உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

இந்தியாவிற்கு பெருமை தேடி தந்ததுடன், உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா காரை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) கார், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இந்தியாவில் டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ள முதல் பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக கார் இதுதான்.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக ஏகப்பட்ட சிறப்பம்சங்களுடன் டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்துள்ளது. இது இந்தியாவிற்கு பெருமை தேடி தந்த பாதுகாப்பான கார்களில் ஒன்றாகும். ஆம், குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்திய க்ராஷ் டெஸ்ட்டில் டாடா அல்ட்ராஸ் 5 ஸ்டார்களை முழுமையாக பெற்றுள்ளது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

இதன்மூலம் குளோபல் என்சிஏபி அமைப்பு நடத்தும் மோதல் சோதனைகளில் 5 ஸ்டார்களை முழுமையாக பெறும் இரண்டாவது 'மேட் இன் இந்தியா' கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் பெற்றது. இதற்கு முன்பாக இதே டாடா நிறுவனத்தின் நெக்ஸான் கார், குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார்களை முழுமையாக பெற்றிருந்தது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

பாதுகாப்பு மட்டுமல்லாது, டிசைன், வசதிகள், இன்ஜின் பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து அம்சங்களிலும் டாடா அல்ட்ராஸ் கார் அசத்துகிறது. இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் டாடா அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் டாடா நிறுவனத்தின் ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த கார் கட்டமைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

டாடா அல்ட்ராஸ் காரில், எல்இடி டிஆர்எல்கள் உடன் ஹெட்லேம்ப், குரோம் பூச்சுக்களால் சூழப்பட்ட பிளாக் ரேடியேட்டர் க்ரில், டர்ன் இன்டிகேட்டர்களுடன் மின்னணு முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓஆர்விஎம்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இதன் பானெட் அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

மேலும் ரூஃப் ஸ்பாய்லர், எல்இடி டெயில்லேம்ப்ஸ், ரெஃப்லெக்டர்களுடன் அகலமான பின்பக்க பம்பர் ஆகியவற்றையும் டாடா அல்ட்ராஸ் கார் பெற்றுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் பேஸ் வேரியண்ட்களில், 165/80 டயர்களுடன் 14 இன்ச் ஸ்டீல் வீல்களும், டாப் வேரியண்ட்களில் 195/55 டயர்களுடன் புதிய 16 இன்ச் அலாய் வீல்களும் வழங்கப்பட்டுள்ளன.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

டாடா அல்ட்ராஸ் காரின் நீளம் 3,990 மிமீ ஆகவும், அகலம் 1,755 மிமீ ஆகவும், உயரம் 1,523 மிமீ ஆகவும் உள்ளது. அதே சமயம் இந்த காரின் வீல்பேஸ் 2,501 மிமீ ஆக இருக்கிறது. மேலும் 165 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை டாடா அல்ட்ராஸ் கார் பெற்றுள்ளது. இந்த காரின் பூட் ஸ்பேஸ் 345 லிட்டர்கள். அதே சமயம் 37 லிட்டர்கள் கொள்ளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

டாடா அல்ட்ராஸ் காரின் உட்புறத்தை பொறுத்தவரை புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. இதனை இதற்கு முன்பாக வேறு எந்த டாடா காரிலும் பார்த்தது இல்லை. மேலும் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல், ஏர் வெண்ட்களுடன் முழு ஆட்டோமெட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றையும் டாடா அல்ட்ராஸ் கார் பெற்றுள்ளது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

பாதுகாப்பை பொறுத்தவரை ட்யூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டிலேயே மிகவும் பாதுகாப்பான கார் டாடா அல்ட்ராஸ்தான். டாடா அல்ட்ராஸ் காருக்கு முன்பாக குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார்களை பெற்ற டாடா நெக்ஸான், காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும்.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

டாடா அல்ட்ராஸ் மற்றும் டாடா நெக்ஸான் ஆகிய கார்களை தவிர சமீபத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரும் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார்களை பெற்றது. ஆனால் இதுவும் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்தான். இந்த மூன்று மேட் இன் இந்தியா கார்கள் மட்டுமே குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் இதுவரை 5 ஸ்டார்களை முழுமையாக பெற்றுள்ளன.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

வேறு எந்த இந்திய காரும் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை முழுமையாக வசப்படுத்தியதில்லை. எனவே இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக காராக டாடா அல்ட்ராஸ் பெருமை பெற்றுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரில், பவர் விண்டோஸ், ஸ்மார்ட் கீ புஷ் பட்டன் ஸ்டார்ட், பார்க் அஸிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் இருக்கின்றன.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

டாடா அல்ட்ராஸ் காரில், பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையான 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இதுதவிர மற்றொரு இன்ஜின் ஆப்ஷனும் டாடா அல்ட்ராஸ் காரில் உள்ளது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

இது 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த கூடியது. இந்த இன்ஜின் உடனும் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்தான் வழங்கப்படுகிறது. அதே சமயம் இந்த இன்ஜினும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணக்கமானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

ஆனால் டாடா அல்ட்ராஸ் காரில், ஆட்டோமெட்டிக் அல்லது ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் தற்போதைக்கு கிடையாது. இது ஒன்று மட்டுமே டாடா அல்ட்ராஸ் காரின் சிறிய குறையாக உள்ளது. ஆனால் இந்த குறையும் வருங்காலத்தில் நிவர்த்தி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டாடா அல்ட்ராஸ் கார் XE, XM, XT, XZ மற்றும் XZ (O) ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கும்.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

இந்த சூழலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சில நாட்களிலேயே டாடா அல்ட்ராஸ் காரின் டெலிவரிகள் தொடங்கப்பட்டுள்ளன. டாடா அல்ட்ராஸ் காரின் டீசல் வேரியண்ட்களை காட்டிலும் பெட்ரோல் வேரியண்ட்களுக்குதான் அதிக டிமாண்ட் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா அல்ட்ராஸ் காரின் பெட்ரோல் வேரியண்ட்களின் விலை 5.29 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

அதே சமயம் டாடா அல்ட்ராஸ் காரின் டீசல் வேரியண்ட்களின் விலை 6.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. மிகவும் சவாலான விலையில், அட்டகாசமான வசதிகள் மற்றும் சிறப்பான பெர்ஃபார்மென்ஸை வழங்க கூடிய இன்ஜின்களுடன் வந்துள்ள இந்த பாதுகாப்பான காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

உலக நாடுகளை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த டாடா கார்... விலை தெரிந்தால் நீங்களும் வாங்கிடுவீங்க...

பொதுவாக மேட் இன் இந்தியா கார்கள் பாதுகாப்பு இல்லாதவை என்ற வாதம் சர்வதேச ஆட்டோமொபைல் துறையில் முன் வைக்கப்படுகிறது. ஆனால் டாடா அல்ட்ராஸ் போன்ற மாடல்கள் மட்டும் அரிதிலும் அரிதாக குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் ரேட்டிங்கை முழுமையாக பெற்று, இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதுடன், உலக நாடுகளையும் மூக்கின் மேல் விரல் வைக்க வைத்து வருகின்றன.

டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரை பொறுத்தவரை குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து பெற்ற இந்த 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் வாடிக்கையாளர்களை கவர கூடிய முக்கியமான விஷயமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
Tata Altroz Premium Hatchback Deliveries Begin In India. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X