புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி இருக்கும், புதிய டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளன. அதனை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அல்ட்ராஸ் என்ற பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மாடலை வரும் 22ந் தேதி விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களுக்கு போட்டியாக இந்த கார் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் சரியான விலையில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதால், இந்த கார் மீது வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் பற்றிய சில தகவல்கள் கசிந்துள்ளன. அதன்படி, டாடா அல்ட்ராஸ் கார் ரூ.5.5 லட்சம் முதல் ரூ.9.5 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தெரிகிறது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

அடுத்து, டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் பேலன்சர் சாஃப்ட்டுடன் வர இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலமாக, எஞ்சினில் உருவாகும் அதிர்வுகள் வெகுவாக குறைக்கப்படும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா அல்ட்ராஸ் காரில் பயன்படுத்தப்பட இருப்பது 3 சிலிண்டர் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் என்பது தெரிந்த விஷயம்தான். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா அல்ட்ராஸ் காரில் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டுமே வழங்கப்பட இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு இப்போதைக்கு இல்லை. அதேபோன்று, டீசல் எஞ்சின் தேர்வும் இருக்காது என்றே தெரிகிறுது.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா அல்ட்ராஸ் காரில் கருப்பு- சிவப்பு, சிவப்பு - வெள்ளை மற்றும் தங்க வண்ணத் தேர்வு கொண்ட மாடல்கள் ஏற்கனவே பொது பார்வைக்கு வந்துவிட்டன. சாம்பல் மற்றும் சில்வர் வண்ண கார்கள் இதுவரை கண்ணில் படவில்லை.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா அல்ட்ராஸ் காரில் சன்ரூஃப் ஆலையிலேயே அமைத்து கொடுக்கப்படாது என்றும் தெரிய வந்துள்ளது. விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு டீலரில் சன்ரூஃப் அமைப்பு செய்து கொடுக்கப்படும்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

டாடா டியாகோ காரில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின்தான் என்றாலும், இதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களுடன் வருகிறது. அதாவது, இந்த காரில் ஏர் ஃபில்டர் அமைப்பு எஞ்சினுக்கு மேல் புறத்தில் இல்லாமல் பேட்டரிக்கு அருகில் கொடுக்கப்பட இருக்கிறதாம்.

புதிய டாடா அல்ட்ராஸ் காரின் முக்கிய விபரங்கள் கசிந்தன!

அதேபோன்று, சிறப்பான ஃபயர்வால் என்ற வெப்பத் தடுப்பு அமைப்பையும் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மொத்தத்தில் இந்த காரை பார்த்து பார்த்து டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. அதேபோன்று, வாடிக்கையாளர் மத்தியிலும் அதிக வரவேற்பை பெறும் என்று நம்புகிறது.

Source: Team BHP

Most Read Articles
English summary
Tata Motors is gearing up to launch all-new Tata Altroz on Jan 22 and more details emerged on online now.
Story first published: Monday, January 13, 2020, 11:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X