டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் டீசல் வேரியண்ட்களின் விலைகளை புதியதாக குறைத்து வெளியிட்டுள்ளது. அதனை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக உள்ள டாடா நிறுவனம் அல்ட்ராஸின் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான வேரியண்ட்களின் விலைகளையும் சமீபத்தில் ரூ.15 ஆயிரம் உயர்த்தியிருந்தது.

டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

இந்த நிலையில் தற்போது டீசல் ட்ரிம்களின் விலைகள் ரூ.40,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்பு அனைத்துமே அல்ட்ராஸ் டீசல் மாடலின் எக்ஸ்எம், எக்ஸ்டி, எக்ஸ்இசட், எக்ஸ்இசட்(ஒ) ட்ரிம்களுக்கு மட்டுமே.

டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

மற்றப்படி ஆரம்ப நிலை எக்ஸ்இ ட்ரிம்மின் விலையில் மாற்றமில்லை. அது அப்படியே ரூ.6.99 என்ற அளவில் தான் எக்ஸ்ஷோரூமில் உள்ளது. இந்த விலை குறைப்பினால் முன்பு ரூ.7.90 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வந்த எக்ஸ்எம் வேரியண்ட்டை இனி ரூ.7.50 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலேயே பெறலாம்.

டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

அதேபோல் எக்ஸ்டி ட்ரிம்மின் விலை ரூ.8.59 லட்சத்தில் இருந்து ரூ.8.19 லட்சமாகவும், எக்ஸ்இசட் ட்ரிம்மின் விலை ரூ.9.19 லட்சத்தில் இருந்து ரூ.8.79 லட்சமாகவும், டாப் ட்ரிம்-ஆன எக்ஸ்இசட்(ஒ)-வின் விலை ரூ.9.35 லட்சத்தில் இருந்து ரூ.8.95 லட்சமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலைகள் ரூ.5.44 லட்சத்தில் இருந்து ரூ.7.75 லட்சம் வரையில் உள்ளன. அல்ட்ராஸ் டீசல் மாடல்களில் 1.5 லிட்டர் டீசல் என்ஜினை டாடா நிறுவனம் பொருத்தி வருகிறது. 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படுகின்ற இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 90 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

பெட்ரோல் என்ஜின் தேர்வுடனும் இந்த ஹேட்ச்பேக் காரை டாடா நிறுவனம் சந்தைப்படுத்தி வருகிறது. இதன் காரணமாகதான் மற்ற நிறுவனங்களும் தங்களது ப்ரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் இரு விதமான என்ஜின் தேர்வுகளை கொண்டுவர திட்டமிட்டு வருகின்றன.

டாடா அல்ட்ராஸ் கார் கனவை நினைவாக்கும் நேரம் இது... டீசல் வேரியண்ட்களின் விலை ரூ.40,000 குறைப்பு...

இந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளுடன் எலைட் ஐ20 ஹேட்ச்பேக் காரின் மூன்றாம் தலைமுறையை களமிறக்கவுள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 மட்டுமின்றி, மாருதி சுஸுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ உள்ளிட்டவற்றின் விற்பனை போட்டியினையும் டாடா அல்ட்ராஸ் எதிர்கொண்டு வருகிறது.

Most Read Articles

English summary
Tata Altroz Diesel Price Cut by Rs.40,000. Read in Telugu.
Story first published: Monday, September 21, 2020, 16:58 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X