்ரேக் உதவி, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவிற்கான ஸ்மார்ட்போன் இணைப்பு உள்ளிட்டவை வழங்கப்படும்.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

இவை மட்டுமின்றி டிஜிட்டல் ஆடியோவை ஒலிபரப்பும் ரேடியோ, லெதர் ஸ்டேரிங் சக்கரம், பிரைவஸி கண்ணாடி, எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி தரத்தில் பின் பக்கத்தில் இணைப்பு விளக்குகள், மெருக்கூட்டப்பட்ட 16 இன்ச் அலாய் சக்கரங்கள் மற்றும் முன்பக்க எலக்ட்ரிக் ஜன்னல்கள் போன்றவற்றையும் 2021 ஸ்விஃப்ட்டின் ஆரம்ப நிலை வேரியண்ட்டில் சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

அடுத்த எஸ்இசட்-டி வேரியண்ட்டில் 16 இன்ச் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்திலும், வாகனத்தையோ அல்லது யார் ஒருவரையோ முன்பக்க கார் மோதுவதையும், குறிபிட்ட வேகத்திற்கு மேல், இயங்கும் பாதையில் இருந்து கார் பாதை மாறுவதையும், வளைந்து வளைந்து செல்லும் காரின் இயக்கத்தையும், ரிவர்ஸ் வரும்போது குறுக்காக வாகனம் வருவதையும் ஓட்டுனருக்கு தெரிவிக்கும் தொழிற்நுட்பங்களும் வழங்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

இவற்றுடன் ஓட்டுனரால் பார்க்க முடியாத பகுதிகளை காணும் வசதியும் ரிவர்ஸில் பார்க்கிங் செய்வதற்கு சென்சாரும் இந்த வேரியண்டில் வழங்கப்படவுள்ளன. எஸ்இசட்5 வேரியண்ட் கூடுதலாக நாவிகேஷன், 16 இன்ச் பாலிஷ்டு செய்யப்பட்ட அலாய் சக்கரங்கள், ஆட்டோமேட்டிக் ஏசி, கீலெஸ் எண்ட்ரீ மற்றும் ஸ்டார்ட், டெலிஸ்கோபிக் ஸ்டேரிங் சக்கரம் அட்ஜெஸ்ட்மெண்ட், பின்பக்க எலக்ட்ரிக் சன்னல்கள் மற்றும் டர்ன் இண்டிகேட்டர்களுடன் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகளை பெற்றுள்ளது.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

இவை மட்டுமில்லாமல் அனைத்து சக்கர ட்ரைவ் சிஸ்டத்தையும் இந்த வேரியண்ட் பெற்றுள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்விஃப்ட் ஒரு சாலிட் நிறம் மற்றும் 3 இரட்டை-நிறங்களுடன் 6 மெட்டாலிக் நிற தேர்வுகளுடனும் கிடைக்கிறது. இரட்டை-நிற தேர்வுகளில் கருப்பு நிற மேற்கூரையும் கூடுதல் தேர்வாக கிடைக்கிறது.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு கே12டி 1.2 லிட்டர் ட்யூல்ஜெட் ஹைப்ரீட், 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 81 பிஎச்பி மற்றும் 107 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 12.2 வினாடிகளில் எட்டிவிடும்.

ஐரோப்பிய சந்தைக்கான 2021 சுஸுகி ஸ்விஃப்ட் வெளியீடு! அடுத்த ஆண்டு அங்கு அறிமுகம்

சிவிடி கியர்பாக்ஸ் தேர்வு ஸ்விஃப்ட்டின் எஸ்இசட்-டி மற்றும் எஸ்இசட்5 வேரியண்ட்களில் மட்டும்தான் 2-சக்கர ட்ரைவ் சிஸ்டத்துடன் வழங்கப்படுகிறது. ஸ்விஃப்ட்டில் பாதுகாப்பு அம்சங்களும் வேரியண்ட்டை பொறுத்து வழங்கப்பட்டுள்ளன.

Most Read Articles
மேலும்... #சுஸுகி #suzuki
English summary
2021 Suzuki Swift revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X