Just In
- 8 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 9 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 10 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 11 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
குடியரசு தின சம்பவம்... பட்ஜெட் நாளில் நாடாளுமன்றம் நோக்கி நடத்தவிருந்த விவசாயிகள் பேரணி ஒத்திவைப்பு
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய சாலைகளை இனி ஆளப்போவது எலெக்ட்ரிக் கார்கள்தான்... 2021ல் விற்பனைக்கு வரவுள்ள புதிய மாடல்கள்...
இந்தியாவில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் புதிய எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில், ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ் மற்றும் டாடா நெக்ஸான், மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி உள்ளிட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் கிடைத்து வருகின்றன.

ஆனால் இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் வாகனங்களின் புரட்சி தொடங்க ஆரம்பித்துள்ளது. எனவே வரும் காலங்களில், சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் அதிகரிக்கும்போது, பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்கள் அறிமுகமாகும். இந்த வகையில், அடுத்த ஆண்டு (2021) அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படும் எலெக்ட்ரிக் கார்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

1. டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் (Tata Altroz EV)
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது வரை, டிகோர் மற்றும் நெக்ஸான் என தனது 2 கார்களின் எலெக்ட்ரிக் வெர்ஷன்களை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வரிசையில் தனது மூன்றாவது எலெக்ட்ரிக் காரை களமிறக்க டாடா மோட்டார்ஸ் தயாராகி வருகிறது. தற்போது விற்பனையில் உள்ள ஐசி இன்ஜின் பொருத்தப்பட்ட அல்ட்ராஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் அது.

நடப்பாண்டு பிப்ரவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார் காட்சிக்கு வைக்கப்பட்டது. ஆனால் அதன் தொழில்நுட்ப விபரங்களை டாடா இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படும் இந்த காரின் பேட்டரியை ஒரு முறை நிரப்பினால், 300 - 350 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் (Mahindra e-KUV100)
கேயூவி100 எலெக்ட்ரிக் காரை, கடந்த 2018 ஆட்டோ எக்ஸ்போவில் மஹிந்திரா நிறுவனம் காட்சிக்கு வைத்தது. அப்போது கிட்டத்தட்ட தயாரிப்புக்கு ஏற்ற நிலையில் அந்த மாடல் இருந்தது. அதன்பின் நடப்பாண்டு நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தயாரிப்பு நிலை வெர்ஷனையே மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்தி விட்டது. இருந்தாலும் இந்த கார் இன்னும் விற்பனைக்கு கொண்டு வரப்படவில்லை.

மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் காரின் விலை கூட வெளியிடப்பட்டு விட்டது. இதன்படி 8.25 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக மஹிந்திரா கேயூவி100 எலெக்ட்ரிக் கார் உள்ளது. ஆனால் இன்னும் விற்பனைக்குதான் வரவில்லை.

எனினும் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பவன் கோயங்கா, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூறினார். இதன்படி பார்த்தால் வரும் பிப்ரவரி இறுதியில் இந்த கார் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் (Mahindra XUV300 Electric)
2020 ஆட்டோ எக்ஸ்போவில் எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் காரின் கான்செப்ட் மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்தது. அப்போதில் இருந்து இந்திய சந்தையில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் மஹிந்திரா கார்களில் ஒன்றாக எக்ஸ்யூவி300 உருவெடுத்துள்ளது. 2021ம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 350 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் வழக்கமான எக்ஸ்யூவி300 காருடன் வேறுபடுத்தி பார்க்கும் வகையில் டிசைனில் ஒரு சில மாற்றங்களும் செய்யப்படலாம்.

4. மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் (Maruti Suzuki Wagon R EV)
மாருதி சுஸுகி நிறுவனம் வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரை தற்போது இந்தியாவின் பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் சூழல்களில் சோதனை செய்து வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது, பல முறை கேமரா கண்களில் இந்த கார் சிக்கியுள்ளது. கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு கூட இந்த காரின் ஸ்பை படங்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ஆனால் டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் காரை போலவே, மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் விபரங்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும் 10 லட்ச ரூபாய் என்ற விலைக்குள் மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாக இது இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

5. வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் (Volvo XC40 Recharge)
வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் எலெக்ட்ரிக் கார் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு ஆக்ஸிலிலும் ஒன்று என 2 எலெக்ட்ரிக் மோட்டார்களை இந்த கார் பெற்றிருக்கும். இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 400 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும்.