க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

புத்தாண்டு பிறந்ததுமே டாடா அல்ட்ராஸ் கார் குறித்த ஒரு பெருமைபட வைக்கும் வைக்கும் செய்தி வந்திருக்கிறது. விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் டாடா அல்ட்ராஸ் கார் க்ராஷ் டெஸ்ட்டில் அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய மாடல்கள் வரிசையில் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலாக அல்ட்ராஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த கார் வரும் 22ந் தேதிதான் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

அன்றைய தினத்தில்தான் விலை அறிவிப்பு உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் வெளியிடப்படும். தற்போது டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பதிவும் நடந்து வருகிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

இந்த நிலையில்தான், டாடா அல்ட்ராஸ் காரின் மதிப்பை பன்மடங்கு கூட்டும் விதத்திலான இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது, குளோபல் என்சிஏபி அமைப்பு புத்தம் புதிய டாடா அல்ட்ராஸ் காரை மோதல் சோதனைக்கு உட்படுத்தி பாதுகாப்பு தரத்தை ஆய்வு செய்துள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

முன்புறம் மற்றும் பக்கவாட்டு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெரியவர்களுக்கான பாதுகாப்பு தரத்தில், 5க்கு 5 என்ற அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்று அசத்தி இருக்கிறது. அதாவது, அதிகபட்சமான 17 புள்ளிகளுக்கு 16.17 புள்ளிகளை பெற்று அசத்தி இருக்கிறது.

இந்த சோதனை முடிவில், டாடா அல்ட்ராஸ் காரின் முன்புறத்தில் ஓட்டுனர் மற்றும் பயணிக்கான தலை, கழுத்து, மார்பு பகுதி மற்றும் முழங்கால் பகுதிகளுக்கு போதிய பாதுகாப்பு கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

அத்துடன், டாடா அல்ட்ராஸ் காரின் பாடி ஷெல் எனப்படும் உடல்கூடு அமைப்பு மிகவும் வலிமையானதாக இருப்பதுடன், இதைவிட அதிக மோதல் தாக்கம் இருந்தாலும் தாங்கும் வலிமையை பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

சிறியவர்களுக்கான பாதுகாப்பு தர மதிப்பீட்டில் டாடா அல்ட்ராஸ் கார் மூன்று நட்சத்திரத்தை மட்டுமே பெற்று சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகபட்சமான 49 புள்ளிகளுக்கு 29 புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறது டாடா அல்ட்ராஸ் கார்.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

டாடா அல்ட்ராஸ் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலுமே டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், சீட்பெல்ட் ரிமைன்டர், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்கப்பட உள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

டாடா அல்ட்ராஸ் கார் ஆல்ஃபா கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் டாடா மோட்டார்ஸ் இம்பேக்ட் 2.0 டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, நவீன யுக கார் மாடலுக்கு உரிய பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பிஎஸ்6 பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

புதிய டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட பிரிமீயம் ஹேட்ச்பேக் கார்களுடன் போட்டி போடும்.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

விற்பனைக்கு வருவதற்கு முன்னதாகவே, டாடா அல்ட்ராஸ் கார் க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருப்பது வாடிக்கையாளர்களின் கவர்வதற்கு உதவும் என்பதுடன், பாதுகாப்பான கார் மாடலை தேர்வு செய்கிறோம் என்ற உணர்வையும் ஏற்படுத்தும்.

க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று அசத்திய டாடா அல்ட்ராஸ் கார்!

கடந்த ஆண்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மற்றொரு கார் மாடலான நெக்ஸான் எஸ்யூவி க்ராஷ் டெஸ்ட்டில் 5க்கு 5 என்ற அதிகபட்ச தர மதிப்பீட்டை பெற்ற இந்தியாவில் முதல் கார் என்ற பெருமையை பெற்றது. இதைத்தொடர்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய அல்ட்ராஸ் காரும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்று குளோபல் என்சிஏபி அமைப்பின் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் இரண்டாவது கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
Tata Altroz premium hatchback car has received 5 star rating in Global NCAP crash test results.
Story first published: Wednesday, January 15, 2020, 16:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X