அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் மாடலின் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் வேரியண்ட்டை தயாரிக்கும் பணியை ஏற்கனவே துவங்கிவிட்டது. இதனால் அல்ட்ராஸின் இந்த புதிய வேரியண்ட் கார் தற்சமயம் தீவிரமாக சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் சோதனையை கண்டுள்ள இந்த ஹேட்ச்பேக் மாடலை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

டாடா நிறுவனத்தில் இருந்து கடந்த ஆண்டு இறுதியில் முதன்முதலாக அல்ட்ராஸ் மாடல் ப்ரீமியம் ஹேட்ச்பேக்காக இந்தியாவில் சந்தைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் விரைவில் புதியதாக பெட்ரோல் வேரியண்ட்டை பெறவுள்ள இந்த காரின் ட்ரான்ஸ்மிஷன் தேர்விலும் கூடுதலாக டிசிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

தற்சமயம் விற்பனையாகி கொண்டிருக்கும் அல்ட்ராஸ் மாடலில் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வெளியாகியுள்ள இந்த புதிய பெட்ரோல் வேரியண்ட்டின் சோதனை ஓட்ட புகைப்படங்களில் காரில் புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள டிசைன் அப்டேட்கள் குறித்து எந்த தகவலையும் அறிய முடியவில்லை.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

சோதனை ஓட்ட காரின் முன்புற கண்ணாடியில் ஒட்டுப்பட்டுள்ள ஸ்டிக்கர், எக்ஸ்451 என்ற மாடலின் குறியீட்டு பெயரையும், 1.2 VGTC பிஎஸ்6 என என்ஜினின் தரத்தையும் வெளிப்படுத்துகிறது.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

இதன்மூலம் இந்த சோதனை காரானது, நிலையற்ற வடிவியலை கொண்ட 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பிஎஸ்6 என்ஜினின் உதவியால் இயங்கி வருவது தெரிய வருகிறது. இந்த என்ஜின் காருக்கு வழங்கும் ஆற்றல் அளவுகள் எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

கடந்த ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட டாடா அல்ட்ராஸ் மாடலில் இருந்த டர்போசார்ஜ்டு என்ஜின் அதிகப்பட்சமாக 100 பிஎச்பி பவரையும் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டதாக விளங்கியது.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

ஆனால் எப்படியிருந்தாலும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் விற்பனை மாடலில் இந்த புதிய என்ஜினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மேம்படுத்தி இருக்கும் என நம்பலாம். ஏற்கனவே கூறியதுபோல் கூடுதல் ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸையும் இந்த ஹேட்ச்பேக் மாடலின் டர்போ-பெட்ரோல் வெர்சன் கார் பெறவுள்ளது.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

இதனால் அல்ட்ராஸ் மாடலின் இந்த ஆற்றல் மிக்க வெர்சன் ஹூண்டாய் எலைட் ஐ20 டர்போ மாடலுடன் நேரடியாக போட்டியிட முடியும். டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் தயாரிக்கப்பட்டு வருகிறது.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

இதே ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்நிறுவனத்தில் இருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ள மைக்ரோ எஸ்யூவி மாடலான எச்பிஎக்ஸ் காரும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டமைப்பின் மூலம் 3.7 மீட்டரில் இருந்து 4.3 மீட்டர் வரையிலான நீளம் கொண்ட தயாரிப்பு மாடல்களை உருவாக்க முடியும்.

அல்ட்ராஸ் மாடலில் டர்போ பெட்ரோல் என்ஜினை கொண்டுவரும் டாடா மோட்டார்ஸ்..

மேலும் இந்த பிளாட்ஃபாரத்தின் மூலமாக வெவ்வேறான உடற் அமைப்புகளில், பெட்ரோல், டீசல், ஹைப்ரீட் மற்றும் எலக்ட்ரிக் என பல விதமான என்ஜின் தேர்வுகளை கொண்ட கார்களையும் தயாரிக்க இயலும். அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலின் இந்த புதிய டர்போசார்ஜ்டு வேரியண்ட்டின் இந்திய அறிமுகம் பண்டிக்கை காலமான ஆகஸ்ட்- அக்டோபர் மாதங்களில் இருக்கலாம்.

Source: Carwale

Most Read Articles
English summary
Tata Altroz 1.2 turbo-petrol variant spied testing
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X