நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதன் சிறந்த விற்பனை கார்களின் எக்ஸ்ஷோரூம் விலைகளை அதிரடியாக அதிகரித்துள்ளது. இந்த வகையில் விலை உயர்வை பெற்றுள்ள டாடா கார்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

டாடா அல்ட்ராஸ், இந்த 2020ஆம் ஆண்டின் துவக்கத்தில் ரூ.5.29 லட்சம் என்ற ஆரம்ப விலையுடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஹேட்ச்பேக் ரக கார். இதன் பெரும்பான்மையான வேரியண்ட்களின் விலைகள் தற்போது ரூ15 ஆயிரம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.

நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் இதன் டாப் வேரியண்ட்டான எக்ஸ்இசட்(ஒ)-வை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்ட்களும் ரூ.15 ஆயிரத்தை விலை உயர்வாக பெற்றுள்ளன. டாப் வேரியண்ட்டின் விலை மட்டும் ரூ.6,000 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

Altroz Petrol New Price Old Price Difference
XE ₹5,44,000 ₹5,29,000 ₹15,000
XM

₹6,30,000

₹6,15,000 ₹15,000
XT ₹6,99,000 ₹6,84,000 ₹15,000
XZ ₹7,59,000 ₹7,44,000 ₹15,000
XZ(O) ₹7,75,000 ₹7,69,000 ₹6,000
XE Rhythm ₹5,70,000 ₹5,54,000 ₹16,000
XM Style ₹6,64,000 ₹6,49,000 ₹15,000
XM Rhythm ₹6,69,000 ₹6,54,000 ₹15,000
XM R+S ₹6,94,000 ₹6,79,000 ₹15,000
XT Luxe ₹7,38,000 ₹7,23,000 ₹15,000
XZ Urban ₹7,89,000 ₹7,74,000 ₹15,000
நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

டாடாவின் இந்த விலை அதிகரிப்பு நடவடிக்கையினால் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.29 லட்சத்தில் இருந்து ரூ.5.44 லட்சமாக அதிகரித்துள்ளது. மேற்கூறப்பட்டவை அனைத்தும் அல்ட்ராஸின் பெட்ரோல் வேரியண்ட்களாகும்.

நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

டீசல் என்ஜினில் அல்ட்ராஸின் எண்ட்ரீ-லெவல் வேரியண்ட்டின் விலை எந்தவொரு விலை அதிகரிப்பையும் பெறவில்லை. இதனால் அதே ரூ.6.99 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் தான் விற்பனையை தொடரவுள்ளது. பெட்ரோல் வரிசையை போல் அல்ட்ராஸின் டீசல் வரிசை வேரியண்ட்களில் டாப் எக்ஸ்இசட்(ஒ) ரூ.6 ஆயிரத்தை தான் விலை அதிகரிப்பாக பெற்றுள்ளது.

Atlroz Diesel New Price Old Price Difference
XE ₹6,99,000 ₹6,99,000 0
XM ₹7,90,000 ₹7,75,000 ₹15,000
XT ₹8,59,000 ₹8,44,000 ₹15,000
XZ ₹9,19,000 ₹9,04,000 ₹15,000
XZ(O) ₹9,35,000 ₹9,29,000 ₹6,000
XE Rhythm ₹7,27,000 ₹7,24,000 ₹3,000
XM Style ₹8,24,000 ₹8,09,000 ₹15,000
XM Rhythm ₹8,29,000 ₹8,14,000 ₹15,000
XM R+S ₹8,54,000 ₹8,39,000 ₹15,000
XT Luxe ₹8,98,000 ₹8,44,000 ₹54,000
XZ Urban ₹9,49,000 ₹9,34,000 ₹15,000
நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

நடுவில் மற்ற மூன்று வேரியண்ட்களின் விலை ரூ.15 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவை தவிர அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரானது ரிதம், ஸ்டைல், ஆர்+எஸ், லக்ஸ், அர்பன் உள்ளிட்ட வெர்சன்களிலும் விற்பனையாகி வருகிறது. இவற்றின் விலை ரூ.3,000, ரூ.15,000, ரூ.16,000 என உயர்த்தப்பட்டுள்ளன.

நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

இதில் அதிகப்பட்சமாக எக்ஸ்இ லக்ஸ் டீசல் மாடல் சுமார் ரூ.54,000-ஐ விலை உயர்வாக ஏற்றுள்ளது. டாடா நெக்ஸானை பார்த்தோமேயானால், தயாரிப்பு நிறுவனம் இந்த காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளை ஏஎம்டி, ஆட்டோமேட்டிக் என ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் வழங்கி வருகிறது.

நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

அல்ட்ராஸை போல் வாடிக்கையாளர்கள் தனது விருப்பத்திற்கு ஏற்றாற்போன்று பெறுவதற்கான வெர்சன்கள் எதுவும் நெக்ஸானிற்கு வழங்கப்படாவிடினும் ட்யூல்-டோன் பெயிண்ட் தேர்வு கொடுக்கப்படுகிறது. தற்போதைய விலை அதிகரிப்பினால் இதன் எண்ட்ரீ-லெவல் எக்ஸ்இ பெட்ரோல் வேரியண்ட் இனி ரூ.6.69 லட்சம் என்ற விலையில் தான் விற்பனைக்கு கிடைக்கும்.

நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

Nexon PetrolPrice

Nexon Petrol Price
XE ₹6,99,900
XM ₹7,84,500
XMA ₹8,44,500
ZX ₹9,64,500
XZ+ ₹9,84,500
Z+ DT ₹10,24,500
XZA+ DT ₹10,24,500
XZA+ ₹10,44,500
XZ+ (O) ₹10,44,500
XZ+ DT (O) ₹10,54,500
XZA+ (O) ₹10,84,500
XZ+ (S) ₹11,04,500
XZ+ DT (S) ₹11,14,500
XZA+ DT (S) ₹11,34,500
XZA+ (S) ₹10,70,000
Nexon Diesel Price
XE ₹8,45,000
XM ₹9,20,000
XMA ₹9,80,000
ZX ₹10,20,000
XZ+ ₹11,00,000
XZ+ DT ₹11,20,000
XZA+ DT ₹11,80,000
XZA+ ₹11,60,000
XZ+ (O) ₹11,90,000
XZ+ DT (O) ₹12,10,000
XZA+ (O) ₹12,70,000
XZ+ (S) ₹11,60,000
XZ+ DT (S) ₹11,80,000
XZA+ DT (S) ₹12,40,000
XZA+ (S) ₹12,20,000

அதிகப்பட்சமாக பெட்ரோல் என்ஜினில் நெக்ஸானின் எக்ஸ்இசட்ஏ+ ட்யூல் டோன் ரூ.11.34 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் டீசல் வேரியண்ட்டின் ஆரம்ப விலை ரூ.8.45 லட்சமாக உயர்ந்துள்ளது. அதேபோல் டாப்-ட்ரிம் எக்ஸ்இசட்ஏ+ ட்யூல் டோன்(ஒ) ரூ.12.7 லட்சத்தை விலையாக ஏற்றுள்ளது.

நெக்ஸான், அல்ட்ராஸ் கார்களின் விலை ரூ.15,000 அதிகரிப்பு... நிறுவனத்தை சீர்படுத்தும் முயற்சியில் டாடா

ஆண்டுத்தோறும் மாறிவரும் இந்திய சந்தையின் நிலை, வாகன பாகங்களின் விலை மற்றும் பொருளாதார காரணிகளால் இந்த விலை அதிகரிப்பு கொண்டுவரப்பட்டுள்ளதாக டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எப்படியிருந்தாலும் இந்த விலை உயர்வு ஏற்கனவே இந்த கார்களை முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களை சிறிது பாதிக்கதான் செய்யும்.

Most Read Articles

English summary
Tata Nexon, Altroz prices increased from today – New Price List vs Old [Two Tables]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X