ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி குறித்து சுஸுகி கார் நிறுவனம் சூப்பரான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி கார் நிறுவனம் இந்தியாவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஆஃப்ரோடு எஸ்யூவி மாடல் ஜிம்னி. மிக சரியான பட்ஜெட்டில் கிடைக்கும் அசத்தலான ஆஃப்ரோடு எஸ்யூவி மாடலாக பெயர் பெற்றிருக்கிறது.

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், சுஸுகி ஜிம்னி எஸ்யூவி பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. இதனால், இந்தியாவில் மிக விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

எனினும், தற்போது 3 கதவுகள் கொண்ட மாடலானது இந்திய மார்க்கெட்டிற்கு ஒத்துவராது என்ற நிலையில், 5 டோர் மாடலாக சுஸுகி ஜிம்னி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிகிறது.இந்த சூழலில், ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தியை ஜப்பானிலிருந்து முழுமையாக இந்தியாவுக்கு மாற்றுவதற்கு சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக எக்கனாமிக் டைம்ஸ் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

தற்போது சுஸுகி ஜிம்னி எஸ்யூவி ஜப்பானில் உள்ள கோசய் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் 3 டோர் மாடலானது குர்கான் ஆலையிலும், 5 டோர் மாடலானது மானேசர் ஆலையிலும் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

வரும் 2022-23ம் ஆண்டுக்குள் இந்த இரண்டு மாடல்களுக்கு உள்நாட்டு சப்ளையர்களிடம் இருந்து உதிரிபாகங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கு சுஸுகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இங்கிருந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கு சுஸுகி ஜிம்னி எஸ்யூவி ஏற்றுமதி செய்யப்படும்.

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

ஆண்டுக்கு ஒரு லட்சம் யூனிட்டுகளை இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கு சுஸுகி திட்டமிட்டுள்ளது. இதில், இந்தியாவில் 50,000 யூனிட்டுகளையும், 50,000 யூனிட்டுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜிம்னி எஸ்யூவி உற்பத்தி... சுஸுகி கார் நிறுவனம் எடுத்த சூப்பர் முடிவு!

சுஸுகி ஜிம்னி எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 130 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படும். ஜப்பானிலிருந்து இந்தியாவிற்கு சுஸுகி ஜிம்னி எஸ்யூவியின் உற்பத்தி மாற்றப்பட்டால், இது மேக் இன் இந்தியா திட்டத்திற்கு அதிக வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது.

Most Read Articles

English summary
Suzuki is planning to shift Jimny SUV production completely to India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X