பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

யாரும் நினைத்து பார்க்காத தரமான சம்பவத்தை டாடா அல்ட்ராஸ் கார் நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில், மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக டாடா மோட்டார்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. கியா, மஹிந்திரா, ரெனால்ட், ஹோண்டா, டொயோட்டா மற்றும் எஞ்சிய நிறுவனங்கள், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக உள்ளன.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

கடந்த நவம்பர் மாதம் மூன்றாவது இடத்தை பிடிப்பதற்கு டாடா மோட்டார்ஸ் மற்றும் கியா ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இரண்டு நிறுவனங்களும் இடையே விற்பனை எண்ணிக்கையில் சில நூறு கார்கள் மட்டுமே வித்தியாசம். எனினும் நூலிழையில் டாடா நிறுவனம் மூன்றாவது இடத்தை கைப்பற்றி விட்டது.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

கடந்த நவம்பர் மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 21,640 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 108 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் டாடா நிறுவனம் வெறும் 10,400 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் தற்போது விற்பனை அப்படியே இரு மடங்காக அதிகரித்துள்ளது.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

கடந்த நவம்பர் மாதம் இந்திய சந்தையில் கியா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 21,022. ஆனால் டாடா நிறுவனம் 21,640 கார்களை விற்பனை செய்துள்ளது. அதாவது கியா நிறுவனத்தை காட்டிலும் டாடா நிறுவனம் 618 கார்களை அதிகமாக விற்பனை செய்துள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கைக்கு அல்ட்ராஸ் மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளது.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார் என்ற பெருமையை அல்ட்ராஸ் பெற்றுள்ளது. டாடா அல்ட்ராஸ் கார் நடப்பாண்டு ஜனவரி மாதம்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த சமயத்தில் அதிகம் விற்பனையாகும் டாடா நிறுவனத்தின் காராக அல்ட்ராஸ் உருவெடுக்கும் என யாரும் நினைக்கவில்லை.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

மாருதி சுஸுகி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 போன்ற வலுவான போட்டியாளர்கள் இருக்கும் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் டாடா அல்ட்ராஸ் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பாதுகாப்பு என்ற விஷயத்தில், போட்டியாளர்களை டாடா அல்ட்ராஸ் தூக்கி சாப்பிட்டு விடும். இன்னும் சொல்லப்போனால், பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார் டாடா அல்ட்ராஸ்தான்.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

குளோபல் என்சிஏபி அமைப்பின் மோதல் சோதனைகளில், டாடா அல்ட்ராஸ் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்று, இந்தியாவிற்கு பெருமிதம் தேடி கொடுத்துள்ளது. அல்ட்ராஸ் காரின் விளம்பரங்களில் அதன் பாதுகாப்பைதான் டாடா நிறுவனமும் முன்னிலைபடுத்துகிறது. எனவே அதன் விற்பனை சிறப்பாக இருப்பதற்கு பாதுகாப்பு மிக முக்கியமான காரணமாக இருக்கலாம்.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

டாடா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 6,260 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. இது நடப்பாண்டுதான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கார் என்பதால், கடந்தாண்டு நவம்பர் மாதத்துடன் இதன் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது. கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில், நெக்ஸான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

கடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 6,021 நெக்ஸான் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 3,437 நெக்ஸான் கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது. இது 75.18 சதவீத வளர்ச்சியாகும். அல்ட்ராஸை போலவே நெக்ஸானும் பாதுகாப்பான கார்தான். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில், டாடா நெக்ஸான் காரும் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்றுள்ளது.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

இதன் மூலம் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற 2 கார்களை விற்பனை செய்யும் ஒரே இந்திய நிறுவனமாக டாடா திகழ்கிறது. பயணிகளின் பாதுகாப்பிற்கு டாடா எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ளலாம். இதற்கிடையே கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா கார்களின் பட்டியலில், டியாகோ மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

கடந்த நவம்பர் மாதம் 5,890 டியாகோ கார்களை டாடா விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 4,811 டியாகோ கார்களை மட்டுமே டாடா விற்பனை செய்திருந்தது. இது 22.43 சதவீத வளர்ச்சியாகும். 4வது இடத்தில் ஹாரியர் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 2,210 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 762 ஆக மட்டுமே இருந்தது. இது 190.03 சதவீத வளர்ச்சியாகும்.

பாதுகாப்பில் வேற லெவல்... தரமான சம்பவத்தை நிகழ்த்திய டாடா கார்... தகர டப்பாக்களுக்கு உள்ளூற உதறல்...

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாடா நிறுவன கார்களின் பட்டியலில் 5வது இடத்தில் டிகோர் உள்ளது. கடந்த நவம்பர் மாதம் டாடா நிறுவனம் 1,259 டிகோர் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் 765 டிகோர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் விற்பனையில் 64.58 சதவீத வளர்ச்சியை டிகோர் பதிவு செய்துள்ளது.

Most Read Articles
English summary
Tata Altroz Premium Hatchback Becomes No 1 Selling Tata Car - Details. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X